முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 113

ஆ.ஞானப்பிரகாசம், வல்லளார் நகர் - குரும்பூர், அறந்தாங்கி. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வள்ளலாரின் சமய சன்மார்க்கம் மீது பற்று கொண்டவர். ஆன்மீகவாதி. திருவள்ளுவர் , வினோ பாவே, காந்தியடிகள் , நம்மாழ்வார் , அப்துல் கலாம் இவர்கள் வலியுறுத்தும் கருத்துகளை ஏற்று அதன்படி நடப்பவர். பசுமை, இயற்கை, வேளாண்மை இவற்றின் மூலமே மனித மாண்பைக் காக்க முடியும், என நம்புகிறவர்.


உங்களால்தான் முடியும், எனும் இந்நூல் இவரது முதல் படைப்பு. நூல் அட்டை முதல் உள்பக்கங்கள் வரை பச்சை மயம்.  நிலா பதிப்பகம், அறந்தாங்கி.




முதுமக்கள் தாழி,  பஞ்சகவ்யம்,  அமுதக் கரைசல் , அக்னி அஸ்திரம் , பீமா அஸ்திரம் தயாரிப்புகள் குறித்து குறிப்புக்கள் தருகிறார்.

இந்நூலில் இடம்பெற்ற தகவல்கள் யாவும் பயனுள்ளவை.  குறிப்பாக  எங்கெங்கு என்னென்ன மரங்கள் வளர்க்க வேண்டுமென தரும்  பட்டியல் யாவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.


தண்ணீர் வசதி உள்ளவர்கள் வளர்க்க வேண்டிய மரங்கள்

வாழை, கொய்யா, மாதுளை, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பேரீச்சை, தென்னை

தண்ணீர் குறைவாக உள்ளவர்கள் வளர்க்க வேண்டிய மர வகைகள்

மா, சப்போட்டா, முந்திரி, சந்தனம் , செஞ்சந்தனம், மகோகனி, களா, முள்ளில்லா மூங்கில்

தண்ணீரே இல்லாத மானாவாரி நிலங்களில் வளர்க்க வேண்டிய மர வகைகள்

வேம்பு, வாதா, வாகை, புங்கன், புளி, சூபாபுல், வேங்கை, வேலா கருவேல், இலவம், ஒதியன்

கட்டாந்தரையில் வளர்க்க வேண்டிய மர வகைகள்

உசிலை, வெட்பாலை, கொன்றை, மாங்காது வேல், வாகை, சூபாபுல்

மணல் சாரியான மண்ணில் வளர்க்க வேண்டிய மரங்கள்

முந்திரி, பனை , உடைவேலா

 களிமண் நிலங்களுக்கு ஏற்ற மரங்கள்

கருவேல், வெள்வேல், சூபாபுல் வாகை, வேம்பு, புங்கன், புளி, கொடுக்காய்ப்புளி, நாவல், நெல்லி , வில்வம், விளா

களர் உவர் நிலங்களுக்கு ஏற்றவை

உடைவேலா, வெள்வேலம்

நீர் பிடிப்பு பகுதி வளர்க்க வேண்டிய மர வகைகள்

நீர்மருது, நீர்க்கருவேல், நாவல், கடம்பு

கோவில்களில் வளர்க்க வேண்டிய மரங்கள்

மகிழம், ஆல், அரசு ,அத்தி,  இத்தி, வேம்பு, நாவல், நெல்லி, நாகலிங்கம் , மாவிலங்கம் , வில்வம், வன்னி,  புன்னை, புரசு, மா, வேங்கை

ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவிகளில் வளர்க்க வேண்டிய மர வகைகள்

பனை, புங்கன், புளி, வேம்பு, நாவல், வில்வம், விளா, மா, பாலை, கடுக்காய், தான்றி, ஆல்,  உசிலை, மாவிலங்கம், புரசு, பூவரசு

கால்நடை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதவர்கள் வளர்க்க வேண்டிய பாட வகைகள்

பனை, புங்கன், கொன்றை வகை, அழிஞ்சில், காஞ்சிறா, வெட்பாலை, பொரிசி, புரசு, ஆவி, ஆயா, ஆச்சா, நரிவிழி, பானை, பாலை, வில்வம், விளா, சீத்தா, சொர்க்க மரம்.

ஒரு மரத்தின் சமன் என்னவென்று ஒரு பாடலில் பாடுகிறார்.

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம். பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு குழந்தைக்குச் சமம். பத்து குழந்தைகள் ஒரு மரத்துக்குச் சமம்.

- மாமனிவர் சரபாலர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...