முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 124

க.மணி. பாரப்பட்டி, குளத்தூர். சுயத்தொழில் செய்கிறார். உண்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் தனது சிந்தனை பயன்பெறட்டும்,  என்பதாக கவிதைகளைப் பாவிக்கிறார்.




ஆனந்த ரதம்,  இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காட்டுவாசி எழுதும் கடுதாசி என்கிறார் இக்கவிதைகளை.கவிதை என்பது கட்டுப்படுவதல்ல,  பின்னப்படுவது, என்பது இவரது படைப்பூக்கப் பார்வை.

இந்நூலுக்கு அணிந்துரை பேரா. சு.மாதவன் அவர்கள். சமூகம் படைப்பினைப் படைக்கிறது. படைப்போ அடுத்தக்கட்ட சமூகத்தையே படைக்கிறது, என்கிறார் தன் அணிந்துரையில்.

புதுக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீரா பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. பதிப்புரை எழுதியிருக்கும் கவிஞர் மீரா சுந்தர், இவரை இயற்கைக் கவிஞர் என்கிறார்.  குமரகுருபரருக்குக் குழந்தைப் பருவத்தில் சக்தி யின் அருளால் ஞானம் கிடைத்தது போல, கல்வியறிவு அதிகம் பெறாத க.மணிக்கு இயற்கை அன்னை கடைக்கண் காட்டியுள்ளது, என்கிறார்.

எம்மொழியும் நம்மொழி,  தவம், அரும்புகளே, தண்ணீரைத் தேடும் கண்கள் என கவித்துவமான தலைப்பிட்ட கவிதைகளில் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு முன்னுரை தந்து கவிதை இயற்றிருப்பது வாசிக்க மட்டுமல்ல, வடிவத்தாலும் புதிதாக இருக்கிறது.

சுதந்திரப் பறவை என்றொரு கவிதை.

முன்னுரை

துன்பமில்லாத இடமில்லை
துன்பப்படாத இனமில்லை



கோடி கோடியா இருந்தாலும்
குழப்பமும் கூடக் கலந்திருக்கும்- நிலம் வேலி வேலிய அமைந்தாலும்
வேதனை புகுந்து குடியிருக்கும்

நாடாளும் அரசனுக்கும்
கூடாத பயம் பெறக்கும்
நாடாத முனிவரையும்
நாடி வந்து வினையிழுக்கும்

மணமான இளைஞருக்கும்
மருந்தாகச் சுகம் கிடைக்கும்
மழைக்கால மானாலும்
மரம்விட்டு இலை இறக்கும்.

விஞ்ஞானி யானாலும்
வேதாந்தி யானாலும்
மெயென்ற கையுறையில் -துன்பம் மெதுவாக நுழைந்துவிடும்!

துன்பம் ஆட்சி செய்ய
சுதந்திரம் தலையாட்டும்
இன்பம் காட்சி தர
இதயத்தை அலையாட்டும்










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...