முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அ. அமீர்பாட்சா,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 192 அ. அமீர்பாட்சா , அறந்தாங்கி. பிறப்பு - தஞ்சாவூர் மாவட்டம் , பேராவூரணி அடுத்த பூக்கொல்லை . தற்போது அறந்தாங்கியில் வசித்து வருகிறார். இளங்கலை சமூகவியல் படித்தவர். ஆன்மீகவியல் மற்றும் தத்துவவியலில் குறித்து உரையாற்றுவதில் விருப்பம் கொண்டவர். மதங்களும் மானுடமும் எனும் இந்நூல் இவரது முதல் படைப்பு.  நான்கு தலைப்புகளின் கீழ் மதம் மதம் சார்ந்த கற்பிதங்களை அலசுகிறார். 1.பகவத் கீதையும் கீதையை விமர்சிக்கும் மறுப்பக்கம் நூலுக்கு மறுப்புரையும், 2.இஸ்லாமிய மதமும் அதன் தத்துவ இயலும், 3.புத்தம் ஒரு புதிர்,  4.பின்னுரையில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் பற்றிய சில கருத்துக்கள். உலகம் எப்படி இயங்குகிறது,  என்று ஆராயாமல் உலகை இயக்குவது யார்? அதன் அடிப்படை என்ன? என்று ஆராய்ந்ததன் விளைவுதான், மானுடர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது. மனிதன் என்பவன் இப்போது என்னவாக உள்ளானோ,  அது அல்ல. இப்போது என்னவாக இல்லையோ, அதுதான் - போன்ற கருத்தியல்களால் இருத்தலியல் கோட்பாடுகளை விளக்குகிறார். கிரேக்க இதிகாச கதையில் ஸிஸிஃபஸ் எனும் கதாபாத்திரத்தைக் கொண்டு மனித வாழ்வு ...

ஜெனா

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 191 ஜெனா , இயற்பெயர் ஆர். ஜெனார்த்தனன் . பிறப்பு கும்பகோணம். வசிப்பு - இராஜகோபாலபுரம் புதுக்கோட்டை. பொருளியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.   கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தடம் பதித்தார். இவரது வாழ்வின் தாகம், வாழ்வைத் தேடி ஆகிய கவிதை நூல்கள் பெரும் வரவேற்பையும் பலரின் பாராட்டையும் பெற்றன. காலத்தின் கர்ப்பத்தின் தினம் தினம் நிகழும் அற்புதங்களை ஆழ்ந்த மனிதாபிமானத்தோடு வியக்கத்தக்க வகையில் அழகிய கதைகளாக வடித்தவர்.  சிறுகதைகள் துளிர் எனும் இத்தொகுப்பு டிசம்பர் 1991 இல் வெளியானது.இந்நூலுக்கு அணிந்துரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரி  இந்தித்துறைத் தலைவர் டாக்டர் என்.ஸ்ரீதரன். இந்நூலுக்கான முன்னுரையில் ஒரு படைப்பாளிக்கு நான்கு முக்கிய குணாதிசயங்கள் இருக்க வேண்டுமென கூறுகிறார். 1. ஒரு படைப்பாளி மென்மையான உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். 2. அந்த நுண் உணர்வுகளை அவன் போற்றி வளர்ப்பவனாக இருக்க வேண்டும் 3. அவன் வளர்த்துக்கொண்ட ...

நா. முத்துநிலவன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 190 நா. முத்துநிலவன், இயற்பெயர் - முத்துபாஸ்கரன். பிறப்பு பட்டுக்கோட்டை.  34 ஆண்டுகள் தமிழாசிரியராக புதுக்கோடடையில் பணியாற்றி நிறைவு பெற்றவர்.  மச்சுவாடி சீனிவாச நகர் மூன்றாம் வீதியில் வசித்து வருகிறார். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர்.  கணினி தமிழ்ச்சங்கம் நிறுவியவர்.  #வீதி கலை இலக்கிய களத்தின் மூலமாக தொடர் இலக்கியப் பங்களிப்புகள் செய்துவருகிறார். 2015 ஆம் ஆண்டு வலைப்பதிவர் எழுத்தாளர்களைக் கொண்டு வலைப்பதிவர் மாநாடு நடத்தினார். புதுக்கோட்டையில் தமுஎச  கிளையைத் தொடங்கி முதல் செயலாளராகவும் பிறகு மாவட்டச் செயலாளராகவும்  களப்பணியாற்றியவர். புதுக்கோட்டை அறிவொளி இயக்கம் செயலாற்றிய காலத்தில் இவர் எழுதிய ' சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி ' என்கிற பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்ததுடன் பெண்கள் பலரைச் சைக்கிளோட்ட வைத்தது. மேலும் இப்பாடல் பல மொழிகளில் மொழியாக்கம் பெற்றது. கணினி தமிழ்ச்சங்கம் நிறுவியவர்.  வீதி கலை இலக்கிய களத்தின் மூலமாக தொடர் இலக்கியப் பங்களிப்புகள் செய்துவருகிறார்.  சிறுகதையாளர், பட்டிமன்றப் பேச்ச...

ஆலங்குடி கவி நலமுடையார்,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 189 ஆலங்குடி கவி நலமுடையார், இவரது இயற்பெயர் ம.ஆ.ஆரோக்கியசாமி ,  ஆலங்குடிக்கும் அருகில் கோட்டைக்காடு பங்கைச் சார்ந்த கன்னியான்கொல்லை . ஓமியோபதி மருத்துவர். பேச்சாளர். கதை, கட்டுரை , கவிதை , நாடகம் என பல் துறைகளில் சிறந்து விளங்கியவர். அமுதசுரபி,  கலைமகள், நம்வாழ்வு,  வேளாங்கண்ணி குரலொலி ஆகிய இதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆரோக்கியம் தாத்தாவின் ஊர் வம்பு எனும் தொடர் கட்டுரை நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் ஆலங்குடி அரசு பொது நூலக வாசகர் வட்டத் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றி நூலகத்திற்குச்  சொந்தக் கட்டிடம் அமைய ஆவணம் செய்தார். காலமேகம் எனும் இந்நூல் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு எழுபத்திரெண்டாவது வயதில் வெளியானது. 163 தலைப்புகளின் கீழ் கவிதைகள் எழுதப்பட்டுள்ளது. பல கவிதைகள் குழந்தைகளுக்கான பாடலாக உள்ளன. எது பக்தி, சிட்டுக்குருவி   தலைப்பிட்ட கவிதைகளை இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள குன்றக்குடி அடிகளார் பாராட்டி எழுதியுள்ளார். இத்தொகுப்பில்  காணவில்லை உண்மையை என்றொரு கவிதை என் அப்பா என்னிடத்தில் சேதி சொன்...

உப்பை தமிழ்க்கிறுக்கன்,

  புதுக்கோட்டை எழுத்தாளர் -188 கவிஞர் உப்பை தமிழ்க்கிறுக்கன், இயற்பெயர் ஆ.ராஜதுரை.  உப்பிலிக்குடி , குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை. தமிழின் மேல் கொண்ட பற்றுதல் காரணமாக இலக்கிய பிரவேசத்திற்கு தமிழ்க்கிறுக்கன் என்ற புனைப்பெயரோடு தனது ஊர் பெயரான உப்பிலிக்குடி என்பதை உப்பை என்று சுருக்கி உப்பை தமிழ்க்கிறுக்கன் என்று பெயர் சூட்டிக்கொண்டவர். மரபுக் கவிஞர். சிங்கப்பூர், மலேசியா பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர். இவரது கவிதைகளில் சந்தம் சரளமாய் நின்று நடனம் புரியும். 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட  செந்தில்வேல் சதகம் இவரது முதல் நூல். இதைத் தொடர்ந்து சித்திரச் சிலேடை வெண்பா, வியர்வைப் பூக்கள் என்று மரபு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார். இவ்விரு நூல்களும் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தவை. மீரா பதிப்பகம் வழியே வெளிவந்தது. சித்திரச் சிலேடை வெண்பா , மரபு வடிவில் எழுதப்பட்ட சிலேடை பாடல்களைக் கொண்ட நூல். சிலேடை கவிதைகள் மீது இவருக்கு வந்த ஈர்ப்பை இவ்வாறு என்னுரையில் எழுதுகிறார் கவிஞர். தற்சாற்று சிறு வயதில் எனது தந்தையார் புலவர்கள் கதைகளை சொல்வார்கள். அப்போது கம்பர் ஒட்டக்கூத்தர், ஒளவையார், ...

புலவர் க.மு.சுந்தரகணேசன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 186 புலவர் க.மு.சுந்தரகணேசன்,  துணைப் பேராசிரியர், மன்னர் கல்லூரி ,புதுக்கோட்டை. இவர் சக்திதாசன் என்கிற புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் பழநி அந்தாதி  முக்கியமானது. புதுக்கோட்டை நாரதர்மலை மாரியம்மன் பிள்ளைத்தமிழ், எனும் இந்நூல் முதற்பதிப்பாக ஏப்ரல் 1972 இல் வெளியானது. தமிழக அரசு கல்லூரிக் கல்வி நெறியாளர் அனுமதி பெற்று வெளியானது.  சேலம் மாவட்டம் எழில்மலர்ப் பதிப்பகம் மூலமாக வெளியான இந்நூலை புதுக்கோட்டை செந்தமிழ்ப் பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டது. இந்நூலுக்கு பதிப்புரை கு.பெ.மகாலிங்கம்,  அணிந்துரை தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி கவிஞர்கோ,  பாவலரேறு வித்துவான். ச. பாலசுந்தரம் அவர்கள். இந்நூலின் முன்னுரை இவ்வாறு பேசுகிறது. இறைவழிபாடு, எம்குடும்பத்தாரின் அகத்தேயும் புறத்தேயும் நீங்காத சொத்து. இந்நிலையில் சத்திய சோதனையில் ஆழ்த்திய அன்னை பராசக்தி எம் உள்ளத்தில் அவளே நின்று பிள்ளைத்தமிழ் பாடத்தூண்டா விளக்காணாள். சத்திய சோதனையில் வென்றது - அவளோ? நாமோ? எல்லாம் அவளே; அவள் பிள்ளைத்தமிழ் பாடல் வெளிவர எம்மைத்துணையாக்கி...

கோபிநாத்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 187 கோபிநாத் , அறந்தாங்கி. தற்போது சென்னையில் வசிக்கிறார்.  விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துநராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டு அந்நாட்டில் நடந்த சர்வதேச செய்தியாளர்கள் கலந்தாய்வில் பங்கேற்றார். ஊடகங்களில் இவருடைய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் முன்னணி செய்தி வார இதழான இந்தியா டுடே வழங்கிய 2006 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருதைப் பெற்றவர். 2007 ஆம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆனந்த விகடன் வார இதழால் தேர்வு செய்யப்பட்டார். இவர் எழுதிய முதல் புத்தகம், ' தெருவெல்லாம் தேவதைகள்'. இது தவிர ' ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!', 'நேர் நேர் தேமா',  'நீயும் நானும் ' ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. ' ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! ' அவர் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள் , பயணங்கள் பற்றி எழுதியுள்ளார். கணக்குகளின் எண்ணிக்கை அதிகம...

பொ.அ.ராஜ்குமாரன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -185 பொ.அ.ராஜ்குமாரன் , மருத்துவர். இராஜகோபாலபுரம், புதுக்கோட்டை. தற்போது சென்னை  தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மௌனமான காதலுக்கு , இந்நூல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு. டிசம்பர் 2011 இல் இந்நூல் புதுக்கோட்டை ஸ்ரீ சண்முக பாண்டியன் பதிப்பகம் வழியே வெளிவந்தது. இது தவிர உனது விழியசைவில்,  காதல் மொழி என இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கவிஞர் பழநிபாரதி அவர்கள், மௌனம் ஒரு பேரழகு. அது சொற்களற்ற வெறுமையல்ல.  சொற்களைக் கடந்த தனிமை. அந்த இடத்தில் எது இருந்தாலும் இனிது. காதல் இருந்தால் இனிதினும்; இனிது. காதலை அந்த உயரத்திற்குக் கூட்டிச் செல்வதற்காக...ஒரு பறவையின் இறகெடுத்து மலரினும் மெல்லிய மொழியில் ராஜ்குமாரன் எழுதிய கவிதைகள்தாம் இந்தத் தொகுதி, என்கிறார். இத்தொகுதி முழுக்கவும் காதல் கவிதைகள்.  காதலி மீது காதலன் பாடும்  கவிதைகள். இத்தொகுப்பில் ஒரு கவிதை, உனக்காக இன்றும் காதலும் நானும் கவிதையுடன் காத்திருக்கின்றோம்... வா! அமர்ந்துகொண்டு வாசிக்...

அன்பரசு மணி

  புதுக்கோட்டை எழுத்தாளர் -184 அன்பரசு மணி  , உதவிப் பேராசிரியர் வணிகவியல்,  வணிகத்துறையில் ஆய்வியல் நிறைஞர் முடித்தவர். தனித்தமிழ் எழுத்தாளர். நகரும் நட்சத்திரங்கள் , எனும் இந்நூல் இவரது முதல் ஹைக்கூ தொகுப்பு. ஏலே பதிப்பகம் , திருநெல்வேலியிலிருந்து இந்நூல் வெளிவந்துள்ளது. ஆண்டு 2021. இந்நூலில் நூலாசிரியர் இவ்வாறு என்னுரை  எழுதியுள்ளார். என் வானில் என் கற்பனை அலாதியாக மின்னுகிறது நட்சத்திரங்களாக. அந்த நட்சத்திரம் அங்கும் இங்கும் எங்கும் திசை அறியா காற்றாக நகர்ந்து நகர்வலம் சென்றது. "நகரும் நட்சத்திரங்களைப் பின்தொடர்ந்து நானும் ஊர் சுற்றுவதும் உணவுகள் ருசிப்பதும் முகமறியா மனிதர்களின் அகம் கண்டு அன்புக் கொண்டு பழகுதல் என்று வாழ்க்கை நகரும் நட்சத்திரங்களோடு நகர்ந்து போகிறேன். நகர்ந்து சென்ற நட்சத்திரங்கள் அன்றொரு இரவில் தேவதையுடன் வந்து என்னைய் சந்தித்தது. உன் எழுத்துக்கள் வாசிக்கும் தருணத்தில் உணரும் பொழுதுகளில் ரசிக்கும்படியுள்ளது. உனது ஆழ்மனதின் கற்பனை அலாதியாக மின்னுகிறது. அந்த மின்னும் கற்பனைகளை சொற்களாக மாற்றி குறுங் கவிதையாக ஒர் ஐக்கூவை எழுதி நகரும் நட்சத்தி...