ப. முத்துப்பாண்டியன், 793/2/ வடக்கு ராஜ வீதி, பிருந்தாவனம் கிழக்கு, புதுக்கோட்டையில் பாண்டியன் புத்த - அகம் நடத்துகிறார். புதுக்கோட்டையில் மிகப் பழமையான புத்தகக் கடை இது. இவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுகையில் கிடைத்த பணிக்கொடை தொகையைப் புத்தகக் கடையாக மாற்றியவர். பல எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள் இவரது கடைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். பல மனிதர்களை வாசகர்களாகவும் பல வாசகர்களை எழுத்தாளராகவும் மாற்றிப் பெருமை இவருக்குண்டு. புதுக்கோட்டையில் யார் நூல் வெளியிட்டாலும் இவரது கடைக்கு ஓரிரு பிரதிகள் அனுப்பிவிடுவதைப் புதுக்கோட்டை எழுத்தாளர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பல மாதங்கள் தன் பென்சன் பணத்திலிருந்து கடைக்கு வாடகை செலுத்தியிருக்கிறார். தொடர் வாசிப்பாளர். திறனாய்வாளர். மனிதநேயம் கொண்டவர். எழுத்தாளர்.
நூற்றுக்கு 100 , இவரது சமீபத்திய தொகுப்பு. இந்நூலுக்கு என்னுரை தம்பட்டம் என்கிற தலைப்பில் தந்துள்ளார். இன்றைய சமூகத்தில் குற்றங்கள் பெருகி பலரது சொந்த வாழ்க்கை துன்பம் சூழ்ந்து இருப்பதற்குக் காரணம் மூலாதாரங்களையும் மறந்து போனதுதான். வேருக்கு நீர் ஊற்றாமல் பூவுக்கும் பலத்துக்கும் ஆசைப்படுவது போல, என்கிறார். இந்த நூலில் திருவள்ளுவர், காண்டேகர், அண்ணா, கண்ணதாசன் , ஓஷோ என ஐயரின் முத்துகளை வாசகனுக்குத் தொகுத்து தந்துள்ளார். இன்று வரை வாழ்க்கையில் தன்னை வழிநடத்திச் செல்வது இவர்கள் ஐவரும்தான் என்கிறார். ஐவரின் முத்துகள் தலா இருபது வீதம் நூறு முத்துகளின் தொகுப்பு இந்நூல்.
இந்த நூலில் கவிஞர் கண்ணதாசனின் ஒரு முத்து இவ்வாறு பாடுகிறது.
போற்றுபவர் போற்றட்டும் - புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும் - தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தினை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன் - அஞ்சேன்.


கருத்துகள்
கருத்துரையிடுக