முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்.நடராஜன்

புதுக்கோட்டை எழுத்தாளர் – 144

எஸ்.நடராஜன், தமிழாசிரியர், சுப்புராமய்யர் மத்யதரகலாசாலை, புதுக்கோட்டை. தாய்நாடு இதழின் முன்னாள் உதவி ஆசிரியர். சமஸ்தான புதுக்கோட்டையில் பெரிய பதிப்பகமாக இருந்த கார்த்திகேயினி பிரசுரத்தின் உரிமையாளர். பல நூல்களும் ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். பல அறிஞர்களின் படைப்புகளைத் தொகுத்துள்ளார்.

புதுமுறை அகராதி எனும் இந்நூல் கார்த்திகேயினி பிரசுரம் தொகுத்திற்கும்  புதுக்கோட்டையின் முதல் அகராதி. 10.11.1949 அன்று இந்நூல் வெளிவந்தது. இந்நூலின் முன்னுரை தமிழ் – லெக்ஸிக்கன் பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்.




இந்த அகராதி மூன்று உள்ளுறைகளைக் கொண்டிருக்கிறது. ண,ன பேதங்கள், ர, ற பேதங்கள், ல,ழ,ள பேதங்கள். இவ்வெழுத்துகளால் உருவாகும் சொற்களுக்கு இடையேயான பொருள்களை இந்த அகராதி நூல் விளக்குகிறது. குணட்டு – கதிர் முதலியவற்றின் சிறுகொத்து. குனட்டு – குறும்பு. சேணம் – கலணை, சுவர்க்கம், மெத்தை. சேனம் – பருந்து

ஏரான் – பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருகிறவன். ஏறான் – ஏற்றான்.  ஒருவு – ஆடு ஒறுவு – வருத்தம். அலகு – அகலம், அளவு. அழகு – வனப்பு, சிறப்பு. அளகு – கோட்டான் கோழியின் பெண் இனம். இப்படியான வேறுபாடுகளைத் தரும் அகராதி இது.

நூலின் பதிப்புரை – அகராதி ஓர் அரிய திரவியசாலை. எளியோரிடம் உள்ள செப்புக் காசும் அதனில் உண்டு. ஏந்தலிடம் உள்ள பொற்காசும் அதனில் ஒளிவிடும். ஆனால் அதைச் செலவிடவோ, அளவறிந்து செய்ய வேண்டும். அவ்விதம் செய்யாவிடில் ஒளி மாறிய, ஒலி மாறிய பொத்தலாகிய செல்லாக்காசைப் போன்று சொல்லின் பொருள் வேறுபட்டு விகார உருவில் காட்சியளிக்கும். அவ்வித நிலை அகல ஒரு உதவுகோலாக இவ்வகராதி உதவுமென்று கருதுகின்றோம்.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் எஸ்.நடராஜன், தமிழ்மொழியை பிழையற எழுதவேண்டுமென்ற பெருநோக்குடன் வெளியிடப்பட்டதே இந்நூல். இம்முயற்சியை அறிஞர் பலரிடம் கூறினேன். அவர்களின் ஆசியே இந்நூல் என்று அகமகிழ்கின்றேம். எம் சிற்றறிவுக்கு எட்டிய வரை செப்பம் செய்துள்ளேம். இந்நூலைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஆதரித்து மேன்மேலும் இம்முறையான சிறிய நோக்கங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும்படி விரும்புகின்றோம்.






 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...