புதுக்கோட்டை எழுத்தாளர் -09 ப.உமாபதி , (பிறப்பு - 24.11.1939 பெற்றோர் - கயி. பழனியப்பன் - காசியம்மாள்) . கரம்பக்குடி தெற்குத் தெரு. கரம்பக்குடியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். முதுகலை தத்துவம், சமூக அறிவியல் முடித்து ஆசிரியராக பணியாற்றினார். பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றிபெற்று ஊரக வளர்ச்சித்துறையில் அதிகாரியாகவும் பிறகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பணிக்காலம் 36 ஆண்டுகள். தமிழ் , ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதக்கூடியவர். திறனாய்வாளர், சொற்பொழிவாளர். ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டி நூல்களாக எழுதப்பெற்ற மூன்று நூல்களில் இடம் பெற்றிருந்தார். கரம்பக்குடி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆலோசகர், கரம்பக்குடி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் உட்பட பல அமைப்புகளில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். சமுதாயச் சிற்பி விருது, சிறந்த சமூக சேவை விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். சமீபத்தில் கரம்பக்குடி தமுஎகச கலை இரவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். இந்தப் பூமிய...
அண்டனூர் சுரா