முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பி. வெங்கட்ராமன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 151

பி. வெங்கட்ராமன் . எழுத்தாளர் , அச்சகத்தார், பதிப்பாளர், இதழாசிரியர். தனது இயற்பெயரிலும் வடமலையழகன் எனும் புனைபெயரிலும் எழுதியவர்.  சமஸ்தான  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காகிதத் தட்டுப்பாடு மேலோங்கிய காலத்தில் அதுவரை இயங்கிக் கொண்டிருந்த பல அச்சகங்களும் பல இலக்கிய , குழந்தை இதழ்களும் நின்றுவிட்டிருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் தொடர்ந்து இயங்கியது புதுக்கோடடை கண்ணபிரான் அச்சகம். பல இதழ்களை அச்சேற்றிக் கொடுத்தது இந்த அச்சகம்தான்.  இதை நடத்தியவர் பரசுராம். இவரது மகன் பி. வெங்கட்ராமன் அவர்கள். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

தந்தையார் பரசுராமிடம் தானொரு இதழ்த்தொடங்கி நடத்தப்போவதாக விருப்பம் தெரிவித்தார். அப்போது இவருக்குப் பள்ளி வயது. தந்தையும் விருப்பத்திற்கு இசைவு தெரிவிக்க 'டிங் டாங்' எனும் குழந்தை இதழைத் தொடங்கினார். இந்த இதழின் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள். மேலும் இவர் அகிலனுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.

பி.வி என அழைக்கப்படும் வெங்கட்ராமன் ,  வடமலையழகன் எனும் புனைப்பெயரில் பல படைப்புகள் தந்துள்ளார். சாலைவிதிப் பாடல்கள் இவரது படைப்புகளில் முக்கியமானது. தினமணி பத்திரிகையில் சில காலம் பணியாற்றி பிறகு டி.வி.எஸ் நடத்திய தனிச்சுற்று  ஹார்மணி இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு குழந்தை இலக்கியம் மீது நாட்டம் கொண்டு அழ. வள்ளியப்பா படைப்புகளைத் தொடர்ந்து பரவலாக்கிவருகிறார், மேலும் அழ. வள்ளியப்பா  பெயரில் குழந்தை எழுத்தாளர்களுக்கு விருது வழங்க அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஒரு பி.ஆர்.ஓவின் இலக்கிய டயரி எனும் இந்நூல் பல இலக்கிய நிகழ்வுகளின் கட்டுரைத் தொகுப்பு. கண்ணபிரான் அச்சகம், டங் டாங் இதழ், புதுக்கோட்டை தினம் கொண்டாடுவோம்,  பாலர் இதழ் காலமே மணிக்கொடிக்காலம்,  பண்பில் சிகரம் பாலா, ஞானபீட விருதாளர் அகிலன், தமிழில் சிறுவர் இதழ்கள்,..என பல இலக்கிய நிகழ்வுகளை இந்நூலில்பதிவு செய்துள்ளார். வெளியீடு மணிவாசகர் பதிப்பகம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...