முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோ.சாமிநாதன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -136


கோ.சாமிநாதன்,  ஆசிரியர், புலவர். ஊர் மூட்டாம்பட்டி, வைத்தார்.  பூர்வீகம் அரியலூர் மாவட்டம் பாளையப்பாடி.  அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடியின் தொலைத்தூர கல்வி மையத்தில் ஆங்கிலத்துறை இளங்கலை மற்றும் முதுகலை பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு புதுக்கோட்டை நேரு யுவகேந்திராவில் பணியாற்றியுள்ளார். நூலகத்துறையில் பெரிய ஈடுபாடு கொண்டவரென்பதால் புதுக்கோட்டை வடக்கு ராஜா 3ஆம் வீதியில் எஸ்.ஆர். ரெங்கநாதன் பெயரில் தனிநபர் நூலகம் நடத்திக்கொண்டிருக்கிறார். இதற்கான வாடகையைத் தன் ஓய்வூதியத்திலிருந்து கொடுக்கிறார். இந்நூலகத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு நூல்களுக்கும் மேலுள்ளன.

இவர் ஆறு நூல்கள் எழுதியுள்ளார். கர்மயோகி டாக்டர் சியாழி இராமாமிர்த அரங்கநாதன்,  Women sensibility in Anitha Desai Novel, சோர்வறியா உழைப்பாளி சாமிநாதன் இல்லையென்றால், அமிழ்தினும் இன்ப, வாசிப்பை நேசிப்போம் ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.





வாசிப்பை நேசிப்போம்,  என்கிற நூல் வாசிப்பின் அவசியத்தையும் நூலகப் பயன்பாடுகளைப் பற்றியும் பேசுகிறது. புத்தகங்கள் நல்ல நண்பர்கள், படிக்கும் பழக்கம், படித்தல் சுமையல்ல சுகம்,  எண்ணமும் செயலும்,ஏழைகளுக்கு ஏற்றம் நல்கும் நூலகம்,  என பல தலைப்புகளில் பல்வேறு தகவல்களைத் தருகிறது.

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை, ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்து வைக்கிறான், எஸ்.ஆர். அரங்கநாதன் வகுத்தளித்த நூலகச் சட்டம் 1949 ஜனவரி 29 ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது,  என பல்வேறு சிதறல் செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய தனிநபர் நூலகம் அம்பேத்காருடையது, எனச் சொல்லும் ஆசிரியர் புலவர் கோ.சாமிநாதன் தன் ஓய்வுகாலத்தை இன்றைய மாணவத் தலைமுறை பயன்பெறும் வகையில் நூலகம் நடத்திக்கொண்டிருக்கிறார். போற்றுதலுக்குரியவராக இருக்கிறார் கோ.சாமிநாதன். வாழ்த்துகள் , வணக்கங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...