முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழ.கணேசன்

  புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 126 அழ.கணேசன் , அழகப்பன் கணேசன். கணேஷ் நகர் (நெடுவை), சத்தியமங்கலம், குளத்தூர் வட்டம். நார்த்தாமலை.  கறிக்கடை நடத்துகிறார். மெத்தப் படித்தவர்கள்தான் கவிதைகள், கட்டுரைகள் எழுத முடியுமென்கிற கருத்தை முழுமையாக உடைத்திருப்பவர். மூன்றாம் வகுப்பு கூட முழுதும் முடிக்காத இவர் ஆறு நூல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.  இந்தியாவிலுள்ள பல நகரங்களையும் பல நாடுகளையும் சுற்றி வந்தவர்.  இவரது முதல் கவிதை சிங்கப்பூர் இதழில் வெளியான அற்புத சிங்கபுரம் என்கிற கவிதையாகும். ஆனந்த ஜோதி, சாரல், கீதம், உரத்த சிந்தனை உட்பட பல இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.  கண்ணால் காண்பது அனைத்தையும்/ கற்றுமுடி/ இல்லையேல் செத்து மடி என அறம் பாடுகிறவர்.   இவரது முதல் கவிதைத் தொகுப்பு எளியவனின்  ஏணிப்படிகள் ,  புதுக்கோட்டை மீரா பதிப்பகம் மூலம் வெளியானது. மனதைப் பாரமாக்கிய புத்தக வரிகள்,  இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையிலாடும் ஊஞ்சல் ஆகிய நூல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. கவனத்தில் கொள்ளவேண்டிய கவிதைகள் எனும் இத்தொகுப்பு , மணிமேகலை பி...

ஆலங்குடி வெள்ளைச்சாமி

புதுக்கோட்டை எழுத்தாளர் -125 ஆலங்குடி வெள்ளைச்சாமி , ஆலங்குடி அருகிலுள்ள கீழாத்தூரில் பிறந்தவர். ஓர் இசைப்பாடகனாக கலைப் பயணத்தைத் தொடங்கி பேச்சாளர் , கவிஞர், பாடலாசிரியர், பட்டிமன்ற- பாட்டுமன்ற நடுவர் வரைக்குமாகத் தன் திறமை உருமாற்றத்தால் வடிவமைத்துக்கொண்டவர். இவர் முறையாக கற்றுக்கொண்ட  இசைக்கலை இவரது தொடர் வளர்ச்சிக்கு உந்துவிசையாக இருந்துவருகிறது.  தமுஎகச பொறுப்பாளர்.  வீதி நாடகங்கள் மற்றும் தனி இசைப்பாடல்களில்  தனி முத்திரை பதித்து வருகிறார். யூடியூப் சேனல் மூலமாக அரசியல், கலை, இலக்கியம், விமர்சனம்,.. எனப் பல்துறைகளில் பயனுள்ள கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறார்.   கவிதை எழுதும் தருணம் இவருக்கு மழையில் நனையும் கணமாக இருக்கிறது.  அப்பத்தாவின் கருக்கருவா,  இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ஆனந்த விகடன், செம்மலர், இணைய இதழ்கள்,...என பல இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு இது. அவர் வாழ்ந்த கிராமத்தின் வாழ்க்கை, தடம்,  உறவுகள்,  ஊர் ,மண்,மனிதர்கள், எனத் தொன்மைக் காலத்திலிருந்து இன்று மறைந்தும் மற...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 124

க.மணி . பாரப்பட்டி, குளத்தூர். சுயத்தொழில் செய்கிறார். உண்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் தனது சிந்தனை பயன்பெறட்டும்,  என்பதாக கவிதைகளைப் பாவிக்கிறார். ஆனந்த ரதம் ,  இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காட்டுவாசி எழுதும் கடுதாசி என்கிறார் இக்கவிதைகளை. கவிதை என்பது கட்டுப்படுவதல்ல,  பின்னப்படுவது, என்பது இவரது படைப்பூக்கப் பார்வை. இந்நூலுக்கு அணிந்துரை பேரா. சு.மாதவன் அவர்கள். சமூகம் படைப்பினைப் படைக்கிறது. படைப்போ அடுத்தக்கட்ட சமூகத்தையே படைக்கிறது, என்கிறார் தன் அணிந்துரையில். புதுக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீரா பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. பதிப்புரை எழுதியிருக்கும் கவிஞர் மீரா சுந்தர், இவரை இயற்கைக் கவிஞர் என்கிறார்.  குமரகுருபரருக்குக் குழந்தைப் பருவத்தில் சக்தி யின் அருளால் ஞானம் கிடைத்தது போல, கல்வியறிவு அதிகம் பெறாத க.மணிக்கு இயற்கை அன்னை கடைக்கண் காட்டியுள்ளது, என்கிறார். எம்மொழியும் நம்மொழி,  தவம், அரும்புகளே, தண்ணீரைத் தேடும் கண்கள் என கவித்துவமான தலைப்பிட்ட கவிதைகளில் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு முன்னுரை தந்து கவிதை இயற்றிருப்பது ...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 124

கவிஞர் நந்தலாலா ,  இயற்பெயர் - எஸ். நெடுஞ்செழியன். மகாகவி பாரதியார் மீதுள்ள கவிப்பற்றால் தன் பெயரை நந்தலாலா என மாற்றிக்கொண்டவர். பேச்சரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், நடுவர், விவாதமேடை, நகைச்சுவை அரங்கம், முற்போக்கான உரை,... என எந்தவகை மேடைகளையும் தன்வசப்படுத்துகிறவர். குடைவரைக் கோவிலால் புகழ்பெற்ற குன்றாண்டார்கோவில் இவரது சொந்த ஊர். தற்போது திருச்சியில் வசிக்கிறார். இந்தியன் வங்கியில் பணிசெய்து ஓய்வு பெற்றவர். சமூகச் செயற்பாட்டாளர். சோலைக்குயில்கள் கவிதை இயக்கத்தையும் இதழையும் தொடங்கியவர்களில் ஒருவர். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர். திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு - திருச்சியில் காலூன்றி தமிழ்நாட்டைத் தழுவிய வரலாறு எனும் இந்நூல் ஆனந்த விகடனில் 34 வாரங்கள் வெளிவந்த தொடர்களின் தொகுப்பு.  திருச்சி மாவட்ட அனைத்துத்துறை வரலாறு. கோவில், ஆன்மீகம், அணைகள், அரசியல், எழுத்தாளர் , மதம், சமயம், பத்திரிகை , பெயர்க்காரணம் , காந்தி வருகை, ரயில் தடம், திராவிடம், கம்யூனிசம், ஆரியம் , என பல்துறைகளில் ஆராய்ந்து அலசி வாசிக்க சுவையாகவும் வரலாறாகவும் புதினமாகவும் ஆவணமாகவும் வரப்பெற்ற நூல். ...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 123

அமிர்தன் , திருவப்பூர்,  புதுக்கோட்டை.  இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது, அன்புள்ள மான்விழியே. கவிப்பேரரசு வைரமுத்துவின் 'தடைக்கல்லை படிக்கல்லாக்கு' எனும் கவிதை வரிகள் இவரது கவிதைகளின் வைராக்கியத்தை வளர்த்தது என்கிறார். இந்நூலுக்கு வைரமுத்துவிடம் அணிந்துரை வாங்கி, இந்நூலைக் கொண்டுவர பத்து வருடங்கள் ஆகிவிட்டன,  என்கிறார். மேலும் கவிஞர் சினேகன், பேராசிரியர் க.துரைப்பாண்டியன், கே.டி. கந்தசாமி ஆகியோர் அணிந்துரை தந்துள்ளார்கள். வைரமுத்து தன் அணிந்துரையில் கவிதை என்பது ஒரு கவிஞன் எவ்வளவு உணருகிறான் என்பதும் எவ்வளவு உணர்த்துகிறான் என்பதும்தான்.  அந்த வகையில் அமிர்தன் உன்னதமாக உணர்கிறான். அற்புதமாக உணர்த்துகிறான் , என்கிறார். இத்தொகுப்பில் ஒரு கவிதை. மரம் பற்றியது. மரம் மனிதனை விடவும் எத்தகைய மேலானது எனச் சொல்லும் கவிதை இது. மனிதனை மரமென்று திட்டாதீர்கள்! இன்னும் மரங்கள் தம் சொந்தக்காலில்தான் நின்றுகொண்டிருக்கின்றன.

புதுக்கோட்டை எழுத்தாளர் - 122

சு. நரேந்திரன், மருத்துவர்.  பூர்வீகம் புதுக்கோட்டை.  தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டை டி.இ.எல்.சி பள்ளியிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னையிலும் நிறைவு செய்தவர். தஞ்சையில் மருத்துவப் படிப்பை முடித்து, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “கல்லீரல் அமீபா சீழ்க்கட்டியினால் நேரும் இறப்பு விழுக்காடு கட்டுப்பாடு” என்னும் தலைப்பிலும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது தந்தை தினத்தந்தி  இதழின் மாவட்ட நிருபர். 30 ஆண்டுகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியவர். பேராசிரியராகப் பல ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கியவர். தற்போது தஞ்சாவூர் கீழவீதியில் அரண்மனைக்கு எதிரில் ஒரு சிறிய மருத்துவ ஆலோசனை மையம் நடத்துகிறார். 19.10.2022 நாளிட்ட ஆனந்த விகடன், மாரத்தான் மனிதர்கள் வரிசையில் வெ.நீலகண்டன் இவரைப் பதிவு செய்துள்ளார். தமிழில் மருத்துவம் படித்த டாக்டர்கள் வர வேண்டும்! என்பது இவரது ஆகப்பெருங்கனவு. அதற்காகத் தன் வாழ்வின் 50 ஆண்டுகளை அர்ப்பணித்...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 121

  இரா.சிவப்பிரகாசம் , தென்னகம், கரம்பக்குடி. சொந்தமாக அரிசி ஆலை நடத்துகிறார். வணிகர். எல்.ஐ.சி முகவர். அறிவியல் ஆன்மீகம், மருத்துவம், வாழ்வியல் கட்டுரைகள்,..எனத் தொடர்ந்து எழுதி வருகிறவர். சேனையர் முரசு, தினமலர் இதழ்களில் உள்ளூர் பிரச்சனைகளைப் பதிவு செய்து வருகிறார். இவரது புதல்வர் சி.அன்பழகன், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எனது சிந்தனைகள், இவரது இரண்டாவது நூல். எளிமையான வரிகள் கொண்ட கவிதைகள். சுய விமர்சனம், அறிவுரை, அனுபவம்,  பணத்தின் சூத்திரம்,  ஆரோக்கிய அரிச்சுவடி,...என வாழ்தலுக்கான எதிர்கொள்ளலைப் பேசுகிறது. இத்தொகுப்பில்  மிஞ்சாது ....என்றொரு கவிதை உயர உயரப் பறந்தாலும் ஒருக்காலும் காகம்  கழுகை மிஞ்சாது!! காட்டு விலங்குகளால் கானகம் நிறைந்திருந்தாலும்!! கர்ஜிக்கும் காட்டு ராஜா சிங்கத்தை எதுவும் மிஞ்சாது!! பறக்கும் இனத்தில் பல்லாயிரம் இருந்தாலும்!! சுறுசுறுப்பில் தேனியை எதுவும் மிஞ்சாது!! உழைக்கும் மக்கள் ஓராயிரம் ஆனாலும்!! உழவுத் தொழிலை ஒன்றும் மிஞ்சாது!!

புதுக்கோட்டை எழுத்தாளர் -120

  கசி. விடுதலைக்குமரன் ,  நரிமேடு, புதுக்கோட்டை.  கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர். மக்கள் விடுதலைக்கான களத்தில் , தனது முழு நேர வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்த களச் செயற்பாட்டாளர். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை தமது சி.பி.ஐ ( எம் -எல் ) மக்கள் விடுதலை அங்கீகரிக்கிறது, என்று சொல்லும் இவர் கல்லூரி பருவத்தில் போராட்டக்கள அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1983இல் வெளிக்கடை சிறைச்சாலை படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இனவுணர்வு வெடித்து சிதறியது. அந்தப் போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்டு கருப்பு சட்டையோடு கல்லூரிக்குள் நுழைந்தவர் சிவப்பு சிந்தனையோடு வெளியேறினார். இவருடைய அரசியல் குரு ஜெ. சிதம்பரநாதன். புதுக்கோட்டையின் சிற்பி, என தோழர் க.மு. வல்லத்தரசு எனத் தொடர்ந்து பரப்புரையாற்றி வருகிறவர்.  சாதி ஒழிப்பு - மாற்றத்திற்கான முதன்மைப் பணி எனும் இந்நூல் மக்கள் விடுதலை பதிப்பகம் வெளிவந்துள்ளது. அணிந்துரை பாட்டாளி. மதிப்புரை மு. வேதரெத்தினம் ( ஆன்மீகப் பொgதுவுடைமை நெறியாளர் ). சாத...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 119

செவ்வூர் வடுமு வைத்யலிங்க கவிராயர் . செவ்வூர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். இவர்  விராலிமலையில்  பெருங்காலம் வாழ்ந்தவர். விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மீது அவருக்கிருந்த பற்றால்  விராலிமலைக் குறவஞ்சி  பாடியுள்ளார்.   ஓலைச்சுவடியாக இதை இயற்றியவர் ஓலைச்சுவடியில் ஒவ்வொரு ஓலையிலும் ஏழு வரிகள் வீதம், 32 ஏடுகளில் எழுதியுள்ளார். 30.10.1955 அன்று இந்த ஓலைச்சுவடு  கையெழுத்துப்பிரதியாக்கப்பட்டது. இவ்வோலையைச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கியவர், சிங்காரவேலு கவிராயர் . இவர் திருச்சி மாவட்டம், மிதிலைப்பட்டியைச் சேர்ந்தவர். இந்நூலை ஜெ. சந்திரிகா என்கிற ஆய்வு மாணவியர் , சென்னைப் பல்கலைக் கழகம் வாயிலாக பதிப்பித்திருக்கிறார். புதுக்கோட்டை விஜயரகுநாதராய தொண்டைமான் அமைச்சரவையில் சுப்ரமணிய முதலியார் , என்றொரு அமைச்சர் இருந்தார். புதுக்கோட்டை கோவில் திருவிழாக்களில்போது இந்த விராலிமலைக் குறவஞ்சி எனும் நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ளார். குறவஞ்சியின் பொது அமைப்புகளான கட்டியக்காரன் வருகை, கட்டியக்காரன், பாட்டுடைத் தலைவன் பவனி வருகையை அறிமுகப்படுத்துதல், பாட்ட...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 118

  எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன், ஆய்வாளர் காவல்துறை - பணி நிறைவு. தெய்வத் திருமணி, வைணவ ரத்னா, ஆன்மீக சேவை செம்மல் போன்ற விருதுகள் பெற்றவர். ஓய்வு பெற்றபின் ஓய்வு என்று ஒதுக்கிவிடாமல் தமிழ்ச்சமுதாயம் பயனுற இந்நூலை எழுதியுள்ளார். இதைக் கொஞ்சம் படியுங்க... எனும் இந்நூல் பாப்பா பாட்டு. ஐம்புலன் என்னொரு பாடல் மெய் வாய் மூக்கு கண் காது மேலாம் ஐம்புலம் என ஓது ! உணர்தல் உணர்த்தல் மெய்யாகும் உண்ணல் பேசல் வாயாகும் ! பார்த்தால் படித்தல் கண்ணாகும் கேட்டால் அறிதல் காதாகும் ! முகர்தல் வெளிவிடல் மூக்காகும் சிந்தனை அறிவே ஆறாகும்!

புதுக்கோட்டை எழுத்தாளர் - 117

ப. முத்துப்பாண்டியன் , 793/2/ வடக்கு ராஜ வீதி, பிருந்தாவனம் கிழக்கு, புதுக்கோட்டையில் பாண்டியன் புத்த - அகம் நடத்துகிறார். புதுக்கோட்டையில் மிகப் பழமையான புத்தகக் கடை இது. இவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுகையில் கிடைத்த பணிக்கொடை தொகையைப் புத்தகக் கடையாக மாற்றியவர். பல எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள் இவரது கடைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். பல மனிதர்களை வாசகர்களாகவும் பல வாசகர்களை எழுத்தாளராகவும் மாற்றிப் பெருமை இவருக்குண்டு. புதுக்கோட்டையில் யார் நூல் வெளியிட்டாலும் இவரது கடைக்கு ஓரிரு பிரதிகள் அனுப்பிவிடுவதைப் புதுக்கோட்டை எழுத்தாளர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  பல மாதங்கள் தன் பென்சன் பணத்திலிருந்து கடைக்கு வாடகை செலுத்தியிருக்கிறார். தொடர் வாசிப்பாளர். திறனாய்வாளர்.  மனிதநேயம் கொண்டவர். எழுத்தாளர். நூற்றுக்கு 100 , இவரது சமீபத்திய தொகுப்பு. இந்நூலுக்கு என்னுரை தம்பட்டம் என்கிற தலைப்பில் தந்துள்ளார். இன்றைய சமூகத்தில் குற்றங்கள் பெருகி பலரது சொந்த வாழ்க்கை துன்பம் சூழ்ந்து இருப்பதற்குக் காரணம் மூலாதாரங்களையும் மறந்து போனதுதான். வேருக்கு நீர் ஊற்றாமல் பூவுக்கும்...

புதுக்கோட்டை எழுத்தாளர் -116

பொறிஞர் அகன் , தமிழரண் பாவாணர் மன்றம், சீனிவயல்,  கீரனூர். பொறியாளர்,ஆய்வாளர். நெஞ்சத் தவிப்பு என்ற நூல் மூலமாக அறிமுகமானவர். இதுதவிர மெய்மை, பாவலர் ஆவோம் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். நல்ல தமிழில் கதைகள் எழுதுகிறவர்.  இவரது உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் தமிழ்த் தேசிய ஓர்மை கதைகளாக வெளிவருகிறது. இவரது கதைகளில் திருவாளர்கள் பாவாணர், நெடுமாறன்,பிரபாகரன், திருமுருகன்,  தங்கப்பா, பறம்பை, அறிவன், தமிழாலயன் ஆகியோர்  ரசிக்கும்படியாக  உலா வருகிறார்கள். வடக்கே தலை வைத்துப்படுக்காதே என்பது முன்னோர் வாக்கு. வடக்கே இருந்து வரும் பகை வடுகப் பகை. அது தெலுங்கைக் குறிக்கும்.அதற்கும் வடக்கே இருந்து வருபவனைக் குறிக்கும். அவை நம்மைப் பொறுத்தவரை மொழிபெயர் தேயங்கள், என்கிறது இவரது முன்னுரை. நெஞ்சத் தவிப்பு, முப்பது கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. ' புலியூருக்கு அஞ்சி நரியூருக்குப் போனானாம்.  நரியூரும் புலியூராகி விட்டதாம்'; 'பார்ப்பானுக்கு மூத்த பறையன் கேட்பாரின்றி கீழ்சாதி ஆனான்' , போன்ற  சொல்லாடல்கள் கதைகளின் ஆழம் காட்டுகின்றன. தென்னல், ஒன்றாதல் கண்டே,போலி மாந்தர், புதை ...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 115

  அந்தோனி , பாத்திமா நகர், கே.வி.கோட்டை , ஆலங்குடி. ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி - வல்லத்திராக்கோட்டை முதுகலை ஆங்கில ஆசிரியர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர். சொற்களுக்கு உயிருண்டு என்பதை உணர்ந்து அதற்கேற்ப உரையாடுகிறவர். எதையும் விளம்பரத்திற்காக செய்யாமல் மண், மக்கள் பயனுற செய்கிறவர். கோடை கால விடுமுறையில் ஆண்டனியின் ஆங்கில இலவச பேச்சுப் பயிற்சி வகுப்பு எடுத்துவருகிறார்.   ஒற்றைப்பனை,  A PEEP AROUND , A ROSE IS A ROSE IS A ROSE  ஆகிய நூல்களின் ஆசிரியர். தூவானம் , எனும் இந்நூல் இவரது நான்காவது நூல். "ஆங்கில ஆசிரியர் தான் நான். ஆனால் வணிகம் செய்ய விரும்பவில்லை. இதயத்தையும் இந்தியாவையும் அன்பால் ஆக்கிரமிக்கவே விரும்புகிறேன். சுபயோக தினத்தில் அல்ல . உபயோக தினத்தில்தான் எனது நம்பிக்கையும் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அழகோடும் அளவோடும் கவிதைகள் இருக்க வேண்டும் என்று அன்போடும் அர்த்தத்தோடும் ஆலோசனை வழங்கிய ஐயா அருள்முருகன் அவர்களுக்கும்; கவிதைகளில் ஒளிபாய்ச்சி உளி பாய்ச்ச உதவிய ஆசான் பிரகாசம் அவர்களுக்கும்; கவிதைகளுக்கு ஞானத் தந்தையாக இருக்கும்...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 114

கவி.முருகபாரதி, சொல்லரசு எனச் சிறப்பிக்கப்படுகிறார். யோசி மனிதவளப் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். தலைமை பயிற்றுநர். கவிஞர், பேச்சாளர், மாணவர்களை உற்சாகமூட்டுவதில் தேர்ந்தவர். பத்திரிக்கையாளர், நகைச்சுவையுணர்வாளர்.  வளம்பெற யோசி என்னும் மாத இதழின் ஆசிரியர். புதுக்கோட்டையில் யோசி  என்கிற பெயரில் புத்தக நிலையம், பதிப்பகம் நடத்துகிறார். மோர்+ ரசம்+ முன்னேற்றம் எனும் இவரது நூல் பரவலான கவனிப்பைப் பெற்றது. கவிராசன் அறக்கட்டளை த் தொடங்கி புதுக்கோட்டை மாவட்ட சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறார். " மக்கள் சொல் கேளிர் " எனும் இந்நூல் பெற்றோர், ஆசிரியர்கள் சிறப்பானவர்களாக இயங்க பல வழிகளைச் சொல்கிறது. விரிந்து பாருங்கள்...! புரிந்து கொள்ளுங்கள்...! , கை குலுக்குங்கள்; கை நீட்டாதீர்கள்! கையைப் பிடிக்காதீர்; கையைக் கொடுங்கள்! கை பொடுங்கள்; கை போட அனுமதிக்காதீர்கள் ! பார்வையை மாற்றுங்கள்..! பிள்ளைகளை ஏற்றுங்கள்...! ஆகிய தலைப்புகளின் கீழ் கட்டுரையாடுகிறார். இந்நூலில் பல அனுபவ கீற்றுகள் சிதறல்களாக விரவிக்கிடக்கின்றன. அவற்றில் சில,, "பிள்ளைக...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 113

ஆ.ஞானப்பிரகாசம் , வல்லளார் நகர் - குரும்பூர், அறந்தாங்கி. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வள்ளலாரின் சமய சன்மார்க்கம் மீது பற்று கொண்டவர். ஆன்மீகவாதி. திருவள்ளுவர் , வினோ பாவே, காந்தியடிகள் , நம்மாழ்வார் , அப்துல் கலாம் இவர்கள் வலியுறுத்தும் கருத்துகளை ஏற்று அதன்படி நடப்பவர். பசுமை, இயற்கை, வேளாண்மை இவற்றின் மூலமே மனித மாண்பைக் காக்க முடியும், என நம்புகிறவர். உங்களால்தான் முடியும், எனும் இந்நூல் இவரது முதல் படைப்பு. நூல் அட்டை முதல் உள்பக்கங்கள் வரை பச்சை மயம்.  நிலா பதிப்பகம், அறந்தாங்கி. முதுமக்கள் தாழி,  பஞ்சகவ்யம்,  அமுதக் கரைசல் , அக்னி அஸ்திரம் , பீமா அஸ்திரம் தயாரிப்புகள் குறித்து குறிப்புக்கள் தருகிறார். இந்நூலில் இடம்பெற்ற தகவல்கள் யாவும் பயனுள்ளவை.  குறிப்பாக  எங்கெங்கு என்னென்ன மரங்கள் வளர்க்க வேண்டுமென தரும்  பட்டியல் யாவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. தண்ணீர் வசதி உள்ளவர்கள் வளர்க்க வேண்டிய மரங்கள் வாழை, கொய்யா, மாதுளை, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பேரீச்சை, தென்னை தண்ணீர் குற...

புதுக்கோட்டை எழுத்தாளர் -112

  எஸ். டோரதி ன்கிற டோரதி கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வி செயற்பாட்டாளர்.  ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சகோதரி ஒரு கவிஞர். அவரது பெயர் டோரதி. ஆகவே  அப்பெயரை இவருக்குச் சூட்டியிருக்கிறார்கள் பெற்றோர். இப்பெயரின் பொருள் கடவுளின் அன்பளிப்பு  திருச்சியில் பிறந்தவர். சென்னை இராணிமேரி கல்லூரியில் பணியாற்றும் பொழுது கிருஷ்ணமூர்த்தியைப் பதிவு திருமணமாக மணந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்த உருவாக்கிய அறிவுக் கோவில் புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஞானாலயா நூலகம் . வாழ்வதற்காக கட்டிய வீட்டை நூலகமாக மாற்றியவர்கள்.  ஒரு இலட்சத்திற்கும் மேல் நூல்களைக் கொண்ட நூலகம்.  சட்டபேரவை விவாதங்களின் போது முதலமைச்சர்களுக்கான பல குறிப்புகள் இந்த நூலகத்திலிருந்து சென்றிருக்கிறது. வாழ்க்கை அழகானது. எளிமையானது. கற்றது கை மண் அளவு; யாதும் ஊரே யாவரும் கேளிர்; செல்வம் என்பது சிந்தையின் நிறைவே,  யாவும் இவருக்குப் பிடித்தமான வாசகங்கள். இளம் வயதிலேயே ஆங்கில இலக்கியங்கள் வாசித்தார். The Crescent Moon என்கிற த...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 111

வைசி. கலைச்செல்வன் , வைகறை கவிஞர் என அழைக்கப்படுகிறார். பாடகர், முற்போக்கு சிந்தனையாளர். தீவிர இடதுசாரி அரசியலில் பயணிக்கும் இவர் கந்தர்வகோட்டை தாலுகா குளத்தூர் நாயக்கர்பட்டியில் பிறந்தவர். பதினைந்து வயதில் இவர் எழுதிய ரத்தம் ஒரே நிறம் என்கிற சமூக நாடகம் மாவட்ட அளவிலான ஆதி திராவிடர் நல விடுதிகளின் ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றது. 1989 இல் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை  படிக்கும்பொழுது ஓ..பாரதமே என்கிற கவிதை மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றது. சுதந்திர சோகம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. வைகரை பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் இந்நூலின் வடிவமைப்பு கரம்பக்குடி துரை ஆப்செட்,.  நூலின் முகப்பு இரத்தம் தேய்ந்த காஷ்மீர் என்கிற நூலின் அட்டையின் உள்படம். கீழ்வெண்மணியில் தீக்கிரையான  தியாகிகளுக்கும் ஆயிரம் நாட்களுக்கும் மேல் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முறியடிப்பதற்காக சிறையில் போராடிய பிரிக்கால் தொழிற்சாலை தோழர்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். திரைப்பட இயக்குநர் வெ.சேகர், கவிச்சுடர் கவிதைப்பித்தன்,  பழ. ஆசைத்தம்பி , அறிவொளி முருகேசன...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 110

டாக்டர் முத்துலெட்சுமி இயற்பெயர் நா.முத்துலெட்சுமி. நாராயணசாமி ஐயர் – சந்திரம்மாள் தம்பதிகளின் மூத்த மகள்.   மருத்துவர் டி. சுந்தர ரெட்டி யைத் திருமணம் செய்துகொண்டதால் முத்துலெட்சுமி ரெட்டி என அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிறந்தவர். ஸ்திரி தருமம் எனும் பத்திரிக்கையின் ஆசிரியர். முதல் பெண் மருத்துவர். முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினர். முதல் மேலவை துணைத் தலைவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் . திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பைத் தொடங்கி, பல உயரங்களைத் தொட்டவர். புற்றுநோய் ஒழிப்புக்காக அரும்பாடுபட்டவர்.   மேலும் பல்வேறு துறைகளில் முதன்மையாகத் திகழ்ந்த இவர் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதியுள்ள நூல்கள் பன்னிரெண்டு. 1. கர்ப்பிணிப் பெண்ணின் பாதுகாப்பு (Care of Pregnant woman ) 2.   கைக்குழந்தைகளின் உணவு முறை ( Infant Feeding) 3. இந்தியாவில் சிசு மரணம்  (Infant  Mortality in India) 4. சென்னையில் மாதர் சேவை (Women's works in Madras) 5 இந்தியாவில் திருமதி மார்கரெட்   கசின்ஸ் அம்ம...

புதுக்கோட்டை எழுத்தாளர் -109

  பா. அகத்திய நாடன் , கவிஞர். இயற்பெயர் பா. பிச்சைமுத்து. கவிஞர். குடுமியான்மலை அருகில் வயலோகம். கிராம அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்று காலமானவர்.  தீவிர இடதுசாரி. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) கட்சியின் முழுநேர ஊழியர் .  கல்லூரி காலத்தில் இந்திய மாணவர் சங்கத்திலும் பின் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்திலும் பொறுப்புகள் வகித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன் நின்று நடத்தியவர்.  1977- 80களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்தபோது இடதுசாரி அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். தொழிலாளி வர்க்கம் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து 1982 ஜனவரி 19 இல் இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் செய்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் வைக்கப்பட்டவர். பின் அரசு பணியில் சேர்ந்த போதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றார். ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டாக நடத்திய வீரம் செறிந்த வேலை நிறுத்தம் மறியல் போரில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அரசின் அட...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 108

  ராஜகவி வையாபுரி , காசவளநாடு சாமிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.  ஆலங்குடியில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் இவர் ஜவுளிக்கடை நடத்துகிறார். கவிஞர், பாடகர். இவரது கவிதைகளைப் பாராட்டும் கவிஞர்கள் கிராமத்துக்கீதமாய்,  உண்மையாய் இருப்பதால் ராஜமுத்திரை பதித்த கவிதை என்று கூறி ராஜகவி என்று அழைத்தார்கள். அதையே தன் பெயருக்கும் முன் இணைத்துக்கொண்டார். வசந்த காலம் இவரது முதல் தொகுப்பு. காவியத்தாயின் இளைய மகன் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தமிழரசி ஆசிரியர் முனைவர் ம.நடராசன் அணிந்துரையும் திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்த்துரையும் வழங்கியுள்ளார்கள். இத்தொகுப்பில் ஒரு கவிதை. தலைப்பு  விவசாயி ஏறு கட்டி உழுது விட்டேன் ஏரியில தண்ணி இல்லை மாடு ரெண்டை வித்துவிட்டேன்-நான் மனசு ஒடிஞ்சு போகவில்லை! மருங்குளத்தில நடவு நட்டு மானத்தையே பார்த்திருந்தேன் மானம் பார்த்து மழை பொழிய - அம்மா மாரியம்மனை வேண்டி நின்றேன்! குருங்குளத்தில தென்னையை நட்டு கொல்லையிலே குடியிருந்தேன் குருத்துப்பூச்சி அடிக்கக்கண்டு- மனம் குமறி நானும் மலைக்கவில்லை! காட்டு மேட்டை சீர்ப...