கவி.கார்த்திக், ஊர் - அறந்தாங்கி. சுயதொழில் செய்கிறார. கவிஞர், சிந்தனையாளர்.
யாதுமாகி, இவரது முதல் கவிதைத் தொகுப்பு. பசித்திரு, விழித்திரு, தனித்திரு அவரை ஆயத்தப்படுத்தும் சொற்களாக உள்ளன. இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கவிஞர் #ஜீவி அவர்கள், மோருக்குள் கிடக்கிற வெண்ணெய் மாதிரி இவருக்குள் கவிதைக்கனம் திரண்டிருக்கிறது எனக் கண்டு சொல்கிறார். கண்களில் சுடரும் கவிதை வெறி , புறக்கணிப்புகளைச் செரிக்கும் நெஞ்சுரம் ஒரு நாள் உயர்வோம் என்கிற தாராள நம்பிக்கை இவற்றைக் கொண்டு தொடர்ந்து எழுதிவருகிறார். யாதுமாகி இவரைப் பலரிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. இத்தொகுப்பில் ஒரு கவிதைதலைப்பு - புரியாத புதிர்
தகுதி இல்லாதவர்க்கும்
அரியாசனம அளிக்கிறது
அறியா சனம்

கருத்துகள்
கருத்துரையிடுக