புதுக்கோட்டை எழுத்தாளர் - 169 க.தங்கவேலு , குறிஞ்சித்தங்கம் என்று அறியப்படுகிறார். திருக்கோகர்ணம் அபிராமி நகரில் வசித்துவரும் இவரது பூர்வீகம் இலங்கை பதுளை - கொள்ளுமண்டி தோட்டம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் கொடுங்கொல் தாக்குதலின் போது புலம் பெயர்ந்து தலைமன்னார் வழியாக தனுஷ்கோடி வந்தடைந்து அங்கேயிருந்து ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தவர். இந்தப் பயணத்தில் இவருக்கொரு துர்சம்பவம் நடந்தேறியது. இந்திய குடிமகன் என்கிற சான்று, மலையகத் தமிழருக்கான வெளிறிய சிவப்பு வண்ண இந்திய கடவுச்சீட்டு, மறுவாழ்விற்கான ஏனைய ஆவணங்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் யாவும் சூட்கேஸூடன் ரயிலில் களவுபோகிறது. மறுவாழ்வு ஆவணமில்லாமல் எந்த அரசாங்க வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாமல் தனியார் துறையில் வாழ்நாளைக் கழித்து வருகிறார். இவரது முதல் சிறுகதை உரம் பதுளை ஊவாக் கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் இலக்கிய வெளியீடு கலை விழா மலரில் வெளியானது. 1970 ஆம் ஆண்டு வாக்கில் வெளியான சிறுகதைகளையும் புதுக்கோட்டைக்கு அவர் புலம் பெயர்ந்தன்பிறகு எழுதிய சிறுகதைகளையும் உள்ளடக்கி கறிவேப்பிலைகள் என்கிற தலைப்பி...
அண்டனூர் சுரா