முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அ. இளங்கோவன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -176 அ. இளங்கோவன் , மணிப்பள்ளம், புதுக்கோட்டை. கவிஞனின் காதலி எனும் இந்நூல் கவிஞரின் முதல் நூல். பதிப்பு - 1991 ஏப்ரல்.  பக்களவில் மிகச்சிறிய நூல். கணவன் மனைவி காதலி எனும் மூன்று தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. மனைவி தலைப்பில் ஒரு கவிதை கூண்டுகள் திறக்கப்பட்டன வாசலுக்கு வந்தபிறகுதான் தெரிந்தது சிறகுகள் சிரைக்கப்பட்டிருந்தது!

பாவலர் சோமசுந்தரனார்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -175 சோமசுந்தரனார் , பாவலர், தமிழிசைப் பாவலர் என அழைக்கப்பட்டவர். புதுக் கோட்டை ராமச்சந்திரபுரத்தில் சுந்தரம்பிள்ளை - பொன்னம்மாள் தம்பதியர்க்கு 28-10-1917 இல் மகனாகப் பிறந்தார். ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீபூமீஸ்வரஸ்வாமி உயர் நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். தொடர்ந்து படிக்கக் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் இடம் தரவில்லை. கலை ஆர்வமும், இறை பக்தியும் இளமைப் பருவத்திலேயே இவரிடம் இயற்கையாய் அமைந்திருந்தன. 1939 இல் தனது முதற் கவிதையை இவர் எழுதினார். தமிழ்த் திரைப்படங்கள் பேசத் தொடங்கியிருந்த அன்றைய நிலையில் தியாகராஜ பாகவதர் போன்றோரின் பாடல்களைக் கேட்பதும் அப்பாடல்களின் மெட்டுக்களுக்கேற்பத் தாமும் பாடல்கள் இயற்றுவதும் இவரின் வழக்கமாக இருந்தன. இத்தகைய சூழலில் 1938 இல் ராமச்சந்திரபுரத்தில் அண்ணாமலை செட்டியார் என்பவரால் ' அன்பு நிலையம் ' எனும் புத்தக வெளியீட்டு நிறுவனம் தொடங்கப் பெற்றது. இந்நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சோமசுந்தரனார் பணிபுரிந்தார். 'அன்பு நிலையம்` சுத்தானந்த பாரதியாரின் பெரும்பாலான நூல்களை அப்போது வெளியிட்டு வந்தது. ...

எஸ். ஆரோக்கியசாமி

  புதுக்கோட்டை எழுத்தாளர் -174, எஸ். ஆரோக்கியசாமி, பிறப்பிடம் - இராஜகுளத்தூர் . தற்போது புதுக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வருகிறார். இளமைக் காலத்திலிருந்தே சமூக நீதிப் போராளியாக இருந்து வரும் இவர், அரசியலில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். உயிர்த்தெழுமா கம்யூனிசம் , மகாத்மா காந்தியோடு பெரியாரா? , பெரியார் பெரியாரா?, அரியணை ஏறிய பொய்கள், வர்ணம்-சாதி-தீண்டாமை இந்தியாவில் மட்டுமா?, அறவழிகாட்டும் ராமாயணம்,  மகாபாரதம் என நூல்கள் எழுதியுள்ளார். மேலும் சர்வோதயம் மலர்கிறது, தமிழர் எழுச்சி,  தமிழக அரசியல், அத்திப்பூ போன்ற இதழ்களில் தொடர்கட்டுரைகள் எழுதியுள்ளார். மகாத்மா காந்தியோடு பெரியாரா? எனும் இந்நூல் இவரது ஆறாவது நூல். தமிழக அரசியல் இதழில் வாரம் இருமுறையாக வெளியான தொடரின் தொகுப்பு. காந்தி சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய பெரியார், 1948 இல் காந்தி மதம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்றும் பேசினார். பிறகு அதை மாற்றி காந்தியம் ஒழிய வேண்டும். அப்போதுதான் இந்த தேசம் உருப்படும் என்றார். இப்படிப்பட்டவர்தான் பெரியார் என்பத...

வேங்கை ஆரோன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 173, வேங்கை ஆரோன், ஆலங்குடிக்கும் அருகில் வேங்கிடக்குளத்தில் சின்னப்பன் - மரிய ஆரோக்கியம் இணையர்களுக்குப் பிறந்த ஒரே மகன். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி பணிநிறைவு பெற்றிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு ஓய்வுக்குப் பிறகு கோயில் குளங்களுக்குச் சென்று பக்திப்பாடல்களாகப் பாடி காற்றை மென்படுத்தினார். அப்படியாக இவர் எழுதிய பாடல்கள் நூற்று ஐம்பதுக்கும் மேல். இவரது மருமகனார் விஞ்ஞானி ஆ.ஆபிரகாம் ஜோசப், பாடல்களுக்குப் பதிலாக கவிதைகளாக எழுதி நூலாக வெளியிடலாமே எனக் கேட்டுக்கொள்ள, இவரது கவனம் கவிதைகள் பக்கமாகத் திரும்பியது. சைவம், வைணவம், கிறிஸ்தவம் என்று பாடல் வடிவில்  கவிதைகள் எழுதினார். அப்படியாக இறைவனைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை நானூறு. அவற்றில் எழுபத்தைந்து கவிதைகளைத் தேர்வு செய்து மெல்லத் திறந்த மதகுகள் என்கிற தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், இவரது வரிகளை வானவில்லின் வர்ண ஜால...

முனைவர்மு.பழனியப்பன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 172 முனைவர் மு. பழனியப்பன் , அரிமா நகர், பொன்னமராவதி . புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றியவர். பெரியபுராணத்தில் பெண்கள் - ஓர் ஆய்வு, பெண்ணிய வாசிப்பு,  விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் , சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன் ஆகிய ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில தலைவர்களில் ஒருவர். விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் எனும் இந்நூல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய பெண்களின் நாவல் படைப்புகள் குறித்து ஆய்வு செய்கிறது. இவ்வாய்விற்கான எல்லை 1897 ஆம் ஆண்டு முதல் விடுதலை நாள் வரை ஐம்பது ஆண்டுகளுக்குள் பெண்களின் நாவல்களை ஆய்வின் மூலமாகக் கொண்டுள்ளது. இக்கால எல்லைக்குள் விசாலாட்சி அம்மாள் (1901-1910), மலைமகள், மீனாட்சிசுந்தரம்மாள், வி.பாலாம்பாள் (1911-1920), சரஸ்வதி அம்மாள், கோதைநாயகி அம்மாள், (1931-1940), செய்யூர் சாரநாயகி அம்மாள், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்,  டி.பி.இராஜலெட்சுமி அம்மாள், வேங்கடலட்சுமி,  குமுதினாஆகியோர் நாவலாசிரியராக அ...

ப.சந்திரமோகன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 171 ப.சந்திரமோகன் , கொத்தக்கோட்டை, சென்னை தலைமை செயலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவகாமி என்பவர் ஓய்வு காலத்தில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட அவரது விழாவிற்குச் சென்ற ப.சந்திரமோகன் பணிக்காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து வெளியிடலாம்,  என்கிற முடிவுக்கு வந்தார். இவரது ஆசை நிறைவேற இவரது நண்பர் ந.முருகன் உற்ற துணையாக இருந்திருக்கிறார். மகிழும் பூக்கள், இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு அணிந்துரை ந.முருகன், மதிப்புரை ப.முத்துப்பாண்டியன், பாண்டியன் புத்த - அகம். கடவுள், நீர், உழைப்பு, கடவுளின் சிரிப்பு, ஊர், கல்வி, வேலைவாய்ப்பு என்று பல தலைப்புகளில் கவிதைகள் வார்த்திருக்கிறார். இத்தொகுப்பில் ஒரு கவிதை, தலைப்பு- பொன்வண்டு காடு இருந்தது அப்போது நகரத்தையொட்டி காடு இருந்தது அப்போது கூழாங்கற்கள் கொட்டிக்கிடக்கும் தேவிகுளம் தாண்டி கொழிஞ்சி செடி காய்த்திருக்க பழுத்த கனிகள் இனித்திருக்க களித்து குதித்த நாட்கள் அவை பாடிப் பறக்கும் பொன்வண்டு வந்து அமரும் மலர்மீது பதுங்கிப் பிடிப்போம் கைக்கொண்...

புதுக்கோட்டையின் முதல் அச்சுத்தமிழ் எழுத்தாளர்.

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 170 புதுக்கோட்டையின் முதல் அச்சுத்தமிழ் எழுத்தாளர். தனியரசாக விளங்கிய இறுதி காலத்தில் புதுக்கோட்டை அச்சு மற்றும் பதிப்பகத்துறையில் முன்னணி வகித்தது.  இரண்டாம் உலகப் போரின் விளைவால் ஏற்பட்ட காகிதத் தட்டுப்பாடு பிரச்சனைகளைத் தீர்க்க உலக நாடுகள் கடைபிடித்த காகிதக் கொள்கையும் பேரரசுகள் மற்றும் சிற்றரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட காகித ஒதுக்கீடுகளும் இதற்குக் காரணம். புதுக்கோட்டை தனியரசுக்குட்பட்ட இராமசந்திரபுரம் தனியரசுக்கு மட்டுமல்ல, சென்னை மாகாணத்திற்கும் கூட அச்சுத் துறையின் தலைநகராக விளங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்திற்குட்பட்ட சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் பகுதிகள் திருமயம் ஒட்டியிருந்ததால் தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் எழுத்தாளர்கள் இராமச்சந்திரப்புரத்திற்குப் படையெடுத்து வந்தார்கள். இவ்வூரில் நூல்கள் அச்சாகி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கிறது. மேலும் குழந்தை இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள் புதுக்கோட்டையிலிருந்து அதிகம் வெளியாகின. புதுக்கோட்டை தனியரசில் இயங்கிய அச்சகங்களில் கார்த்திகேயினி அச்சகம், ஜனமித...