முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க.வெ.நடேசக் கோனார்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 131


க.வெ.நடேசக் கோனார். நாட்டுப்புறப் பாடகன். அமிர்தகவி என அழைக்கப்படுகிறார். திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளான்விடுதி இவரது சொந்த ஊர். புயல், பூகம்பம், கொலை போன்ற துயரங்களை அனுதாபக் கீதங்களாகப் பாடி மக்கள் உள்ளத்தைச் சாந்தப்படுத்தியிருக்கிறார். பாடுவதையே தொழிலாகக் கொண்டு வறுமை நிலையோடு வாழ்ந்து மறைந்துள்ளார். வடகாடு வயி.மு.மு.நடராசன் செட்டியார், சி.வீர.சின்னையா சேர்வை, புள்ளம்பாடி புலவர் பெருமான், பு.கா.காதர் இபுராஹிம்,  அ.க.அரங்குளவன் செட்டியார் போன்ற புரவலர்கள் இவரை ஆதரித்துள்ளார்கள்,  என்கிறார் நடேசக் கோனாரின் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கும் புலவர் சி.துரைமாணிக்கம் அவர்கள்.

மேலும் நடேசக் கோனார்  பாடிய மகாகாந்தியம்,  குஞ்சம்மாள் கொலைச்சிந்து, குடும்ப வினோதப்பாட்டு, தோணிப்பாட்டு, இரண்டாவது புயல் சிந்து, விடுதலைப் பாட்டு, ஆடிப்பூரக்கும்மி, சொரிசிறங்குப் பாட்டு, பாலசுப்பிரமணியம் பதிகம் போன்ற பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை.



மக்கள் பாடலைக் கொண்டே மக்களுக்குச் சீர்த்திருத்தக் கருத்துகளை வழங்கியவர் இவர். விஜயகானம், அறுகொலைச் சிந்து போன்ற கதைவடிவம் கொண்ட பாடல்கள் இவருடையது.  இவரது மற்றொரு நூல் விஜயானந்தக் களிப்பு. 

ஆற்றுப்பாசனம் கொண்ட தஞ்சாவூர், பாசனமற்ற புதுக்கோட்டை இவ்விரு மாவட்ட ஊர்கள் அருகருகே இருந்தும் பெண் எடுத்தல் கொடுத்தல் இல்லாத போக்கை ஏற்றப்பாட்டின்  வடிவத்தில் பாடியுள்ளார். இவர் காந்தியவாதி என்பதால் பல பாடல்களில் காந்திய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன.

தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியிலும் பெருமளவில் நடக்கும் மொய்விருந்து விழாவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இவரது பாடல்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தவர் புலவர் துரைமாணிக்கம். இவர் எம்.பில் ஆய்வுக்காக புதுக்கோட்டை நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கையில் நடேசக் கோனாரும் அவரது நாட்டுப்புறப் பாடல்களும் மக்களால் பாடப்பட்டு வருவதை உள்வாங்கினார். பிறகு அவரது பாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார். இதற்காகப் புலவர் சி.துரைமாணிக்கம் அவர்களுக்கு எமது நன்றிகள்.

விஜயகானம் எனும் நூல் வீரவாளால் வெற்றிகொண்ட விசயரெகுநாத வணங்காமுடி வழுவாட்டித் தேவர் என்ற  சேந்தன்குடி ஜமீன்தார் அவர்களின் வீரச்செயல்,  தெய்வப்பக்தி பற்றி பாடுகிறது.

இதுதவிர, கல்யாணப்பாட்டு,  ஆனந்தக் களிப்பு, மதுவிலக்குப்பாட்டு, மாபுயற்சிந்து, அறுகொலைச்சிந்து, மகாத்மா காந்தியின் மரணகீதம், அரிபக்த சதகம், ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

1942 முதல் 1955 இடைப்பட்ட காலத்தில் தன் படைப்புகளை வெளிக்கொணர்ந்த அவர் 1956 இல் மண்ணுலகை விட்டு மறைந்தார்.

நடேசக் கோனார் நாட்டுப்புறப் பாடல்கள்  எனும் தொகுப்பில் ஒரு பாடல்

தலைப்பு - பண்டாரத்தார் விஜயனை சேந்தன்குடி ஜெமீனாக்குதல்.

பண்டாரத்தாரும் சந்தோஷம் கொண்டாராம்பாரும்
பட்டுமழவராயர் படைகளைவாளினால்
வெட்டிக் கெலித்துமே வென்ற விஜயனை
ஆறுகிரா மங்கள்கொடுத்தே கொடுத்தே-ஜெமீன்
ஆடம்பர மாக்கநினைத்தே நினைத்தே
சொல்லுங் குளமங்களம் பலவளஞ் சூழுங் கொற்றமங்கலம்
நல்லபனங்குளம் நகரமெனுந்தலம்
நாலுதிக்கும்புகழ் நவில்கீரமங்கலம்
சேந்தன்குடி ஊரையும்சுட்டி சுட்டி -அதில்
சிறப்புடனே அரண்மனை கட்டி - கட்டி
ஆறுகிராமத்துக்கு-அதிபதி - யாகவிஜயனுக்கு
அரசர்குளம் ஜெமீன் அதிகாரமுடி சூட்டி
அவரேசொன்ன விஜய ரெகுநாதவழுவாட்டி
தேவரென்றே தேசம்புகழ புகழ  - பெற்ற
தாய்பொன்னம்மாள் கண்டுமகிழ மகிழ
சேந்தன்குடி ஜெமினாம்-விஜயன் சீர்த்தி மிகுந்தவராம்
ஏந்தியவாளினால் எதிராளிகளைவென்று
வேந்தரும்வியப்புற வெற்றிபெற்றாரென்று
அன்றுமுத லின்றுவரைக்கும்- மக்கள்
அரியகதை யாகவுரைக்கும் உரைக்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...