முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆலங்குடி வெள்ளைச்சாமி

புதுக்கோட்டை எழுத்தாளர் -125

ஆலங்குடி வெள்ளைச்சாமி , ஆலங்குடி அருகிலுள்ள கீழாத்தூரில் பிறந்தவர். ஓர் இசைப்பாடகனாக கலைப் பயணத்தைத் தொடங்கி பேச்சாளர் , கவிஞர், பாடலாசிரியர், பட்டிமன்ற- பாட்டுமன்ற நடுவர் வரைக்குமாகத் தன் திறமை உருமாற்றத்தால் வடிவமைத்துக்கொண்டவர். இவர் முறையாக கற்றுக்கொண்ட  இசைக்கலை இவரது தொடர் வளர்ச்சிக்கு உந்துவிசையாக இருந்துவருகிறது.  தமுஎகச பொறுப்பாளர்.  வீதி நாடகங்கள் மற்றும் தனி இசைப்பாடல்களில்  தனி முத்திரை பதித்து வருகிறார். யூடியூப் சேனல் மூலமாக அரசியல், கலை, இலக்கியம், விமர்சனம்,.. எனப் பல்துறைகளில் பயனுள்ள கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறார்.  


கவிதை எழுதும் தருணம் இவருக்கு மழையில் நனையும் கணமாக இருக்கிறது. அப்பத்தாவின் கருக்கருவா, இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ஆனந்த விகடன், செம்மலர், இணைய இதழ்கள்,...என பல இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு இது. அவர் வாழ்ந்த கிராமத்தின் வாழ்க்கை, தடம்,  உறவுகள்,  ஊர் ,மண்,மனிதர்கள், எனத் தொன்மைக் காலத்திலிருந்து இன்று மறைந்தும் மறந்தும்போன பொருட்கள், சொல்லாடல்களைக் கொண்ட தொகுப்பாகவும் இந்நூலை அணுக முடிகிறது.  எளிய சொல், எளிய பதம் மனதிற்கு நெருக்கமான அனுபவங்களைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பு அப்பத்தா கையில் வைத்திருக்கும் கருக்கருவாளால் மனதைக் கோதிவிடுகிறார். இத்தொகுப்பில் ஒரு கவிதை.


தாத்தாவின் கும்பா

எங்களின்
எவர்சில்வர் தட்டோடு
ஒப்பிட முடியாத உயரத்தில்
ஒற்றைக் காலில்
தாத்தாவை நோக்கி தவம் செய்யும் அவரின் வெண்கல கும்பா

குளித்து பட்டையடித்து
தாத்தா சம்மனமிட்டு
அமர்ந்ததும்
வெங்கலக் கும்பாவில்
சோறு போட்டுச் சரட்டிவிடுவாள்
அப்பத்தா

தாத்தா மயானத்துக்குப்
போனதும்
பரணில் முடங்கியது கும்பா

தாத்தா நினைவு நாளில்
அப்பா திதி கொடுக்கும்போது
இறங்கி வந்து மீண்டும் பரணேறும் அது

பஞ்சம் ஆட்கொண்ட
ஓர் ஆண்டில்

கும்பாவை விற்று
கொஞ்சம்
பசியைப் போக்கிக்கொண்டோம்

இபோதெல்லாம்
கும்பாவுக்கும் சேர்த்தே
திதி கொடுக்கிறார்
அப்பா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...