முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலியராஜன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 152

கலியராஜன், புதுக்கோட்டையில் பிறந்தவர். இவரது தந்தையார் திருமலைச்சாமி அஞ்சல் துறையில் பணியாற்றியவர். இவரது இளமைக் காலம் புதுவயல், கண்டனூர், பள்ளத்தூர், கோட்டையூர், கானாடுகாத்தான் என புதுக்கோட்டையையொட்டியுள்ள  செட்டிநாட்டு ஊர்களில் கழிந்தது.




பள்ளிப் படிப்பைப் புதுக்கோட்டையில் முடித்த இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொறியியல் படித்தார். அப்போது இவருடன் வகுப்புத் தோழராகப் படித்தவர்கள் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள். பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவுடன் பொதுப்பணித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. உடுமலை அமராவதி அணைக்கட்டுத் திட்டத்தில் பங்கேற்று பணியாற்றினார்.

பின்னர் காரைக்குடி, மதுரை தூத்துக்குடி, கோவை, உதகை போன்ற நகரங்களில் பாலிடெக்னிக்  முதல்வராகப் பணியாற்றி 1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பணியின் பொருட்டு கோவையில் குடியேறி கோவைவாசியானாலும் இவர் எழுதும் நூல்களில் தன்னைப்  புதுக்கோட்டைக்காரர் என அடையாளப்படுத்திக்கொள்கிறார்.

பணி ஓய்வுக்கு பிறகு தமிழ்ப் பணியில் ஈடுபட்டு எழுதத் தொடங்கி இவர் இதுவரை பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.

தெரிந்த திருக்குறளும் தெரியாத புதிய பொருளும், எனும் இந்நூல் திருக்குறளைப் பலநோக்கில் ஆராய்கிறது. 1. தெரிந்த குறளும் தெரியாத பொருளும், 2.மேலும் சில பொருள் தெரியாத குறள்கள், 3.உபமானம் எது, உபமேயம் எது, 4.சமத்துவச் சிந்தனைகள், 5.விஞ்ஞானம் ஒரு வேதம்,  தொழுது எழுக, 6.வள்ளுவரின் குருபூஜை, திருச்சாழல் பற்றிய உண்மை, 7.தனி உடைமையும் பொது உடைமையும், 8. சமணர்கள் என்ன ஆனார்கள், 9.தமிழர்களின் மதம் எது? ஆகிய தலைப்புகளின் கீழ்  இந்நூல் திருக்குறளை அலசுகிறது.

கடுகைத் துழைத்து ஏழ்கடலைப் புகட்டிக் / குறுகத் தறித்த குறள்

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்

என திருக்குறளைப் பற்றி 54 பாடல்கள் திருவள்ளுவமாலையில் பாடப்பட்டுள்ளன. ஒரு நூலுக்கு 54 புலவர்கள் வாழ்த்துப் பாடியது திருக்குறளைத் தவிர வேறெந்த நூலுக்கும் இல்லை, எனப் பெருமையில் பூரிக்கிறார்.

திருக்குறளில் பல குறள்கள் தவறாகப் பொருள்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படியாக பொருள்கொள்ளும் பல குறள்களை எடுத்தாண்டு புதிய பொருள் விளக்கம் தருகிறார். உதாரணமாக, நீத்தார் பெருமை அதிகாரத்தில், ஒரு குறள்.

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் / செந்தண்மை பூண்டுஒழுக லான்.

பரிமேலழகர் அந்தணர் என்பவர்கள் துறவிகள் என்றும் அவர்கள் பிராமணர்கள் என்கிற பொருளில் மறைமுக விளக்கம் தருகிறார். அதை மறுக்கும் இவர், அம்+தண்+அர் அழகிய தன்மை உடையவர்கள், குளிர்ச்சியான தன்மை உடையவர்கள்,  ஒழுக்கமுடையவர்கள் என்கிறார். 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...