முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 119

செவ்வூர் வடுமு வைத்யலிங்க கவிராயர். செவ்வூர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். இவர் விராலிமலையில் பெருங்காலம் வாழ்ந்தவர். விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மீது அவருக்கிருந்த பற்றால் விராலிமலைக் குறவஞ்சி பாடியுள்ளார்.  ஓலைச்சுவடியாக இதை இயற்றியவர் ஓலைச்சுவடியில் ஒவ்வொரு ஓலையிலும் ஏழு வரிகள் வீதம், 32 ஏடுகளில் எழுதியுள்ளார். 30.10.1955 அன்று இந்த ஓலைச்சுவடு  கையெழுத்துப்பிரதியாக்கப்பட்டது. இவ்வோலையைச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கியவர், சிங்காரவேலு கவிராயர். இவர் திருச்சி மாவட்டம், மிதிலைப்பட்டியைச் சேர்ந்தவர். இந்நூலை ஜெ. சந்திரிகா என்கிற ஆய்வு மாணவியர் , சென்னைப் பல்கலைக் கழகம் வாயிலாக பதிப்பித்திருக்கிறார்.

புதுக்கோட்டை விஜயரகுநாதராய தொண்டைமான் அமைச்சரவையில் சுப்ரமணிய முதலியார், என்றொரு அமைச்சர் இருந்தார். புதுக்கோட்டை கோவில் திருவிழாக்களில்போது இந்த விராலிமலைக் குறவஞ்சி எனும் நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ளார்.




குறவஞ்சியின் பொது அமைப்புகளான கட்டியக்காரன் வருகை, கட்டியக்காரன், பாட்டுடைத் தலைவன் பவனி வருகையை அறிமுகப்படுத்துதல், பாட்டுடைத் தலைவன் பவனி வருதல், பவனி வந்த தலைவனை மோகினி காமுறுதல், மயங்கிய மோகினி, சந்திரன், தென்றல் முதலியவற்றை நிந்தித்தல், பாங்கி மோகினியின் நிலைகண்டு அவளை உசாவுதல், தலைவி பாங்கிக்கு உற்றது உரைத்தல், குறத்தி வருதல், தலைவி, குறத்தி தனது மலைவளம், நாட்டுவளம் முதலிய கூறல், தலைவி குறத்தியிடம் குறி கேட்டல், குறத்தி தலைவிக்குக் குறி கூறல், தலைவி குறத்திக்குப் பரிசு வழங்கல், குறவன் வருகை, பறவைகள் பிடித்தல், குறவன் குறத்தியைக் காணாது தேடுதல், குறவன் குறத்தியின் அடையாளத்தைக் கூறல், குறவன் – குறத்தி சந்தித்தல், குறவன் குறத்தியிடம் உள்ள அணிகலன்கள், குறத்தி குறவன் வினாக்களுக்கு விடைகூறல், குறவன் – குறத்தி இருவரும் அகமகிழ்ந்து இணைதல் முதலிய இந்நூலில் பொருந்தியுள்ளன.

 மேலும் இந்நூலில் புதுக்கோட்டை மாவடத்திற்குரிய வழக்குச் சொற்கள் விரவியுள்ளன. கெம்பாடய்யே, சிக்கிச்சடய்யே, பேசாரையே, போயினுமையே, வருகினுமையே, மெய்யினுமய்யே, சேருதய்யே, கண்டநடய்யே, நானடய்யே, கேளுங்கடய்யே, கேளீரம்மே, மரியாதி, மதப்பயல், கும்புகும்பாவவே, கொளளைக் கொள்ளையாக, சட்டாவாய், சபாசி, தீராட்டம், மொண்ணை மூக்கு, பருசம், உருமையாய், போறது, உசந்த, சிறுக்கி, சிக்குது ஆகிய சொற்கள் இதில் குறிப்பிட தகுந்தவை.

குறித்தி கண்டுவந்ததாக கீழ்காணும் தேசங்களைக் கூறுகிறாள்

வடகாசி, வங்காளம், மலையாளம், மாகதம், கச்சி, கபாடம், கொங்கம், குடகம், துருவம், சீனம், குலிங்கம், விலாடம், சிங்களம், ஈழவம், சாழுவம், கங்கம், துளுவம், கேசயம், கண்டி, திரிகூடம், கலிங்கம், விராடம், கொச்சி, கர்நாடகம், இந்துஸ்தானம், துலுக்கானம், கேளம், சிந்து, டில்லி, கொல்லம்

குறத்தி சென்று வந்த தெய்வத் தலங்கள்

சீரங்கம், திருவானைக்காவல், சிராபள்ளி, திருவாடுதுறை, கண்ணபுரம், திருவையாறு, கண்டியூர், குடந்தை, மத்தியார்ச்சுனம், சிதம்பரம், சீர்காழி, பேரம்பலம் ( சிதம்பரம்), திருக்குத்தாலம், வேங்கிடம், காஞ்சிபுரம், பேரூர், திருவாரூர், வேளூர், மறைக்காடு, பெருந்துறை, செங்காட்டங்குடி, மன்னார்கோயில், திருவெண்காடு, நாவலூர், மாயூரம், திருவிடைமருதூர், திருவாடனை,ராமேசுரம்,உத்திரகோசமங்கை, திருச்செந்தூர், தென்காசி, கூடல், திருக்கோட்டியூர், திருவேட்கம்,திருக்கழுக்குன்றம், ஆவின்குடி, வடகாசி, அண்ணாமலை, கருவூர், கடம்பர்கோயில், வயலூர்.

குறச்சாதி வித்தைகளாகக் குறத்தி கூறுபவை

ஆனைகளைப் பிடித்து கரகத்தில் அடைத்தல், சிங்கத்தைக் குரங்காட்டம் செய்தல், பூனையைப் புலிவடிவாக்குதல், புலியைப் பூனைவடிகாக்குதல், மானைப் பிடித்து இடையில் கட்டுவோம், கரடியாட்டத்தைக் கண்டு மகிழ்தல், மரப்பாவையைச் சிரிக்க வைத்தல், எட்டிக்காயை மாங்கனியாக்குதல், இரும்பையும் செம்பையும் தங்கமாக்குதல், தண்ணீருக்குள் சென்று சோறு சமைத்தல், தண்ணீரில் கல் மிதக்க வைத்தல், அக்கினியில் ஏறி நடத்தல், புவியை அரைக்கணத்தில் வலம்வருதல் ஆகியவை குறச்சாதி வித்தைகள் என்கிறார்.

மேடை நாடகத்திற்கேற்ற குறவஞ்சி இது. நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும்படியான ஓலைச்சுவடி கால காவியம் இது.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...