முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாமி கிரிஷ்

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 143

சாமி கிரிஷ், இயற்பெயர் – சாமியப்பன் முத்துக்கிருஷ்ணன். கவிஞர், குறும்பட இயக்குநர், திறனாய்வாளர், சிறார் சிறுகதையாளர். பிறப்பு - இடையாத்தி மேற்கு – நெய்வேலி. கரம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமுஎகச மாவட்டச் செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரம்பக்குடி கிளை செயலாளர்.

கவிஞர் ஸ்டாலின் சரவணனின் தேவதைகளின் வீடு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதன் பிறகு கவிதைகள் மீதான ஆர்வத்தால் எழுதத் தொடங்கினேன், என்கிறார். ஆனந்த விகடன், குங்குமம், கணையாழி, பேசும் புதிய சக்தி, காமதேனு, புரவி உள்ளிட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

துருவேறிய தூரிகைகள், பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள் என்கிற இரு கவிதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார். துருவேறிய தூரிகை கவிதை நூலுக்காக தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் படைப்பூக்க விருது பெற்றவர். இவரது சிறார் சிறுகதையான கூர்ப்பி இவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த குறும்படமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது பெற்றது.  

பட்டாம்பூச்சியின் புகைப்படப் ப்ரியங்கள், எனும் கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான கவிதை உறவு இதழ் விருது பெற்றது. மேலும் படைப்பு தகவு குழுமம் நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு கவிதைப் போட்டியில் இவரது கவிதை முதல் பரிசு பெற்றது.

பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள், எனும் இத்தொகுப்பு கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. தேநீர் பதிப்பகம். பாசத்தை மட்டுமே பரிமாறத் தெரிந்த அம்மாவுக்கும் பிரிந்து சென்றுவிட்ட அப்பாவுக்கும் ப்ரியமான இதழ் ஆனந்த விகடனுக்கும் இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அன்பிற்காய் ஏங்கித் தவிக்கும் மனித வாழ்வில் இவரது கவிதைகள் பெருமழையாய் அன்புகளைப் பொழிகின்றன.

இவரது முதல் தொகுப்பான துருவேறிய தூரிகைகள் வெளியிட்ட மறுநாள் இவரது தந்தை இறந்துவிட பெரும் துக்கத்திற்கு உள்ளாகி கவிதை மணத்திலிருந்து வெகு தூரத்திற்குச் சென்றுவிடுகிறார் சாமி கிரிஷ். இனி எதையும் வாசிக்கவோ, எழுதவோ முடியாது என்கிற சூன்யத்திற்குள் இவரது வாழ்வுச் சிக்கிக்கொள்ள ஆனந்த விகடன் இவரது விரலைப் பற்றி மீண்டும் கவிதை உலகத்திற்குள் அழைத்துவருகிறது. இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் ஆனந்த விகடனில் வெளியானவை. அன்பு, பாசம், நெருக்கம், இணக்கம், பற்று, நேசம் என நேய உணர்வுகளைப் பாடும் கவிதைகள் இவருடையது. இத்தொகுப்பில் ஒரு கவிதை – அப்பாவின் வாசம்

  அப்பா கொடுக்கும் முத்தங்களில்

பீடி வாடைதான் பிரதானமாய் மணக்கும்

சட்டைப்பை துழாவி அவர் தரும்

ஒன்றிரண்டு காசுகளில் கூட

பீடி வாசனையே பிசுபிசுக்கும்

இடைவெளியென்றி

வாயில் மினுமினுக்கும்

செந்நிற தீக்கங்குகள்

பீடியைவிடவும் அதிகம் எரித்தது

அவரது நுரையீரல்களைத்தான்

தினமும் போட்டு வதைக்கும்

இருமல் இரைச்சல்களில்

எங்களது அக்கறைகளும் அறிவுரைகளும்

அவர் காதுகளைச் சேரவேயில்லை

கடைசிப்பீடி வாயிலிருக்க

அப்படியே இறந்துபோன அப்பா

இப்போதும் ஆவியாக

அடிக்கடி வந்துபோகிறார்

யாரோ ஒருவர் உள்ளிழுத்துவிடும்

புகை வழியாக. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...