முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்துரத்தினப் பாரதியார்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 183 முத்துரத்தினப் பாரதியார், புலவரேறு என்றும் மந்தமறைப் புலவரேறு என்றும் அழைக்கப்பட்டவர்.  மந்தமறைப் புரவரேறு முத்துரத்தினப் பாரதியார் என இவர் குறித்து பிற நூல்கள் பேசுகின்றன. இவர் இயற்றிய நூல் தேனீமலைப் பாமாலை . தேனீமலை புதுக்கோட்டையிலிருந்து மேற்கே 20 கல் தொலையில் உள்ளது. இவ்வூர் மலையின் மீது அமையப்பெற்ற முருகன் மீது பாடப்பட்ட 160 பாடல்களின் தொகுப்பு தேனீமலைப்  பாமாலை. பாயிரம், உறைவிடப் பதிகம், வருகைப் பதிகம்,  இலக்குமிப் பதிகம் , ஓமானைப் பதிகம்,  ஊழறுபதிகம், ஆனந்தக்களிப்பு என்று பல பகுதிகளைக் கொண்ட பாமாலை இது.  வினைபோக்குபவன். என் ஆவியாய் இருப்பவன், ஊழைத் தகர்ப்பவன் என முருகனின் செயல்களை இவர் புகழ்ந்து பாடுகிறார். இந்நூல் குறித்தும் நூலாசிரியர் குறித்தும் தகவல் இந்தளவிலேயே கிடைக்கின்றன. 

ஆ.சேவியர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 182 ஆ.சேவியர் , உடற்கல்வித் துறை ஆசிரியர். மேரிஸ் பப்ளிகேஷன்ஸ், 12,எஸ்.எஸ் நகர், புதுக்கோட்டை. உடல் திறன் வளர்ப்போம் , எனும் இந்நூல் பயில்வோர் பயிற்றுவோர், பயனுக்காக எனும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நூலில் பல யோகாசனங்களும் சிறுவர்கள் விளையாடி மகிழ சிறு விளையாட்டுகளும் குழுவாக விளையாடப்படும் முதன்மை விளையாட்டுகளும் உடலை உறுதி அடையச் செய்யும் பலவகை உடற்பயிற்சிகளும் தடகள போட்டிகளுக்குத் தகுதி பெறச்செய்யும் தடகளப் பயிற்சிகளும் விதிமுறைகளும் விளக்கப்படங்களுடன் தரப்பட்டுள்ளது. அணிநடைப் பயிற்சி, சுகாதாரக் கல்வி, நிலக்கல்வி, பாதுகாப்புக்கல்வி, முதலுதவி, பொதுஅறிவு, என கற்க வேண்டியவை அனைத்தும் மிக விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலில், உடற்கல்வியின் நோக்கம் பயன்கள், பழைய புதிய ஒலிம்பிக் போட்டிகள், யோகாசனங்கள், தாளப்பயிற்சிகள், எளிய உபகரணப் பயிற்சிகள், உடல் தகுதியை உயர்த்தும் உடற்பயிற்சிகள், தடகள விளையாட்டுகள் - ஓடுகளம், தாண்டுதல், எறிதல், கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், கையுந்து பந்தாட்டம், கோ-கோ,வளைகோல் பந்தாட்டம்,மேஜைப் பந்தாட்...

புலவர் எஸ்.பி.இராஜையா

புதுக்கோட்டை எழுத்தாளர்கள் – 181 புலவர் எஸ்.பி.இராஜையா , கீழநீலிதநல்லூர், சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம். பணியின் பொருட்டு கரம்பக்குடியில் குடியேறியவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கரம்பக்குடியில் வசித்து வருகிறார். தலைமை ஆசிரியராகவும், கல்வி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மரபுக் கவிதை பாடுவதில் வல்லவர். திருக்குறள் பற்றாளர். திருக்குறள் சொல்லும் நன்னெறியின்படி வாழ்ந்து வருகிறவர். அவர் வீட்டின் சுவரில் தினமும் ஒரு திருக்குறள் பொருளுடன் எழுதி திருக்குறளை அறநெறியாகப் பரப்பி வருகிறவர். இவர் எழுதிய ஒரு நூல் ஒளியேசு வெண்பா . இவரை ஆட்கொண்ட இயேசு பெருமானை எண்ணி, திருவிவிலியக் கருத்துக்களையும் அவருள் எழுந்துள்ள ஆன்ம விடுதலை அனுபவத்தையும் வெண்பாவிற்குரிய இலக்கணத்தோடு இந்நூலை எழுதியுள்ளார். இயேசுவின் மூலம் அடையும் ஒளி வாழ்வை யாவரும் அறிய பாவலர் எடுத்துள்ள நற்செய்திப் பகிர்வு இது. இத்தொகுப்பில் ஒரு வெண்பா நீதி நிலைப்பாட்டில் நேர்த்தியாய் நின்றென்றும் நீதிக்காய் துன்புறுவோ் பேறுபெற்றா் – நீதியுடை விண்ணரசின் பேறு பெற்றார் விண்ணரசும் சொந்தமென எண்ணுவார் என்றார் இயேசு. ...

ஜானகி ராஜாயி சாஹேப்

புதுக்கோட்டை எழுத்தாளர் -180 ஜானகி ராஜாயி சாஹேப் , புதுக்கோட்டை தனியரசு அரசக் குடும்பத்து மகள். இவர் இயற்றிய   கீர்த்தனைப் பாமாலை எனும் இந்நூல் புதுக்கோட்டை நாரதா மலையில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மீது பாடப்பட்ட சிந்து, பல்லவி, அநுபல்லவி, கும்மி வடிவில் பாடப்பட்ட பாமாலையின் தொகுப்பாகும். இந்நூலின் மூலம், இவர் ‘ புதுக்கோட்டையின் முதல் பெண் நூலாசிரியர்’ என்கிற பெருமையைப் பெறுகிறார். இந்நூல் திரிசிரபுரம் டீ சில்வா அச்சுயகதிரசாலையில் 1920 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. திரிசிரபுரம் என்பது திருச்சிராப்பள்ளி. இதிலிருந்து இவ்வாண்டு வரை தனியரசாக இயங்கிய புதுக்கோட்டையில் அச்சகங்களோ, பதிப்பகங்களோ இயங்கியிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. புதுக்கோட்டை தொண்டைமான் குடும்பத்தினர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆயினும் அரசக் குடும்பத்து மகள் ஜானகி ராஜாயி சாஹேப், தமிழில் நன்கு சிறந்து விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இவர் குறித்து பிற குறிப்புகள் இல்லை என்றபோதினும், மாதாட பாரதேனோ என்ற வர்ணமெட்டில் கமாசு இராகத்தில் இயற்றியிருக்கும் “சின்னுஞ் சிறு...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...

பொறியாளர் தே. ஹெலினா

  புதுக்கோட்டை எழுத்தாளர் -178 பொறியாளர் தே. ஹெலினா , இயற்பெயர் - தே.ஹெலினா கிரிஸ்டோபர் ,  புதுக்கோட்டையில் தேவசகாயம் -ஜீவமணி இணையருக்கு 16.12.1968 இல் மகளாகப் பிறந்தவர். பள்ளிப் படிப்பை சேலம், ஆத்தூர், புதுக்கோட்டை எனப் பல இடங்களில் முடித்தவர்.  தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தவுடன், திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார். இலக்கியத்தில் மதிப்புறு முனைவர் பட்டம்( Doctorate in Literature) பெற்றுள்ளார். மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக நுழைந்து 30 ஆண்டுகாலப் பணியில் செயற்பொறியாளராக உயர்ந்துள்ளார். திருக்குறள்மீது கொண்ட காதலால் 1. வள்ளுவம் கூறும் வாழ்வியல், 2. வள்ளுவத்தில் மனித மாண்புகள் , 3. வளம் பெற வள்ளுவ நாட்காட்டி, 4. உறவுகளின் உயிர்ப்பு, 5. குறளும், விவிலியமும்,  6. திருக்குறள் புதிய உரை ஆகிய ஆறு நூல்கள் எழுதியுள்ளார்.  குறள் இனிது யாழ் இனிது என்று ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார். குறள் கொண்டாட்டம் என்று 2016, 2018ஆம் ஆண்டுகளில் ஈரோட்டில் கல்லூரிகளில் விழா நடத்தி உள்ளார். சென்னை ...

பாலச்சந்தர்

புதுக்கோட்டை எழுத்தாளர் -177 பாலச்சந்தர் , மச்சுவாடி, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் இரு மாவட்டச் செயலாளரில் ஒருவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை நகரக்குழு உறுப்பினர். நல்ல வாசிப்பாளர், நல்ல திறனாய்வாளர், களச் செயற்பாட்டாளர். கல்லூரி பருவத்தில் ஒட்டடை என்கிற புனைப்பெயரில்  கவிதைகள் எழுதியவர். ஆகவே அவரது முதல் படைப்பை ஒட்டடைக் கவிதைகள் என்கிற பெயரில் கொண்டு வந்திருக்கிறார். மிக விரைவில் வெளியீடு காணவிருக்கும் இந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை இது. மானமும் அறிவும் கவிதைக்கு அழகு. அறிவுத் தூரிகைக் கொண்டு மனதைச் சொறிகையிலும் மனத்தூரிகைக் கொண்டு அறிவைச் சொறிகையிலும் கவிதைகள் பிறக்கின்றன. இரண்டிலும் கவிதைகள் பிறந்தாலும் இரண்டுமே கவிதைகள் என்றாலும் முன்னது நூலாம்படை , பின்னது ஒட்டடை. புதுக்கோட்டையின் பெரும்வரவாய் வந்திருக்கும் கவிஞர் பாலச்சந்தர் நூலாம்படையைத் தன் தூரிகையால் விலக்கி ஒட்டடைகளைச் சேகரித்திருக்கிறார். நூலாம்படை ராஜ்ஜியத்தில் ஒட்டடைகள் ஏழை, எளியவர்கள் பாமரர்கள். இந்நூல் வறியவர்களைப் பாடும், அவர்களின் அன்றாடங்களைப் பாடும் பாமரக் கவி...