முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏம்பல் ராஜா

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 135

ஏம்பல் ராஜா, இயற்பெயர் என்.பழனிவேல் ராஜா. MBBS, மக்கள் நல மருத்துவர். ஆவுடையார்கோவில். கவிஞர், பத்திரிகையாளர், தமுஎகச கௌரவத் தலைவர்,  நவீன ஏகலைவன் இலக்கிய இதழின் ஆசிரியர், சமூகச் செயற்பாட்டாளர், ஏகலைவன் இலக்கிய_வட்டம், ஏகலைவன் இரவு பாடசாலை நடத்துகிறார். டாக்டர் ராஜா மருத்துவமனையின் வாயிலாக மக்கள் உடல்நலம் பேணுகிறார்.

சமூக மேம்பாட்டிற்குப் பெரிதும் காரணம் கல்வியே, கவிஞர் அறிவுமதி தலைமையிலான கவியரங்கத்தில் இவரது கவிதை முதல் பரிசு பெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்,  கவிக்குயில் விசாலி,..போன்றவர்களின் கரங்களால் பரிசுகள் பெற்றுள்ளார்.

அக்னிக்குஞ்சுகள் இவரது முதல் கவிதை நூல். அணிந்துரை கவிஞர் அறிவுமதி அவர்கள். என் இரவுகள் கவிதைகளால் விடுகின்றன. என் காயங்கள் கவிதைகளால் ஆறுகின்றன, என்கிறார் ஏம்பல் ராஜா. கரைகளைப் பிடித்துக்கொண்டே நதி பயணமாவதைப்போல் கவிதையினைப் பிடித்துக்கொண்டே நான் பயணமாகிறேன். அடிநெஞ்சில் கனன்றுகொண்டு என் உயிரின் ஆணிவேரையே எரித்ததால் இந்தக் கவிதைகளுக்கெல்லாம் நான் அக்னிக் குஞ்சுகள் என்று பெயரிட்டேன், என்கிறார்.




இத்தொகுப்பில் ஒரு கவிதை,

கோரிக்கைக் கூடை

எல்லா அர்ச்சனைக் கூடைகளிலும்
நிரம்பி வழிகின்றன
கோரிக்கைகள்.

மௌனமாய்
சாமி கும்பிடும் போதும்
மனதுக்குள் நடக்கும்
அவரவர் வசதிக்கேற்ப
'பேரம் பேசுதல்'

சொல்லுங்களேன்!
கோரிக்கைகள் இல்லாமல்
கோயிலுக்குப் போவதெப்போது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...