புதுக்கோட்டை எழுத்தாளர் – 160 கந்தர்வன் , இயற்பெயர் க.நாகலிங்கம் . கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், பேச்சாளர். வளரும் படைப்பாளர்களைத் தம்பி எனத் தட்டிக் கொடுத்து வளர்த்தெடுத்தவர். இளம் வயதில் அரசுப் பணிக்கு வந்துவிட்ட இவர், அவசர பிரகடனம் காலத்தில் இருபது மாதங்கள் வேலை இழந்து பின்னர் வேலையில் சேர்ந்தவர். இவரது பிறப்பிடம் இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் என்கிற கிராமம். இவரது தந்தையார் கணேசன் விடுதலைப் போராட்ட வீரர். 1983 ஆம் ஆண்டு வேலை மாறுதலால் புதுக்கோட்டைக்கு வந்தவர், இவ்வூரைச் சொந்த ஊராக மாற்றிக்கொண்டார். அரசு வருவாய்த் துறையில் மாவட்ட கருவூல அதிகாரியாக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மாநில பொறுப்புகளிலும் அங்கம் வகித்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவர். ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ தோன்ற காரணமானவர்களில் ஒருவர். பிறகு இச்சங்கம் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்றானது. இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவராக செயலாற்றினார். பேசுவதைப் போல எழுதவும் எழுதுவதைப் போல பேசவும் செய்தவர். ‘லா.ச.ராவுடன் ஒரு அழுத்தமான உரையாடல்’,...
அண்டனூர் சுரா