முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ச.சிக்கந்தர் பாட்ஷா

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 137

ச.சிக்கந்தர் பாட்ஷா. அறந்தாங்கி.  வணிகத் தொழில் செய்கிறார். தற்போது இவரது வயது 70. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணக் கடமையை மேற்கொண்டவர். 2009 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டதன்  அனுபவமே இந்நூல். 

காணக் கண் கோடி வேண்டும் (கஅபா),  இவரது முதல் நூல். இந்நூல் எழுத இவருக்குப் பத்து ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. பொருள் வளம், உடல் நலம் உள்ளவருக்கு ஹஜ் கடமை ஆகும். மற்றவர்களுக்குக் கடமை இல்லை என்கிறார். ஹஜ் என்றால் அது ஒரு எட்டாக் கனி, நாம் அதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். அது குறித்து ஏதும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இஸ்லாம் ஐந்து கடமைகளைப் போதிக்கிறது. கலிமா, தொழுகை,நோன்பு,ஜக்காத்து, ஹஜ். முதல் நான்கு கடமைகள் இறக்கும் வரை செய்துகொண்டிருக்க வேண்டும். ஐந்தாம் கடமை ஒரு முறை செய்ததும் அத்துடன் முற்றுப்பெற்று நன்மைகள் எழுதப்படுகிறது,  என்கிறார்.




புனித ஹஜ் பற்றி இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டேன் . அனைத்து மக்களும் இதைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்று ஆவலில் உந்தப்பட்டு முற்றிலும் தனித்தன்மையுடன் இதை எழுதி உள்ளேன். இந்நூலை வாசிக்கையில் மக்கா,  மதீனா சென்று ஹஜ், உம்ரா, ஜியாரத் பார்த்து திரும்பிய அனுபவத்தைப் பெறுவீர்கள், என்கிறார்.

பூமியில் உயிரினங்கள் படைக்கப்படுவதற்கு முன் பூமி முழுவதும் நீரால் நிரம்பி இருந்தது. அதன் ஓரிடத்தில் நுரை தோன்றியது. அவ்விடத்தில்தான்,  கஅபா நிர்ணயிக்கப்பட்டது.  இந்த கஅபா பல முறை சேதமுற்றது.  பலராலும் இது புதுப்பிக்கப்பட்டது. இதன் மொத்த உயரம் 53 அடி நீளம் , மேற்கில் 45 அடி, கிழக்கில் 49 அடி, தெற்கில் 41 அடி.

700 ஆண்டுகளுக்கு முன்பு யமன் நாட்டு மன்னன் துப்பஉல் அஸத் என்பவர் முதன் முதலாக கஅபா போர்வையால் போர்த்திக் கவுரவித்தார். இந்தக் கருப்புப் போர்வை கிஸ்வா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போர்வையின் தற்போதைய எடை 670 கிலோ. இது உயர் ரகம் பட்டால் ஆனது. இதன் மீது தங்கம், வெள்ளியால் திருமறை வசனம் எழுதப்பட்டுள்ளது, என்கிற தகவலைத் தருகிறது இந்நூல்.

ஹஜ் பயணம் செல்வோர் செய்ய வேண்டியது . பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும்.  கடனாளியாக இருப்பவர்கள் செல்லக் கூடாது. தான, தர்மம் அதிகமாகச் செய்ய வேண்டும். யாரிடத்திலும் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்த பொருளை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும். யாருக்கேனும் குற்றம் குறை செய்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தில்தான் ஹஜ்ஜூக்குச் செல்ல வேண்டும், என பல தகவல்களைக் கொண்ட தரும் நூலாக இருக்கிறது. மேலும் இந்நூலின் வழியே  அரேபிய நாடுகளின் வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...