புதுக்கோட்டை எழுத்தாளர் – 211 மங்களா , இயற்பெயர் ஆர். மங்களராஜ், ( பெற்றோர் – ராஜீ, ரஞ்சிதம்), பாரதிதாசன் இல்லம், மச்சுவாடி. பேராசிரியர், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, கட்டுரை, ஆய்வு, சிறுகதை, நாவல் என்று பன்முகமான படைப்புகள் தந்தவர். தனிமரம், சேர நன்னாட்டிளம் பெண்களுடனே இரு சிறுகதைத் தொகுப்புகள்; நிம்மதி, ராகம் தவறிய பாடல்கள், போலிகள் என மூன்று நாவல்கள், கோட்டின் கீழே புள்ளி, எட்டயப்புரத்துக் குடில் என கவிதைத் தொகுப்புகள், குருதிப்புனல் நாவல் ஒப்பாய்வு- ஆய்வு நூல், புதியதோர் உலகம் செய்வோம் ( நாடகத் தொகுப்பு) என பல படைப்புகள் தந்தவர். இவரது கடைசி நூல் ‘ ஒரு முடிவின் தொடக்கம்’. இவரது ‘ கோட்டின் கீழே புள்ளிகள் ’ எனும் நெடுங்கவிதை ‘ யுனிவர்சிட்டி டுடே’ என்கிற டெல்லி பத்திரிகையில் ஆங்கில மொழியாக்கம் பெற்றது. மேலும் இக்கவிதை கும்பகோணம் அரசு தன்னாட்சிக் கல்லூரியில் பாடமாக இடம் பெற்றது. மேலும் ‘வாழவிடுங்கள்’ என்கிற சிறுகதை மலையாளத்தில் அட்சரம் என்கிற பத்திரிகையில் வெளியானது. இவரது ‘அறிவு ஜீவி’ என்கிற கவிதை ‘ பார...
அண்டனூர் சுரா