முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் -109

 பா. அகத்திய நாடன், கவிஞர்.இயற்பெயர் பா. பிச்சைமுத்து. கவிஞர். குடுமியான்மலை அருகில் வயலோகம். கிராம அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்று காலமானவர்.  தீவிர இடதுசாரி. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) கட்சியின் முழுநேர ஊழியர்.  கல்லூரி காலத்தில் இந்திய மாணவர் சங்கத்திலும் பின் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்திலும் பொறுப்புகள் வகித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன் நின்று நடத்தியவர்.  1977- 80களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்தபோது இடதுசாரி அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். தொழிலாளி வர்க்கம் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து 1982 ஜனவரி 19 இல் இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் செய்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் வைக்கப்பட்டவர். பின் அரசு பணியில் சேர்ந்த போதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றார். ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டாக நடத்திய வீரம் செறிந்த வேலை நிறுத்தம் மறியல் போரில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அரசின் அடக்குமுறைக்கும் டெஸ்மா சட்டத்தின்படி பணிநீக்கம் செய்யப்பட்ட கொடுமைக்கும் ஆளானவர். மார்க்சிய சிந்தனையோடு கூடிய இலக்கிய ஆர்வத்தோடு இவர் படைத்த அடையாளங்கள் என்னும் முதல் கவிதை தொகுப்பின் அறிமுக உரையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடும்போது "பாட்டாளி வர்க்க இயக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அனுபவத்தினையும் வாலிபர்களுக்கே உரிய தீவிர உணர்வினையும் இவரது கவிதைகளில் காணமுடிகிறது"என்றார். இவரது மகன்களுக்கு லெனின், ஸ்டாலின் எனப் பெயர்சூட்டியவர்.




நீதியின் பலம் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. பெரிய கடப்பாரையைக் கொண்டு பெரும் பாறாங்கல்லைப் புரட்டும் அளவில் முடியாவிட்டாலும் சிறிய துரும்பைக் கொண்டு பல்லின்  இடுக்குகளில் கறை அழுக்குகளையாவது குத்தி நீக்கலாம் என்ற சிறு முயற்சியே இந்நூல் என்கிறார்.

இந்நூலில் ஒரு கவிதை

காற்று திசை மாறும்

சனநாயக அரசியலின் கோரமுகங்கள்
கிழிபட்டு ஆடுகின்றன 'கட் அவுட்' களில்
ஆடிக்காற்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...