முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தமித்திரர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -201 புத்தமித்திரர் ,  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து இருபத்தைந்து கல் தூரத்தில் தென்கிழக்கு கடற்கரையொட்டியுள்ள  பொன்பற்றி எனும் ஊரில் பிறந்தவர். வீர ராசேந்திர சோழ மன்னன் அதிகாரத்திற்குட்பட்ட சிற்றரசராக ஆட்சிப்புரிந்தவர்.  புத்த மதத்தவர். இந்நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி 1063 - 1070. இவர் வீரசோழியம் எனும் இலக்கண நூலைப் படைத்தார். இப்பெயர் வீர ராசேந்திர சோழனைக் குறிக்கும். " மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன்,  மெய்தவத்தால் தொக்கவன், யார்க்கும் தொடரவொண்ணாதவன், தூயனெனத் தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப் புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே " எனும் வரும் முதற் செய்யுள் மூலம் இவர் பொன்பற்றி எனும் ஊரைச் சேர்ந்தவர் அறியமுடிகிறது. " தேமேவிய தொங்கற் நேர்வீர சோழன் திருப்பெயரால் பூமே லுரையப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே " என்று பாடியுள்ள அடிகள் மூலம் இந்நூலை இயற்றிவித்தவன் வீரராசேந்திர சோழ மன்னனாவான் என அறியமுடிகிறது. வீரசோழியம் வடமொழி இலக்கண விதியைத் தன்னகத்தே கொண்ட நூல். எழுத்து, சொல், பொருள், ய...

கவிச்சுடர் கவிதைப்பித்தன்,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 200 கவிச்சுடர் கவிதைப்பித்தன், இயற்பெயர் - இராஜா சுப்பையா செல்வராஜ். புதுக்கோட்டை காந்தி நகர் மூன்றாம் வீதியில் வசித்து வருகிறார். பூர்வீகம் கரம்பக்குடி. இவரது தந்தையார்  தீவிர திராவிட இயக்கத்தவர் என்பதால் பள்ளி வயதிலேயே  பெரியார்,  அண்ணா , கலைஞர் மீது பற்றுகொண்டு பெரியார்  சிந்தனைகளை உள்வாங்கியவர்.  ஐந்தாம் வகுப்பு படிக்கையில் விடுதலைத் திருநாள் விழாவில் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர்.  இப்போட்டிக்கு உரை எழுதிக்கொடுத்தவர் சந்தப் பாவேந்தர் புலவர் யா. வென்னரசு அவர்கள். இவரைப் பள்ளி ஆசானாகவும் இலக்கியத்துறையின் ஆசானாகவும் கொள்கிறார். 1981 ஆம் ஆண்டு புதுவை அரசு  பாரதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பொருட்டு அனைத்திந்திய அளவில் கவிதைப் போட்டி நடத்துகிறது. இப்போட்டியில் பன்மொழி கவிஞர்கள் பத்தாயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள்.  இவரது கவிதை  முதல் பரிசு பெறுகிறது.  குதிரைகள் பூட்டிய வண்டியில் ஒரு புறம் அன்றைய  கர்நாடக முதலமைச்சர், மற்றொரு புறம் பாண்டிச்சேரி முதலமைச்சர், இவ்விருவருக...

ச.தோ.தமிழ்மாறன்,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 199 கவிஞர் ச.தோ.தமிழ்மாறன் , இலுப்பூர்.  தற்போது புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் வசிக்கிறார்.  இயற்பெயர் சர்க்கரை தோமாஸ் அந்தோணிசாமி. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலுப்பூர் கழனிவாசலில்  கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி ஆசிரியர் அலுவலர்களுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தவர். மேலும் புதுக்கோட்டையில் இலக்கியப் பேரவை அமைப்புத் தொடங்கி அதன் செயலாளராக இருந்து கவிஞர்கள்,  எழுத்தாளர்களின் படைப்புகளை நூலாக வெளியிட்டவர்.  தனித்தமிழ்  ஆர்வலர், இசை - இலக்கிய- நகைச்சுவை பட்டிமன்ற நடுவர்.பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் மீது பெரும்பற்று கொண்டவர்.. தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை, வீரமாமுனிவர் இலக்கியப் பேரவை தொடங்கி அதன் தலைவராக செயலாற்றியவர். இவரது முதல் நூல் 'உருகுவதை விட்டுவிடு'. ' நாடும் மொழியும் நம் இரு விழிகள் ' எனும் இந்நூல் இவரது  இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஆண்டு -2010, மணிமேகலைப் பிரசுரம். இந்நூலுக்கு அணிந்துரை - கவிஞர் மு.மேத்தா, கவிச்சுடர் இரா.சு. கவிதைப்பித்தன். வாழ்த்துரை புரவலர் சீனு.சின்னப்பா. அற...

கி.லட்மண சர்மா

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 198 கி.லட்மண சர்மா ,  இந்திய இயற்கை வைத்யர். புதுக்கோட்டை கணேஷ் நகரில் சர்மா இயற்கை வைத்திய இல்லம் நடத்தியர். இவர் புதுக்கோட்டை THE INDIAN INSTITUTE IF NATURAL THERAPEUTICS  எனும் நிறுவத்தில் மேலாளராகப் பணியாற்றியவர். மேலும் இவர் தலைமையில் அகில பாரத ப்ராக்ருதிக சிகித்ஸா ஸம்மேளனம் ஏழாவது மகாநாடு, மே – 1945 ஆம் நடைபெற்றது. பத்ய உணவு , இவரது மூன்றாவது நூல். இதுதவிர பூர்ணசக்தி, உபவாஸதத்வம் எனும் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். பத்ய உணவு எனும் இந்நூல் இயற்கை இல்லம், புதுக்கோட்டை ( திருச்சி) எனும் பதிப்பகத்தின் மூலம் ஆகஸ்ட், 1944 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியானது. ப்ரபல இந்திய இயற்கை வைத்யரான ஸ்ரீ கி. லட்மண சர்மாவினால் ஊருக்கு ஒதுப்புறமாகவும் காற்றோட்டமும், ஜலவசதியிமுள்ள உயயர்ந்த ஸ்தலத்தில இயற்கை வைத்யஇல்லம் நிறுகப்பட்டிருக்கிறது. அங்கு சிகிச்ஸைபெறும் போது வைத்ய முறைகளைத் சந்தேகமறக் கற்றுக்கொள்ளலாம். மானேஜர் சர்மா இயற்கை வைத்ய இல்லம் கணேச நகர் புதுக்கோட்டை ( திருச்சி) என்கிற குறிப்பு இடம் பெற்றுள்ளது. இந்நூலுக்கான முன்னுரையில், உயிர்ச் சக்த...

புதுகை சத்யா

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 197 புதுகை சத்யா , ஆலங்குடி. புன்னகை பூக்கள் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு மதிப்புரை பாண்டியன் புத்த அகம் ப.முத்துப்பாண்டியன். இவரது கவிதைகள் மனிதர்களின் இயலாமை குறித்து ஆதங்கப்படுகின்றன. காதல் மீது உணர்ச்சியும் நட்பு மீது மரியாதையும் கொள்கின்றன. இத்தொகுப்பில் ஒரு கவிதை விரல்களின் கைதி உயிர் இல்லாத உருவம் கொண்டவன் உயிர் பறிக்கும் ஆற்றல் கொண்டவன் சுவாசிக்கும் போது சுகமாக இருப்பான் சுவாசித்த பின்னே அனல் குழம்பாக அரிப்பான் மனித குலத்திற்கு அவன் யோகி மனித உயிர்க்கோ இவனே தியாகி இரண்டு விரல்களுக்குள் அடிமையாய் வசிக்கிறான்! இடைத்தரகராய் நம் உயிரையும் பறிக்கிறான் சிகரெட்!

அன்னை சௌந்தரராஜன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -196 அன்னை சௌந்தரராஜன்,  பாலன் நகர், திருச்சி சாலை சிப்காட்,  புதுக்கோட்டை. இவரது இயற்பெயர் ப. சௌந்தரராஜன். தேனி மாவட்டம் அழகாபுரி கிராமத்தில் பிறந்தவர். தொழில் பொருட்டு புதுக்கோட்டைக்கு வந்தவர். தனது சிறிய வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய்ப்பாசத்தின் ஏக்கத்தால் தாயின் நினைவாக அன்னை என்கிற சொல்லை இணைத்துக்கொண்டு அன்னை சௌந்தரராஜன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர். ஓராயிரம் பார்வையிலே...! இவரது முதல் நூல், கவிதைத் தொகுப்பு. மார்ச் -2011. இந்நூலுக்கு வாழ்த்துரை தந்திருக்கும் எய்ம் பள்ளி தாளாளர் கே.டி.கந்தசாமி, இத்தொகுப்பு மனிதனின் மேன்மையை வலியுறுத்துவதாக இருக்கிறது, என்கிறார். இந்நூல் அச்சாக்கம் மீரா ஆப்செட் பிரிண்டர்.  வெளியீடு அன்னை சௌந்தரராஜன் பதிப்பகம், புதுக்கோட்டை. காதல், உழைப்பு, வறுமை, ஏழ்மை என பல்வேறு பாடுபொருளைக் கொண்டுள்ளது. இந்நூலுக்கு என்னுரை தந்திருக்கும் எழுத்தாளர் தனி மனிதனின் தொகுப்புதான் சமுதாயம் ஒருவன் இந்தச் சமுதாயத்தைக் குறை கூறும் போது தன்னைத் தன் வசதிக்கேற்றவாறு மறைந்து விடுகிறான்,  என்ற...

மனுசியபுத்திரியும் தேவனும்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 195 மனுசியபுத்திரியும் தேவனும்,  இங்கு மனுசியபுத்திரி என்பவர் முனைவர்  ந. சுலோச்சனா .  தேவன் என்பவர் முனைவர்  அ. சகாதேவன் .  முன்னவர் பிறந்தது முதுகுளம் . பின்னவர் மட்டங்கால் .  திருமதி நா.சுலோச்சனா மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் திரு. அ. சகாதேவன் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியிலும் பணியாற்றுகிறார்கள். இருவரும் தம்பதிகள். கந்தர்வகோட்டையில் வசிக்கிறார்கள்.  இருவரும் ஒன்றுபோல சமூகத்தை அவதானிப்பவர்கள்.  நீண்ட புனைப்பெயரைக்கொண்ட எழுத்தாளர் இவர்கள். புராணக் கதையில் சிவன் தன் உடம்பில் பாதியைப் பார்வதிக்குக் கொடுத்ததாக கதை உண்டு. அதுவா உண்மை, பார்வதி தன் உடம்பில் பாதியைச் சிவனுக்குக் கொடுத்தாள் என்று சொல்வதே கதையின்படி சரியாக இருக்கும். சுலோச்சனா தனது நீண்ட புனைவுப் பெயரில் பாதியைக் கணவருக்காக  கொடுத்திருக்கிறார். சுபா என்றொரு பெயர் தமிழ் இலக்கியத்திற்கு நன்கு பரிச்சயமானது. சுரேஷ்,  பாலகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே சுபா.  இரட்டை எழுத்தாளர்களான  இருவரும் நண்பர்கள். முதுசூரியர்,...

சி.மு.சி.சின்னையா செட்டியார்

புதுக்கோட்டை எழுத்தாளர் – 194 சி.மு.சி.சின்னையா செட்டியார் , புதுக்கோட்டை சமஸ்தானம் பனையப்பட்டி புண்ணியசீலர் சி.மு.முத்துக்கருப்பஞ்செட்டியார் அவர்களின் குமாரர் சி.மு.சி. சின்னையா செட்டியார் என்று குறிப்பிடப்படுகிறார். சுவாநுபவத் திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி எனும் இந்நூல் மதுரை பிரஹ்மஸ்ரீ யோகானந்த சுவாமிகள் ஆக்ஞையின் படி புதுக்கோட்டை சமஸ்தானம் பனையப்பட்டி புண்ணிய சீலர் சி.மு.முத்துக்கருப்பஞ் செட்டியார் அவர்கள் குமாரர் சி.மு.சி.சின்னையா செட்டியாரால் திரட்டி அச்சியற்றப்பெற்ற்து. ஆண்டு – 1926. இந்நூலுக்கு முகவுரை எழுதியிருக்கும் சி.மு.சி. சின்னையா செட்டியார் பரசிவ ஞானத்தில் விருப்புடைய அறிஞர்கள் பிரதி தினமும் பாராயணஞ் செய்வதற்கு அனுகூலமாய்ச் சிவானுபவப் பேற்றை அடைந்த மஹாத்மாக்களின் அருமைத் திருவாக்குளைப் பழைய பிரதிகளுக்கிணங்க ஒரே புத்தகமாகப் பேரறிஞர்களின் அனுமதியில் பகவானருளால் திரட்டிய இந்நூல் முதற்பதிப்பில் அச்சிட்ட 2000 புத்தகம் செலவாகிவிட்டபடியால் இரண்டாம் பதிப்பில் 2000 புத்தகமும் அடியேனால் அச்சியற்றப் பெற்றது. இப்புத்தகம் சாதுக்களுக்கு இனாமாகக் கொடுக்கப்படும். இதில் பிழ...

மருதன் பாலமுருகன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 193 மருதன் பாலமுருகன்,   மருதன் இவரது தந்தையார்.  கீரமங்கலம் அருகில் பனங்குளம் இவரது ஊர். திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். முத்தங்களின் தாழ்வாரம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. முத்தங்களைக் கவிதைகளாகக் கொண்ட  முத்தமாலை.  இவரைப் பொறுத்த வரை,  முத்தமென்பது இதழ்களின் சிறகடிப்பு. இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள்  "காதலின்,  பேரன்பின், தாய்மையின் மணங்கமழும் சொற்களால் பின்னப்பட்ட கவிதைகளில் முத்தங்கள் பூக்களாக மலர்ந்திருக்கிறது" என்கிறார். பால்யத்தில் மொட்டுவிட்ட காதலொன்று பூப்பதற்கு முன்பே உதிர்ந்துபோனது. அது கற்றுக்கொடுத்த கவிதை மட்டும் மழையின் ஈரம் மண்ணில் கசிவதைப்போல அவ்வபோது கசிந்துகொண்டிருக்கிறது, அந்தக் கசிவுகளே முத்தங்கள் என்கிறார்  கவிஞர் மருதன் பாலமுருகன். முத்தங்களை  அன்பின் குறியீடாகக் கோர்க்கப்பட்ட இத்தொகுப்பில் இரு முத்தங்கள் 1 மழையில் துள்ளும் முத்தங்கள் குளிக்கின்றன இதழ் குளத்தில் 2 வண்டி வண்டியாய் வெட்டி எடுக்கப்படுகின்றன நதியின் முத...