முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறந்தை மணியன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 209

அறந்தை மணியன், ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்கள், 19. யாக்ஞ வல்கியர் பிற முனிவர்கள் விவாதங்கள், 20. யாக்ஞ வல்கியர் ஸ்மிருதி, 21. பரதநாட்டியம், 22. பிரம்மிக்க வைக்கும் உளவு நிறுவனங்கள், 23. உலகப் பெரும் போர்கள், 24. திரைப்படங்களான இலக்கியங்கள், 25. திரைப்படங்களான நாடகங்கள், 26. திரைப்படங்களில் யதார்த்தமும் மனமும் 27. மொழி மாற்றுப் படங்களின் வரலாறு. 28. வெள்ளி திரை வித்தகர்கள் 29. சின்னத்திரை வரலாறு, 30. தமிழ் முன்னோடிகள், 31. வலிமைக்கு மொழி பெயர்ப்பு நூல்).

இதுதவிர  ஐந்து நாடகங்கள் எழுதியுள்ளார்.

1. யார் குற்றவாளி?. 2. தீர்ப்பத் தள்ளி வைக்கப்படுகிறது. 3. பாசம் ஒன்றே போதுமே, 4. கதை சொல் வந்தேனே. 5. சண்டையாமி யுகே யுகே?
மேலும் 22 நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர் “இண்டோ சினி அப்ரசியேஷன் பவுண்டேஷன்" என்ற திரைப்படச் சங்கத்தை 1977இல் நிறுவினார். அந்த சங்கம் இன்று வரை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

இவரது பரவலாக கவனிக்கப்பட்ட நூல்
திரைச்சுடர்கள்




நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர்.
நாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்ததால் நாடக அனுபவம் நிறைந்தவர்களுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நாடகத்தில் நடித்த அனுபவத்தோடு திரைப்படங்களில் நடிக்கும்போது நீண்ட வசனங்கள் கொண்ட காட்சிகளிலும் அவர்களால் சோடைபோகாமல் மிளிர முடிந்தது.

இப்போதெல்லாம் எடுக்கப்படுகிற படங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. ஆனால், ஆரம்பகாலப் படங்களில் குணச்சித்திர நடிகர்களுக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கும் எதிர்மறைப் பாத்திரங்களுக்கும்கூட கதாநாயகர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதைக் களன்கள் அமைக்கப்பட்டன. அதற்குக் காரணம் முன்பு சொன்னதுபோல தமிழ்த் திரைப்படம் நாடகம் வழி வந்தது. ஒரு திரைப்படம் வெற்றிபெற கதையோடு கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்களின் ஆளுமையும் முக்கியமானதாக இருக்கிறது.

அப்படி இன்றைய தமிழ்த் திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்ற, அன்றைய கருப்பு&வெள்ளைக் காலப் படங்களின் ஆளுமைகளைப் பற்றியதுதான் இந்நூல். இது முழுக்கமுழுக்க நாடகம்&திரைப்படம், திரைப்படம்&நாடகம் என்று தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பற்றியது.

சரி, நாம் ஏன் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்? அவர்களை தெரிந்துகொள்வதால்தான் நமக்கு என்ன பயன்? ஆளுமை என்றால் என்ன? என்றெல்லாம் பல கேள்விகள் உங்கள் முன் எழலாம்! அதில் தவறில்லை. ஆனால், இந்த நூலை முதலில் வாசிக்க வேண்டியது நீங்கள்தான். இதை சொல்லக் காரணம் இது ஆளுமைகளைப் பற்றியது. எப்போது ஒருவன் கேள்வி கேட்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சிந்திக்கத் தொடங்குகிறான். சிந்திக்கத் தொடங்குகிறவன் வாழ்வின் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறான். எனவே, உங்கள் வாழ்க்கை வெற்றிக்கு, உங்கள் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு, வெற்றிபெற்ற ஆளுமைகளைப் பற்றிய இந்நூல் ஒரு கிரியாசக்தியாக, முன்னுதாரணமாக திகழும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை.

கொத்தமங்கலம் சீனுவிலிருந்து, பி.யு.சி., டி.ஆர்.ராஜகுமாரி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, டி.எஸ்.பாலையா என்று முத்தான பதினெட்டு திரைச்சுடர்களைப் பற்றிய இந்நூல், ஆளுமையாக திகழ விரும்புகிற ஒவ்வொருவரது கையிலும் தவழவேண்டிய நூல் இது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...