முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் -104,

 வாழை.வ.பூ.மணிமொழி,  வாழைக்குறிச்சி. குழிப்பிறை , திருமயம் ஒன்றியம். எழுத்தாளர், கவிஞர். நானிலம் எனும் மாத இதழின் ஆசிரியர். பழனி மடத்தை மீட்ட பழந்தமிழ் நான்கு நாட்டார்கள் எனும் வரலாற்று நூல் எழுதியிருக்கிறார். 

உழவர்களின் உற்ற தோழர் கே.எஸ்.அழகர்சாமி எனும் இந்நூல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த  போராட்டக் காலத்தைப் பேசுவதுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது.  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான காவிரி உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்றும்படி போராடி சிறைக்குச் சென்றவர் கே.எஸ்.அழகர்சாமி. 



கலைஞர் கருணாநிதி  எழுதிய நச்சுக்கோப்பை எனும் நாடகத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறந்தை நாராயணன் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். அன்னவாசல் பகுதியில் முதன்முதலில் தொடங்கப்பட்ட  வெற்றிலைக் கொடிக்கால் விவசாய்கள் சங்கத்தை நிறுவி போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றவர் அழகர்சாமி. 

1963 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின்படி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 230 கிராமங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது. 300 கிராமங்களுக்கு மேல் விடுபட்டு போயிருந்தன. இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டி போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டம் வெற்றி பெற்று மேலும் 114 கிராமங்கள் இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின்படி எடுத்துக் கொள்ளப்பட்டது, என்கிற குறிப்பு இந்நூலில் உண்டு. 

காவிரி உபரிநீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்குக் கொண்டுவரும்   முயற்சிகள் நடைபெற்றன. 1981 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றி தீர்மானத்தின்படி தோழர் கே எஸ் அழகர்சாமி தலைமையில் ஆண்களும் பெண்களும் மண்வெட்டி கூடைகளுடன் சென்று காவேரியில் இருந்து கால்வாய் அமைக்கும் போராட்டம் நடைபெற்றது. காவேரி ஆறு கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நுழையும் ஒகேனக்கல் அமைந்த தர்மபுரி மாவட்ட பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நஞ்சப்பன் புதுக்கோட்டை வருகை தந்து போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கருப்பையா போராட்டக்காரர்களை வரவேற்று கால்வாய் அமைக்க வழி கூறினார்.  அன்று போராட்டத்தில் கலந்திருந்த அனைவரையும் காவல்துறை கைது செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 'காவிரி உபரி நீர் கேட்டு போராடிய கம்யூனிஸ்டுகள் கைக்குழந்தையிடம் கைது' என்றும் மறுநாள் நாளிதழ்களில் பரபரப்பிடம் செய்திகள் வெளியாகின. 

இந்நூலுக்குப் பதிப்புரை எழுதியிருக்கும் எஸ்.சி.சோமையா ஒரு செய்தியைத் தருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அண்ணவாசல் ஒன்றியத்தில் சொக்கநாதன்பட்டியில் பி.பெரியையா, ஏ.தர்மராஜ், எஸ்.மருதைச்சொக்கநாதன், எஸ்.சின்னத்தம்பி நால்வரும் சிங்கப்பூர் செல்கிறார்கள். பெரியய்யா, தர்மராஜ், இருவரும் தமிழுடன் இந்தி, ஆங்கில மொழிகள் நன்கு அறிந்தவர்கள். அங்கு சென்றவுடன் மலாய், சீனம்,பர்மிய, ஜப்பானிய மொழிகளையும் கற்றுத் தேர்ச்சியுற்றனர். அப்போது இந்திய தேசியப் படையை தொடங்கி நிதி திரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர் வந்து கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்து கூறும் பணியைத் தர்மராஜ் செய்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பு திறனைப் பாராட்டிய நேதாஜி கைகுலுக்கி பாராட்டியுள்ளார். சிங்கப்பூர் தமிழ் மக்கள் அவருக்கு புல்லட் பைக் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி பெருமைப்படுத்தியுள்ளனர். 

இந்திய விடுதலை ஆதரவாளர்களான தர்மராஜ், பெரியய்யா, மருதைச்  சொக்கநாதன், சின்னத்தம்பி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டு தாய்நாடு திரும்பியிருக்கிறார்கள்., என பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தருகிறது இந்நூல்.


                               அண்டனூர் சுரா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...