புதுக்கோட்டை எழுத்தாளர் - 153
வீ.செல்லப்பன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தை பெரியார் இல்லம், சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை. தமிழ்மன்றம், நுகர்வோர்குழு கூட்டுறவுச்சங்கம், பகுத்தறிவு பணிகளில் பங்களிப்பு செய்கிறவர்.தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் எனும் இந்நூல் பணி ஓய்வுக்குப் பிறகு இவர் எழுதிய முதல் நூலாகும். ஒரு மொழியில் எழுத்துக்கள் அமையும் முறைகள், தமிழ் மொழியில் அமைந்துள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை, திருந்தாத் தமிழ் நெடுங்கணக்கு, தற்போதுள்ள தமிழ் எழுத்து முறையால் ஏற்படும் கேடுகள், பழைய எழுத்துமுறைகள், இதுநாள் வரை மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்கள், தமிழக அரசின் எழுத்துச் சீர்திருத்த ஆணை, தற்போது எழுத்து முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்,தமிழ் எழுத்துச் சீரமைப்பால் ஏற்படும் நன்மைகள் , எழுத்துச் சீர்திருத்தம் வேண்டும் தமிழறிஞர்கள் கருத்துக்கள் ஆகிய தலைப்புகளைப் பொருளடக்கமாகக் கொண்ட நூல் இது.
"ஒரு மொழியானது எந்த அளவிற்குத் தொன்மை வாய்ந்தது என்று கூறுகிறார்களோ, அந்த அளவிற்கு அம்மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பொருள் " என்கிறார் தந்தை பெரியார். 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் தமிழ்மொழி எழுத்துகளில் செய்த மாற்றமே முதல் பெரும் மாற்றமாகும். அதன்பிறகு தந்தை பெரியார் செய்த சீர்திருத்தம் பெரும் சீர்திருத்தமாகும். தமிழ்மொழியில் நெடிலைக் குறிக்க 13 வகையான குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சா - துணைக்கால்
தூ - துணைப்பொய்க்கால்
சே - இரட்டைக் கொம்பு
சோ - இரட்டைக்கொம்பு மற்றும் துணைக்கால்
ஏ - அடிக்கோடு
டூ - 0 என்ற மேற்சுழி
ஓ - 0 என்ற அடிச்சுழி
சி - மேற்கொம்பு
சீ - மேற்சுழியும் கொம்பும்
டீ - அடிமுதல் மேல்வரை கொம்பும் சுழியும்
சூ - கீழ்க்கொம்பும் சுழியம்
ஊ , ஔ - ள என்ற எழுத்து
ஈ - எழுத்தின் முழுவடிவமே மாறி நெடிலைக் குறிக்கிறது.
கூ - உ என்ற குறியீடு
06,07.08.1932 நாட்களில் துறையூரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை குத்தூசி குருசாமி முன்மொழிய கோவை.சிவானந்தம் வழிமொழிந்தார். அதன்பிறகு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் வேண்டி தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார்கள்.
ஓ.பி. ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகவும் அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராகவும் இருந்தபோது 'தமிழ்மொழி சீர்திருத்தக் குழு ' அமைக்கப்பட்டது. அதில் தமிழ் அறிஞர்கள் தெ.பொ. மீ, ரா.பி.சேதுப்பிள்ளை, டி.சொக்கலிங்கம், கே.சுவாமிநாதன் போன்றோர் உறுப்பினராய் இருந்தனர். தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தம் மேற்கொண்டால் அப்பெருமை தந்தை பெரியார் அவர்களைச் சென்று சேரும் என கருதி அக்குழுவைச் செயலற்றதாக்கினர்.
பெரியாரின் நூற்றாண்டு விழாவின் போது ஈரோட்டில் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெரியார் சீர்திருத்த எழுத்துகளை ஏற்று 19.10.1978 அன்று அரசு ஆணை வெளியிட்டார்.
பெரியார் சீர்திருத்த எழுத்துகளில் சில சீர்திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. குறிப்பாக ஐ - அய், ஔ - அவ் எழுத்துக்கள் நடைமுறைக்கு ஒத்துவரவில்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக