கவி.முருகபாரதி, சொல்லரசு எனச் சிறப்பிக்கப்படுகிறார். யோசி மனிதவளப் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். தலைமை பயிற்றுநர்.
கவிஞர், பேச்சாளர், மாணவர்களை உற்சாகமூட்டுவதில் தேர்ந்தவர். பத்திரிக்கையாளர், நகைச்சுவையுணர்வாளர். வளம்பெற யோசி என்னும் மாத இதழின் ஆசிரியர். புதுக்கோட்டையில் யோசி என்கிற பெயரில் புத்தக நிலையம், பதிப்பகம் நடத்துகிறார். மோர்+ ரசம்+ முன்னேற்றம் எனும் இவரது நூல் பரவலான கவனிப்பைப் பெற்றது. கவிராசன் அறக்கட்டளைத் தொடங்கி புதுக்கோட்டை மாவட்ட சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறார்." மக்கள் சொல் கேளிர்" எனும் இந்நூல் பெற்றோர், ஆசிரியர்கள் சிறப்பானவர்களாக இயங்க பல வழிகளைச் சொல்கிறது. விரிந்து பாருங்கள்...! புரிந்து கொள்ளுங்கள்...! , கை குலுக்குங்கள்; கை நீட்டாதீர்கள்! கையைப் பிடிக்காதீர்; கையைக் கொடுங்கள்! கை பொடுங்கள்; கை போட அனுமதிக்காதீர்கள் ! பார்வையை மாற்றுங்கள்..! பிள்ளைகளை ஏற்றுங்கள்...! ஆகிய தலைப்புகளின் கீழ் கட்டுரையாடுகிறார்.
இந்நூலில் பல அனுபவ கீற்றுகள் சிதறல்களாக விரவிக்கிடக்கின்றன. அவற்றில் சில,,
"பிள்ளைகளுக்கு உதவுவதுதான் நம் வேலையை தவிர, நான் சரி என்றோ- நீ தவறு என்றோ நிரூபிப்பது அல்ல"
"உங்களின் நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் போதாது. உங்கள் வெளிப்பாடும் சிறப்பானதாக இருக்க வேண்டும்".
" உயர்நிலையில் நின்று உபதேசம் செய்யாதீர்கள். சமநிலையில் நின்று கலந்துரையாடுங்கள்"

கருத்துகள்
கருத்துரையிடுக