முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டையை எழுதியவர்கள் வரிசை - 05

புதுக்கோட்டைக்குள் எழுதப்பட்ட முதல் வரலாறு புதுக்கோட்டை எழுத்தாளர் - 235 எஸ்.இராதாகிருஷ்ண ஐயர் , பி.எ. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கும் அருகில் சூலமங்கலம் எனும் ஊரைச் சார்ந்தவர். 1918- 19 ஆம் ஆண்டுகளில் கல்லூரியின் முதல்வராக இருக்கையில் புதுக்கோட்டை மாநிலம் பொது வரலாறு  எழுத அன்றைய சமஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொள்ள, A GENERAL HISTORY OF THE PUDUKKOTTAI STATE BY S. RADHAKRISHNA  AIYAR, B.A Late Principal of H.H.The Maharajah`s College, Pudukkottai எனும் தலைப்பில் இந்நூலை எழுதினார். இந்நூல் புதுக்கோட்டை தர்பார் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1916 ஆம் ஆண்டு ஸ்ரீ பிரகதம்பா ஸ்டேட் பிரஸ்,புதுக்கோட்டை வழியே இந்நூல் வெளிவந்தது. முன்னுரை செய்தி ஸ்பெயின் நாட்டில் மாஞ்சனரிஸ் என்றொரு நதி ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மாட்ரிட் எனுமிடத்தில் ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள்.  அந்தப் பாலத்தைப் பார்வையிட பயணிகளில் இருவர் இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். ஒருவர் சொல்கிறார், " பாலங்கள் இல்லாத ஆறுகளை ந...

ஷேக்ஸ்பியர் வரியைக் கொண்டு எழுதப்பட்ட புதுக்கோட்டை வரலாறு

புதுக்கோட்டையை எழுதிய நூல்கள் வரிசை -04 ஷேக்ஸ்பியர் இயற்றிய நாடகங்களில் ஒன்று ரிச்சர்ட் -II. அந்த நாடகத்தில் ஓரிடம், தயவுசெய்து நாம் அனைவரும் தரையில் அமர்ந்து அரசர்களின் சோகமான மரணங்களை குறித்து பேசுவோம். வஞ்சகத்தால் வீழ்ந்தார்கள், வாளினால் போரில் மாண்டார்கள். துரோகம் செய்து அவர்கள் கொன்றவர்களின் ஆவியால் அலைக்கழிக்கப்பட்டார்கள். சிலர் மனைவியால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள், இன்னும் சிலரோ தூங்கும் போது கொல்லப்பட்டார்கள். அனைவரும் மாண்டு போனார்கள். ஒரு மன்னனின் தலையை அலங்கரிக்கும் வெற்று மணிமகுடம் மரணத்தையும் அவன் அரசவைக்கு கூட்டி வரும். மரணம் அரசவையில் அமர்ந்து மன்னனின்  ஜம்பத்தை எள்ளி நகையாடும். நாடகத்தின் சில காட்சிகளுக்கு மூச்சு விட அனுமதிக்கும், ராஜ்ஜியங்களைக் கைப்பற்று, பயத்தை பிறருக்கு பரிசாக்கு,  உன் தோற்றத்தால் பிறருக்கு மரண பயத்தை கொடு என்று அகந்தையினாலும் கர்வத்தினாலும் ஒரு அரசனுக்கு போதை ஏற்றும். "ஏதோ, இவனின் ஆவியை பாதுகாக்கும் சுவராகிய தசை மட்டும் வெண்கலத்தால் ஆனது போல எண்ணி வாழ்கிறானே" என்று எள்ளி நகையாடும். அந்தோ கடைசியில் வந்தது கோட்டைச...

புதுக்கோட்டை வரலாறு தொகுதி - II பகுதி - II

தொகுதி - II பகுதி - II புதுக்கோட்டையை மிக நீண்ட வரலாறாக எழுதியவர் கே.ஆர். வெங்கடராம ஐயர் , B.A,L.T,M.R.A.S, இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியுடன் ஒருங்கிணைந்திருந்த  உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆண்டு -1935. புதுக்கோட்டை வரலாறு பலர் எழுதியிருந்தாலும் மிக நீண்ட வரலாறாக எழுதியவர். இவர் எழுதிய வரலாறு  மூன்று பெரும் தொகுதிகளாக வெளிவந்தன. 1.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I ) 2.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART I ) 3.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART II ) இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலத்தில் வெளிவந்தாலும் மறுபதிப்பாகவும் திருத்தப்பட்ட பதிப்பாகவும் வெளிவந்த ஆண்டு -  2002 . MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART II ) இந்நூல் முதல் பதிப்பு வெளியான ஆண்டு – 1944. மறுபதிப்பு - 2002 இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் முனைவர் ஆர். கண்ணன் இ.ஆ.ப.  இந்நூல் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட தாலுகா  ஊர்களையும் அதன் அமைவிடங்கள் பற்றியும் பதிவு செய்துள்ளது. ஆ...