முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் -112

 எஸ். டோரதி ன்கிற டோரதி கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வி செயற்பாட்டாளர்.  ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சகோதரி ஒரு கவிஞர். அவரது பெயர் டோரதி. ஆகவே  அப்பெயரை இவருக்குச் சூட்டியிருக்கிறார்கள் பெற்றோர். இப்பெயரின் பொருள் கடவுளின் அன்பளிப்பு 







திருச்சியில் பிறந்தவர். சென்னை இராணிமேரி கல்லூரியில் பணியாற்றும் பொழுது கிருஷ்ணமூர்த்தியைப் பதிவு திருமணமாக மணந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்த உருவாக்கிய அறிவுக் கோவில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஞானாலயா நூலகம். வாழ்வதற்காக கட்டிய வீட்டை நூலகமாக மாற்றியவர்கள்.  ஒரு இலட்சத்திற்கும் மேல் நூல்களைக் கொண்ட நூலகம். சட்டபேரவை விவாதங்களின் போது முதலமைச்சர்களுக்கான பல குறிப்புகள் இந்த நூலகத்திலிருந்து சென்றிருக்கிறது.

வாழ்க்கை அழகானது. எளிமையானது. கற்றது கை மண் அளவு; யாதும் ஊரே யாவரும் கேளிர்; செல்வம் என்பது சிந்தையின் நிறைவே, யாவும் இவருக்குப் பிடித்தமான வாசகங்கள்.

இளம் வயதிலேயே ஆங்கில இலக்கியங்கள் வாசித்தார். The Crescent Moon என்கிற தாகூரின் நூலை வாசிக்க, அந்நூல் அவருக்குப் பிடித்துப்போக ஒரே இரவில் இந்நூலை மொழிபெயர்ப்பு செய்தவர்.

திருமணத்திற்குப் பின்  மாமன்னர் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் பணியாற்றியவர்  புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கற்பித்தல் பணி 32 ஆண்டுகள். அறிவொளி இயக்கக் காலத்தில் மாவட்டத் துணைத் தலைவராக இருந்துள்ளார்.

தாகூரின் - Cresent moon ( வளர்பிறை ) Stray Birds ( சிந்தனைப் பறவைகள் ), கபீர் Poems ( கபீர்தாஸ் பாடல்கள் ), Aten borough's Lie on Earth ( பரிணாமத்தின் கதை ), Furgitive Auralius -Meditations ( ஆத்மதாகம்),  அரபிய இரவுகள், அறிவியல் கட்டுரைகள் இவர் மொழிபெயர்த்த நூல்களாகும். இது தவிர டோரதி கவிதைகள் என கவிதை நூல் படைத்துள்ளார்.

தாகூரின் கவிதை மலர்கள் எனும் இந்நூல் கல்லூரியில் இளங்கலை மாணவியராக இருக்கையில் மொழி பெயர்த்தது. இந்நூலுக்கு அணிந்துரை வி.ஆர்.எம். செட்டியார்.இவரது மொழிபெயர்ப்பில் இரண்டு பத்திகள்.





1.
அடிமை மனப்பான்மையுள்ள தூரிகை, குறுகிய சித்திரத் திரையின் அளவுக்கே உண்மையைக் குறைத்துக்காட்டுகிறது.

2.

ஏ மதியிழந்தவனே ! உன்னையே உன் தோளின்மேல் ஏன் தூக்கிச் சுமக்கிறாய்? ஏ, பிச்சைக்காரனே !உனது கதவண்டை ஏன் பிச்சை கேட்கிறாய்?
சுமையின் பொறுப்பை ஏற்றுக் கொள்பவனிடம் உனது கவலையை விட்டுவிடு. வருந்தித் திரும்பிப் பார்க்காதே. உனது ஆசை உனது உள் ஒளியை அணைக்கிறது. இது சுத்தமற்ற நிலை. அருட்காதலில் விளையும் கொடைகளையே அன்புடன் ஏற்றுக்கொள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...