முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்னராட்சிக்கு முந்தைய கால வரலாற்றை எழுதியவர்

புதுக்கோட்டையை எழுதியவர்கள் வரிசை - 03 (புதுக்கோட்டை எழுத்தாளர் - 233)  டாக்டர் வீ.மாணிக்கம் , புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பணியாற்றியவர். வரலாற்றுத் துறை. இவரது மணி விழா காலத்தையொட்டி, " புதுக்கோட்டை வரலாறு " எனும் இந்நூலைப் படைத்துள்ளார். இவர் எழுதிய மற்றொரு முக்கியமான நூல் கொங்கு நாடு. வரலாறு என்பது மன்னர்களின் வரலாறு அல்ல, இனக்குழுக்களின் இடம் பெயர்வு வரலாறு எனும் கருத்தியலோடு ஒத்துப்போகிறவர். இனக்குழுச் சமுதாயத்தின் சிதைவடையும் போக்கே இந்திய வரலாறு எனும் கருத்தியல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தாபரின் இனக்குழுச் சமுதாயத்திலிருந்து அரசு எனும் நூலில் இக்கருத்தியல் மெய்ப்பிக்கப்பட்ட போதிலும் வரலாற்று ஆய்வுகளில் இது இன்னும் தீர்க்கமாக எதிரொலிக்கவில்லை. இனக்குழுச் சமுதாயத்தின் எச்சங்கள்  இன்றும் செறிவாகக் காணப்படும் புதுகைப் பகுதியின் ஆய்விற்கு இக்கருத்தியல் நன்கு பொருந்தும் என்கிறார், இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர். மேலும் இவர் ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டின் குறுநிலப் பரப்புக்களின் வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது என்கிறார். புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிப...

புதுக்கோட்டை வரலாறு முதலில் எழுதியவர்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 232 புதுக்கோட்டை சமஸ்தானம் 1686 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தத் தொடக்கம் வரலாறு எழுதியவர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. புதுக்கோட்டை சமஸ்தானம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் தனியரசாக இயங்கியது. அதேநேரம் 1800 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சமஸ்தானத்தின்  காவல், இராணுவம், நிதி மற்றும் நிர்வாகம்  திருச்சிராப்பள்ளியை  மையமாகக் கொண்டு பிரிட்டிஷார் ஆளுகையின் கீழ் இருந்தது. புதுக்கோட்டையைப் பிரிட்டிஷார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் உள்ளடங்கிய பகுதியாக நிர்வகித்தது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வந்து செல்ல தனி நுழைவு அனுமதி சீட்டுகள் இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷாரின் திருச்சி  மாவட்ட நிலவரைப்படத்தில் புதுக்கோட்டை உள்ளடங்கிய பரப்பாகவே வரையப்பட்டுள்ளது. எப்.ஆர்.ஹெமிங்வே எனும் ஆங்கிலேயர் 1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் THE LIBRARY OF THE UNIVERSITY OF CALIFORNIA LOS ANGELS எனும் பிரிட்டன் நிறுவனம்  பிரிட்டிஷார் ஆளுகையின் கீழுள்ள தென்னிந்தியா குறிப்பாக மெட்ராஸ் மாகாண மாவட்டங்களின் வரலாறை ஓலைச்சுவடி மற்றும் பிற ஆதார குறிப்புகளைக...

புதுக்கோட்டையை முதலில் ஆவணப் படுத்தியவர்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -231 வில்லியம் ப்ளாக்பர்ன் புதுக்கோட்டை வரலாறு குறித்து எழுதுகையில், வாசிக்கையில், தேடுகையில் பிளாக்பர்ன் என்கிற பெயரைத் தவிர்த்துவிட்டு புதுக்கோட்டை வரலா ற் றை உள்வாங்க முடியாது. யார் இந்த பிளாக்பர்ன்?   புதுக்கோட்டை வரலாற்றில்   ப்ளாக்பர்ன் எனும் பெயரில் இருவர்   இடம் பெறுகிறார்கள். ஒருவர் சர். வில்லியம் ப்ளாக்பர்ன் , மற்றொருவர் ஜான் ப்ளாக்பர்ன் . முன்னவர் தஞ்சாவூரில்   ஆங்கிலேய அரசின் ரெசிடெண்ட் அதிகாரியாக இருந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாக குழறுபடியால் கலகமும் கலவரமும் நிகழ்ந்தேறியது. அப்பொழுது புதுக்கோட்டையின் பொறுப்பு ரெசிடெண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். புதுக்கோட்டைக்கு ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட முதல் ஆங்கிலேய அதிகாரி இவர். புதுக்கோட்டையுடன் தொடர்புடைய இவரது காலம் பிப்ரவரி 1807 முதல் ஆகஸ்ட் 6, 1809. பிறகு மார்ச்5, 1810 முதல் மார்ச் 3, 1823. இடைப்பட்ட காலத்தில் கேப்டன் புட்லர் பொறுப்பு அதிகாரியாக இருந்திருக்கிறார். ஜான் ப்ளாக்பர்ன் எனும் அரசியல் பிரதிநிதி. ஜான் ப்ளாக்பர்ன் என்பவர் யார்? இவர் வில்லியம் ப்ளாக...

தயானந்த சந்திரசேகரன்

புதுக்கோட்டை எழுத்தாளர் – 230 தவத்திரு. தயானந்த சந்திரசேகரன் , திலகவதியார் திருவருள் ஆதினம். திலகவதியார் திருவருள் ஆதீனச் செய்திமடல் , எனும் பத்திரிகையின் ஆசிரியர். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! என்கிற வாசகத்துடன் வெளிவந்த இதழ் இது.  இவர் முதல் பெண் ஆதீனமாக திகழ்ந்த திலகவதியார் திருவருள் ஆதீனம் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி யின் வளர்ப்பு பிள்ளையாவார். தனது அக்கா பேரனான இவர், அன்னையிடத்தில் நான்கு வயதிலிருந்து வளர்ந்து வந்தவர். இளம் நிர்வாகவியல்,கணினி முதுகலை பட்டம் பெற்றவர். 1998 ஆம் ஆண்டு அன்னையார் இறைவனது நிழலடி அடைந்த பிறகு திலகவதியார் திருவருள் ஆதீனம் பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வருகிறார். அன்னையின் பெயரால் நினைவு பொது நூலகம் நடத்தி வரும் இவர் ஆண்டுதோறும் முதல் பெண் மருத்துவர் டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள் விழாவில் ஏழைப் பெண்களுக்கு உதவி செய்துவருகிறார். இவர் எழுதிய நூல்கள் மாதர்குல மாணிக்கம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் . சிலம்பு ஒலிக்கும் சிந்தனைகள் திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள் ஒரு பெண் துறவியின...

சா. சீனிவாசன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 229 கவிஞர் சா. சீனிவாசன் , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை மேலாளராகப் (ஊராட்சி வளர்ச்சி) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஊர் - பொன்னமராவதி . இவர் இயற்றிய நூல் - குமரமலை தலவரலாறு – பாமாலை. இந்நூலைத் தெய்வீகப் பேரவை எனும் அமைப்பு வெளியிட்டது. இந்த பேரவை அரசு அலுவலர்கள் அமைப்பு. நூல் ஒரே வருடத்தில் இரண்டு பதிப்புகள் கண்டிருக்கின்றன. முதற்பதிப்பு – 01.01.1984, இரண்டாம் பதிப்பு – 15.05.1984. அச்சிட்டோர் – மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை. குமரமலை, திருப்புல் வயலில் வாழ்ந்த குருபாததாசரால் இயற்றப்பட்ட குமரேச சதகம் என்ற பாடல் பெற்ற சிறப்புடைய திருத்தலம். இத்தலத்தின் அருமை பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் மக்கள் அறிந்துகொள்ள ஏற்றதொரு நூல் உடனடித் தேவை என்பதை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் திரு. எஸ்.டி.காசிராஜன் இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்நூலை தான் இயற்றியதாக இந்நூலின் ஆசிரியர் சா.சீனிவாசன்  முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் வெளிவருகையில் எஸ்.டி.காசிராஜன் சென்னை போக்குவரத்து ஆணையராகப் பதவி உயர்வு பெற்று விடைபெற்றார். இ...

ஸ்ரீ சதாசிவா ஐயர்,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 229 ஸ்ரீ சதாசிவா ஐயர் , சமஸ்கிருத அறிஞர். மன்னர்  விஜய ரகுநாத ராய தொண்டைமான் அவர்களின் குரு. இவர் மூன்று  முக்கிய சமஸ்கிருத நூல்களான பிரம்ம ஸூத்திரம், யோக ஸூத்திரம், ஆத்ம வித்யம் எனும் மூன்று நூல்களுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்கள்  1. பிரம்ம சூத்திர விருத்தி 2. யோகசூத்திர விருத்தி 3. ஆத்மவித்ய விலாசம். ஆதாரம் - MANUAL OF THE PUDUKKOTTAI STATE

புதுக்கோட்டையின் கையேடு தொகுதி -II, பாகம் -I

  முந்தைய பதிவின் தொடர்ச்சி புதுக்கோட்டையை மிக நீண்ட வரலாறாக எழுதியவர் கே.ஆர். வெங்கடராம ஐயர் , B.A,L.T,M.R.A.S, இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியுடன் ஒருங்கிணைந்திருந்த  உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆண்டு -1935. புதுக்கோட்டை வரலாறு பலர் எழுதியிருந்தாலும் மிக நீண்ட வரலாறாக எழுதியவர். இவர் எழுதிய வரலாறு  மூன்று பெரும் தொகுதிகளாக வெளிவந்தன. 1. A  MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I ) 2.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART I ) 3.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART II ) தொகுதி -II, பகுதி -I MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART I ) இந்நூலின் பெரும்பகுதி புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள் குறித்து பேசுகிறது. இந்நூலின் திருத்தப்பட்ட பதிப்பு -1940. மறுபதிப்பு -2002. இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் முனைவர் ஆர். கண்ணன் இ.ஆ.ப. அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை ஆணையர். சர் வில்லியம் பிளாக் பர்னர் எடுத்த முயற்சியின் பேரில், கி.பி 1813 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத...

பண்டிட் ஆர். உலகநாதபிள்ளை

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 228 பண்டிட் ஆர். உலகநாதபிள்ளை, ( POET LAUREATE ) பல்கலைக் கழக வித்வான், புதுக்கோட்டை. இவரது ஊர், பிறப்பு பற்றிய தகவல் தெரியவில்லை. புதுக்கோட்டை அன்றைய மகாராஜா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். இந்நூலுக்கு ராணியார் பள்ளியின் தமிழ் பண்டிட் ஆர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அணிந்துரை தந்திருப்பதும் இந்நூலை புதுக்கோட்டை கமலா ப்ரஸ் அச்சிட்டு வெளியிட்டிருப்பதையும் கொண்டு பார்க்கையில் புதுக்கோட்டையுடன் நெருங்கி தொடர்பு கொண்டிருப்பது தெரிகிறது. இந்த நூல் வெளியான ஆண்டு – 1936. வெளியீடு -  கமலா ப்ரெஸ்,  புதுக்கோட்டை  இவர் ஐந்து நூல்கள் எழுதியுள்ளார் 1.    திருவாலவாய் துயரறு பதிகம் 2.    புள்ளிருக்கும் வேளூர் நோயறு பதிகம் 3.    திருப்புகலூர் மிடியறு பதிகம் 4.    திருமறைக்காடு அறிவுறுபதிகம் 5.    திருத்தில்லை வீடுறுபதிகம் இந்து ஐந்து நூல்களின் தொகுப்பு  நூல் ‘ஐங்குறு வேண்டுகோள்’ இந்நூலுக்கு நூலுக்கு நூலாசிரியர் இவ்வாறு முன்னுரை எழுதியுள்ளார். அட...