முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாமி கிரிஷ்

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 143 சாமி கிரிஷ் , இயற்பெயர் – சாமியப்பன் முத்துக்கிருஷ்ணன் . கவிஞர், குறும்பட இயக்குநர், திறனாய்வாளர், சிறார் சிறுகதையாளர். பிறப்பு - இடையாத்தி மேற்கு – நெய்வேலி. கரம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமுஎகச மாவட்டச் செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரம்பக்குடி கிளை செயலாளர். கவிஞர் ஸ்டாலின் சரவணனின் தேவதைகளின் வீடு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதன் பிறகு கவிதைகள் மீதான ஆர்வத்தால் எழுதத் தொடங்கினேன், என்கிறார். ஆனந்த விகடன், குங்குமம், கணையாழி, பேசும் புதிய சக்தி, காமதேனு, புரவி உள்ளிட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. துருவேறிய தூரிகைகள் , பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள் என்கிற இரு கவிதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார். துருவேறிய தூரிகை கவிதை நூலுக்காக தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் படைப்பூக்க விருது பெற்றவர். இவரது சிறார் சிறுகதையான கூர்ப்பி இவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த குறும்படமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது பெற்றது. ...

பூவை. எஸ். ஆறுமுகம்,

புதுக்கோட்டை எழுத்தாளர் – 142 பூவை. எஸ். ஆறுமுகம், புதுக்கோட்டை பூவை என்கிற கிராமத்தில் பிறந்தவர். இவர் ஏலக்காய் எனும் இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றி பிறகு பொன்னி இதழில் இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். பிறகு உமா இதழின் பொறுப்பாசிரியரானார். தமிழ்நாடு அரசு பரிசினை மூன்று முறை பெற்றவர். இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை . உமா இதழில் நாவல்களைத்  திறனாய்வு செய்துவந்தார். கல்கி முதல் அகிலன் வரை எனும் நூல் 1964 ஆம் ஆண்டு உமா பத்திரிக்கையில் தொடராக எழுதிய திறனாய்வுகளின் தொகுப்பு.  இந்நூலில் பத்து நாவல்களை ஆய்வுக்குட்படுத்தினார். கல்கியின் அலைஓசை, நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், ராஜம்கிருஷ்ணனின் மலையருவி, க.நா.சுவின் நளினி, ஆர். ஷண்முகசுந்தரத்தின் அறுவடை, கோவி. மணிசேகரனின் செம்பியன் செல்வி, அமரர் விந்தனின் பாலும் பார்வையும், மு. கருணாநிதியின் வெள்ளிக்கிழமை, அகிலனின் பாவை விளக்கு ஆகிய நூல்கள் அவை. ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை எனும் நூல் இவரது இரண்டாவது திறனாய்வு நூல். இந்நூலில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ...

புலவர் பங்களராயர்

புலவர் பங்களாராயர் திருமயம் தாலுகா காரையூரில் பிறந்தவர். இவரது காலத்தைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. கிழவன் சேதுபதி காலத்தவராக இருக்க வேண்டும். இவ்வூரின் மாரியம்மன் கோவிலுக்கு முன்புறமுள்ள கல்லில் இவர் தமிழ்புலவர்   என வடிக்கப்பட்டுள்ளார். கல்வெட்டில் இடம்பெற்ற ஒரே புதுக்கோட்டை புலவர் இவராகத்தான் இருக்கும்.  இவர் குறித்து புதுக்கோட்டை  கல்வெட்டு சாசனம் மற்றும் மயிலை  சீனி. வேங்கடசாமியின் சாசனச் செய்யுள் மஞ்சரி ஆகிய நூல்கள் பதிவு செய்துள்ளன. பங்களாராயர் எழுதிய நூல்கள், ஓலைச்சுவடிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் பெரும்புலவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆய்வுப்படுத்தப்பட வேண்டிய புலவர் இவர். இவர் குறித்து எழுதப்பட்டுள்ள சாசனம். சாசனச் செய்யுள் பாரார் தமிட்புலவன் பங்களராயன் பைம்பொற் சீரா ரகத்தின்பேர் செப்புங்கால்- ஏராருங் காராளர் கானார் வருங்கற்பக வீரரெனும் பேராளர் தம்முடைய பேர்.

அ.சந்திரபோஸ்

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 140 அ.சந்திரபோஸ் , முனைவர், உதவிப் பேராசிரியர், வரலாறு, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, பற்றிய ஆய்வுத் திறன் பெற்றவர். ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வரலாறு படித்து, அதே கல்லூரியில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற இவர், இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் 2001 -2002 ஆம் ஆண்டிற்கான இளநிலை ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செட்டிநாடு ஓவியங்கள் என்கிற தலைப்பில் ஆய்வு செய்த இவர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்ரைகள் எழுதியுள்ளார். தானவ நாட்டு வரலாறு , இவரது முதல் நூல். பாண்டிய காலத்து ஒரு கல்வெட்டு செயசிங்க குலகால வளநாட்டு தென்னச்சினத்துத் தானவநாடு , எனக் குறிப்பிட்டுள்ளது. தானவ நாடு என்பது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தின் ஒரு பகுதியும் தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி வட்டத்தி...

குளமங்கலம் ச.ராமசாமி

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 139 குளமங்கலம் ச.ராமசாமி, வடக்குப் புலவர் என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டவர். ஆலங்குடிக்கும் அருகில் குளமங்கலம் எனும் சிற்றூர். இவரது தந்தையார் தா.சத்துரு சங்காரவேல்சாமியும் புலவர். இவர் குளமங்கல் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் பக்திப் பாமாலை என்றொரு நூல் எழுதியுள்ளார். ராமசாமி இரு நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் வீசிய புயல், தன்னாண்மைத் தங்கம்மாள் காவியம். இவ்விரு நூல்களும் நாட்டுப்புற மெட்டான நொண்டிச் சிந்தில் பாடப்பட்ட காவியங்கள்.  தமிழ்நாட்டில் வீசிய புயல், எனும் இந்நூல் 1955 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வீசியுள்ளது. தற்போது வீசிய கஜா புயல் அளவிற்கு அப்புயலின் சீற்றம் இருந்திருக்க வேண்டும். இப்புயலினால் உண்டான பாதிப்புகளை 30 பாடல்களைக் கொண்டு பாடப்பட்ட நூல் இது. ஊருக்குள் அழித்திடுமாம் – வெள்ளம் ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம்! சீருகள் அழிந்திடுமாம் – கல்விச் செல்வங்கள் தழைக்கின்ற கலைக்கோயிலில் ஆறுகள் நுழைந்திடுமாம் – அதன் அருகிருந்த சோலைகளும் மரங்களுமே வேருகள் பிடுங்கிடுமாம் வெள்ளம் விழுங்கிவிட்ட நூல்களுக்கும் கணக்கில்...

யோகஸ்ரீ

புதுக்கோட்டை எழுத்தாளர் - 138 யோகஸ்ரீ ,  க.யோகஸ்ரீ. டைலர். விவேகானந்தா நகர், கீரனூரில் வசிக்கிறார். கண்மணி, ராணிமுத்து, பெண்மணி இதழ்களில் பிரசுரமாகும் கதைகளை வாசித்து கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். திருமணத்தில் ஒரு மறுமணம் , குறுநாவல் இவரது முதல் படைப்பு. பதிப்புரை ப. முத்துப்பாண்டியன், பாண்டியன்- புத்த  -அகம். குடும்பக் கதை. மாதவன்,  இராகவன் இருவரும் அண்ணன், தம்பிகள். மாதவனுக்கு பூமாதேவி என்கிற பெண் மணப்பெண்ணாக பேசி முடிக்கப்படுகிறாள்.  அவனுக்கு வேறொரு பெண்ணுடன் காதல். பெற்றோரின் கட்டாயத்தினால் திருமணம் செய்துகொள்ளும்  அவன் திருமணம் முடிந்த மறுநாள் மனைவியை விட்டுவிட்டு காதலியுடன் தலைமறைவாகிறான். பூமாதேவி தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள்.  அவளைத் தடுத்து நிறுத்தும் விஜயராகவன் அவளை அழைத்துவந்து தன் வீட்டில் தங்க வைக்கிறான். முதலில் அண்ணன் மனைவியென்று இடைவெளி காட்டும் அவனுக்கு அவள் மீது காதல் மலர்கிறது. அந்தக் காதல் மெல்ல திருமணத்தில் போய் முடிகிறது.  இருவரும் இணைகிறார்கள்.

ச.சிக்கந்தர் பாட்ஷா

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 137 ச.சிக்கந்தர் பாட்ஷா . அறந்தாங்கி .  வணிகத் தொழில் செய்கிறார். தற்போது இவரது வயது 70. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணக் கடமையை மேற்கொண்டவர். 2009 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டதன்  அனுபவமே இந்நூல்.  காணக் கண் கோடி வேண்டும் (கஅபா),   இவரது முதல் நூல். இந்நூல் எழுத இவருக்குப் பத்து ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.  பொருள் வளம், உடல் நலம் உள்ளவருக்கு ஹஜ் கடமை ஆகும். மற்றவர்களுக்குக் கடமை இல்லை என்கிறார். ஹஜ் என்றால் அது ஒரு எட்டாக் கனி, நாம் அதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். அது குறித்து ஏதும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இஸ்லாம் ஐந்து கடமைகளைப் போதிக்கிறது. கலிமா, தொழுகை,நோன்பு,ஜக்காத்து, ஹஜ். முதல் நான்கு கடமைகள் இறக்கும் வரை செய்துகொண்டிருக்க வேண்டும். ஐந்தாம் கடமை ஒரு முறை செய்ததும் அத்துடன் முற்றுப்பெற்று நன்மைகள் எழுதப்படுகிறது,  என்கிறார். புனித ஹஜ் பற்றி இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டேன் . அனை...

கோ.சாமிநாதன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -136 கோ.சாமிநாதன் ,  ஆசிரியர், புலவர். ஊர் மூட்டாம்பட்டி, வைத்தார்.  பூர்வீகம் அரியலூர் மாவட்டம் பாளையப்பாடி.  அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடியின் தொலைத்தூர கல்வி மையத்தில் ஆங்கிலத்துறை இளங்கலை மற்றும் முதுகலை பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு புதுக்கோட்டை நேரு யுவகேந்திராவில் பணியாற்றியுள்ளார். நூலகத்துறையில் பெரிய ஈடுபாடு கொண்டவரென்பதால் புதுக்கோட்டை வடக்கு ராஜா 3ஆம் வீதியில் எஸ்.ஆர். ரெங்கநாதன் பெயரில் தனிநபர் நூலகம் நடத்திக்கொண்டிருக்கிறார். இதற்கான வாடகையைத் தன் ஓய்வூதியத்திலிருந்து கொடுக்கிறார். இந்நூலகத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு நூல்களுக்கும் மேலுள்ளன. இவர் ஆறு நூல்கள் எழுதியுள்ளார். கர்மயோகி டாக்டர் சியாழி இராமாமிர்த அரங்கநாதன்,  Women sensibility in Anitha Desai Novel, சோர்வறியா உழைப்பாளி சாமிநாதன் இல்லையென்றால், அமிழ்தினும் இன்ப, வாசிப்பை நேசிப்போம் ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. வாசிப்பை நேசிப்போம் ,  என்கிற நூல் வாசிப்பின் அவசியத்தையும் நூலகப் பயன்பாடுகளைப் பற்றியும் பேசுகிறது. புத்...

ஏம்பல் ராஜா

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 135 ஏம்பல் ராஜா , இயற்பெயர் என்.பழனிவேல் ராஜா . MBBS, மக்கள் நல மருத்துவர். ஆவுடையார்கோவில் . கவிஞர், பத்திரிகையாளர், தமுஎகச கௌரவத் தலைவர்,  நவீன ஏகலைவன் இலக்கிய இதழின் ஆசிரியர், சமூகச் செயற்பாட்டாளர், ஏகலைவன் இலக்கிய_வட்டம், ஏகலைவன் இரவு பாடசாலை நடத்துகிறார். டாக்டர் ராஜா மருத்துவமனையின் வாயிலாக மக்கள் உடல்நலம் பேணுகிறார். சமூக மேம்பாட்டிற்குப் பெரிதும் காரணம் கல்வியே, கவிஞர் அறிவுமதி தலைமையிலான கவியரங்கத்தில் இவரது கவிதை முதல் பரிசு பெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்,  கவிக்குயில் விசாலி,..போன்றவர்களின் கரங்களால் பரிசுகள் பெற்றுள்ளார். அக்னிக்குஞ்சுகள் இவரது முதல் கவிதை நூல். அணிந்துரை கவிஞர் அறிவுமதி அவர்கள். என் இரவுகள் கவிதைகளால் விடுகின்றன. என் காயங்கள் கவிதைகளால் ஆறுகின்றன, என்கிறார் ஏம்பல் ராஜா. கரைகளைப் பிடித்துக்கொண்டே நதி பயணமாவதைப்போல் கவிதையினைப் பிடித்துக்கொண்டே நான் பயணமாகிறேன். அடிநெஞ்சில் கனன்றுகொண்டு என் உயிரின் ஆணிவேரையே எரித்ததால் இந்தக் கவிதைகளுக்கெல்லாம் நான் அக்னிக் குஞ்சுகள் என்று பெயரிட்டேன், என்கிறார். இத்தொகு...

ஆர்.எம்.வீரப்பன் (1926 -2024)

ஆர்.எம்.வீரப்பன் . இராம. வீரப்பன். திரைத்துறை, அரசியல், ஆன்மீகம், சமுதாயப்பணி, இலக்கியம் என பல்துறைகளில் சாதனை புரிந்தவர். மேனாள் அமைச்சர். உணவுத்துறை, செய்தித்துறை, சுற்றுலாத் துறை, அறநிலையத் துறைகளின் அமைச்சராக இருந்தவர். எம்.ஜி.ஆர் கழகம், கம்பன் கழகம்   நிறுவனர். நாடகக் கலைஞர். திரைப்படத் தயாரிப்பாளர். எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் நிர்வாகி.   சத்யா மூவிஸ் நிறுவனத்தின் முதலாளி. தஞ்சைப் பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக் கழகங்கள் உருவாக காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில உயர்க் கல்விக் கழகம் என்ற அமைப்பு இவர் கல்வி அமைச்சராக இருக்கையில் உருவாக்கப்பட்டது. எழுத்து சீர்த்திருத்தம் இவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவரது ஊர் வல்லத்திராக்கோட்டை. தற்போது சென்னையில் வசித்தபடி மக்கட்பணியாற்றுகிறார். எம்.ஜி.ஆர் யார் ? கயல் தினகரன் ஆர்.எம். வீரப்பனின் நண்பர். இவர் மறவன் மடல் பத்திரிகையின் பொறுப்பு ஆசிரியராக இருந்தார். இவர் வீரப்பனின் பிறப்பு, வளர்ப்பு , திரைப்படத்துறை அனுபவங்கள் குறித்து ரிக்ஷாக்காரன் (1971) திரைப்படம் எடுத்தது வரைக்குமான அனுபவங்களை தொகுத்து வெளியிட...

சு.கிருஷ்ணமூர்த்தி

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 133 சு.கிருஷ்ணமூர்த்தி , பிறப்பு - அன்னவாசல்,  புதுக்கோட்டை. சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சாகித்ய அகாடமி விருதாளர், சென்னை, கல்கத்தா, டெல்லி எனப் பெருநகரங்களில் தணிக்கைத்துறை  அதிகாரியாக பணியாற்றியவர்.  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்து, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ்,சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், செருமானிய மொழிகளில் தேர்ந்தவர். சென்னையில் ஒன்றிய  அரசின் கீழ் தணிக்கைத்துறை அதிகாரியாக  பணியாற்றி கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார்.  அப்போது வங்காளம் மொழியைக் கற்றுக்கொண்டவர் தமிழ்ப் படைப்புகளை வங்காள மொழிக்கும் வங்கப் படைப்புகளைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார். வங்காள மொழியிலிருந்து  36 நூல்களைத் தமிழுக்குக் கொடுத்துள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை தமிழிலிருந்து  வங்காள மொழிக்கு  ரக்த போன்யா என்கிற பெயரில் மொழியாக்கம் செய்து, அதற்காக  வங்காள மொழிப்பிரிவில் சாகித்ய அகாதமி விருது பெற்றார். இதுதவிர சிலப்பதி...