புதுக்கோட்டை எழுத்தாளர் - 138
யோகஸ்ரீ, க.யோகஸ்ரீ. டைலர். விவேகானந்தா நகர், கீரனூரில் வசிக்கிறார். கண்மணி, ராணிமுத்து, பெண்மணி இதழ்களில் பிரசுரமாகும் கதைகளை வாசித்து கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருமணத்தில் ஒரு மறுமணம், குறுநாவல் இவரது முதல் படைப்பு. பதிப்புரை ப. முத்துப்பாண்டியன், பாண்டியன்- புத்த -அகம்.
குடும்பக் கதை. மாதவன், இராகவன் இருவரும் அண்ணன், தம்பிகள். மாதவனுக்கு பூமாதேவி என்கிற பெண் மணப்பெண்ணாக பேசி முடிக்கப்படுகிறாள். அவனுக்கு வேறொரு பெண்ணுடன் காதல். பெற்றோரின் கட்டாயத்தினால் திருமணம் செய்துகொள்ளும் அவன் திருமணம் முடிந்த மறுநாள் மனைவியை விட்டுவிட்டு காதலியுடன் தலைமறைவாகிறான்.
பூமாதேவி தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளைத் தடுத்து நிறுத்தும் விஜயராகவன் அவளை அழைத்துவந்து தன் வீட்டில் தங்க வைக்கிறான். முதலில் அண்ணன் மனைவியென்று இடைவெளி காட்டும் அவனுக்கு அவள் மீது காதல் மலர்கிறது. அந்தக் காதல் மெல்ல திருமணத்தில் போய் முடிகிறது. இருவரும் இணைகிறார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக