முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் -120

 கசி. விடுதலைக்குமரன்,  நரிமேடு, புதுக்கோட்டை.  கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர். மக்கள் விடுதலைக்கான களத்தில் , தனது முழு நேர வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்த களச் செயற்பாட்டாளர். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை தமது சி.பி.ஐ ( எம் -எல் ) மக்கள் விடுதலை அங்கீகரிக்கிறது, என்று சொல்லும் இவர் கல்லூரி பருவத்தில் போராட்டக்கள அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர்.





1983இல் வெளிக்கடை சிறைச்சாலை படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இனவுணர்வு வெடித்து சிதறியது. அந்தப் போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்டு கருப்பு சட்டையோடு கல்லூரிக்குள் நுழைந்தவர் சிவப்பு சிந்தனையோடு வெளியேறினார். இவருடைய அரசியல் குரு ஜெ. சிதம்பரநாதன். புதுக்கோட்டையின் சிற்பி, என தோழர் க.மு. வல்லத்தரசு எனத் தொடர்ந்து பரப்புரையாற்றி வருகிறவர். 

சாதி ஒழிப்பு - மாற்றத்திற்கான முதன்மைப் பணி எனும் இந்நூல் மக்கள் விடுதலை பதிப்பகம் வெளிவந்துள்ளது. அணிந்துரை பாட்டாளி. மதிப்புரை மு. வேதரெத்தினம் ( ஆன்மீகப் பொgதுவுடைமை நெறியாளர் ).

சாதியின் தோற்றம், சாதிக்கும் அரசுக்கும் என்ன உறவு , ஆங்கிலேயரும் சாதியும் , சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் , சாதிய சமூகமும்  - முதலாளித்துவமும்,  உடனடி இயக்கத்திற்கான கோரிக்கைகள் , சாதியைத் தகர்த்தெறிவது எப்படி? ஆகிய தலைப்புகளில் இந்நூல் ஆழமாக பேசுகிறது.

அகமணம்,  புறமணம் என்பதற்கு புதுவரையறை இந்நூல் தருகிறது.  மேற்கத்திய நாடுகளில் இனக்குழுக்கள் அழிவிலேதான் தேசிய இனம், நாடு, அரசு போன்றவை உருவாகி இருக்கின்றன. ஆனால் நம் நாட்டில் இனக்குழுக்கள் சாதியாக, நாடாக உருமாற்றம் கொண்டுள்ளன. விவசாய உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் மத்தியில் இருந்தே இன்று நாம் காணும் பெரிய சாதிகள் அனைத்தும் தோன்றி உள்ளன.  சாதிகள் ஒருங்கிணைந்து வாழ்ந்த போது நில உரிமையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. அதுவே சாதியில் உயர்வு தாழ்வுகளை உருவாக்கியது. மேலை நாடுகளில் இனக்குழுக்களின் அழிவிலே அரசுகள் தோன்றியுள்ளன. ஆனால் நம் மண்ணில் இனக்குழுக்களின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சாதிகளை ஒழிக்காமலேயே அரசுகள் தோன்றியுள்ளன. மநு கொள்கைக்கு எதிராக தோன்றியது வலங்கை, இடங்கை சாதிகள் பிரிவு. ஆனால் பிராமணம் இந்த இரு பிரிவுகளுக்கும் மேலானது எனக் காட்டிக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தியது. ஆங்கிலேயர்கள் இந்த வலங்கை இடங்கை  98 , 98 சாதிகளுக்குள் சண்டையை மூட்டும் பொருட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டது,  என மார்க்ஸ்- ஏங்கல்ஸ் பார்வையில் சாதியின் தோற்றம்- வளர்ச்சி - போக்கு குறித்து இந்நூல் பேசுகிறது.

சாதியை ஒழிக்க ஒரு வழியைச் சொல்லும் இந்நூல் சாதி ஒழிப்புக்கு முன்னால் அரசு செய்தாக வேண்டிய சில வழிமுறைகளையும் சொல்கிறது.

சாதி ஒழிப்புக்கான முதன்மையான பணி இந்நூலை வாசிப்பதிலிருந்து தொடங்கலாம்....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...