புதுக்கோட்டை எழுத்தாளர் – 155
சுப்பிரமணிய பாரதி, புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் குடுமிமாமலையில் பிறந்தவர். இவரது தந்தையார் வைத்தீசுர தீட்தர். இவரது காலத்தைச் சரியாக கணிக்க முடியவில்லை.பொருட்டொகை நிகண்டு, இந்நூலை இயற்றியவர் சுப்பிரமணிய பாரதியவர்கள் என்றாலும இந்நூலைப் புதிப்பித்து வெளிக்கொணர்ந்தவர் சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர். இவர் திருவாவடுதுறையாதீனவித்துவான், மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சைவ நூற்பரிசோதகருமாக இருந்தவர். இந்நூலை வெளியிட்டது மதுரை தமிழ்ச்சங்கம், பாண்டித்துரை தேவர் அவர்கள்.
நிகண்டு என்றால் சொற்களஞ்சியம், சொற்றொகை என்று பொருள். அகராதி என்றும் பொருள் கொள்ளலாம்.
சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு வரிசையில் பொருட்டொகை நிகண்டு முக்கிய இடம் வகிக்கிறது.
சிவமயம், கணபதி துணையை வேண்டி, விநாயகர்துதியுடன் நிகண்டு தொடங்குகிறது.
அருட்கடல் விநாயக னடியிணை யிறைஞ்சிப்
பொருட்டொகை நிகண்டினைப் புகலுது மியாமே
- என்பது நிகண்டின் முதல் பாடல்.
ஒரு பொருள், இருபொருள், முப்பொருள், நாற்பொருள், ஐம்பொருள், ஆறுபொருள், ஏழு பொருள், எண் பொருள், ஒன்பது பொருள், பத்துப்பொருள், பதினொரு பொருள், பன்னிரு பொருள், பதின்மூன்று பொருள், பதினான்கு பொருள், பதினைந்து பொருள், பதினாறு பொருள், பதிணெண் பொருள், இருபது பொருள், இருபத்தொரு பொருள், இருபத்திரண்டு பொருள், இருபத்தினான்கு பொருள், இருபத்தேழு பொருள், இருபத்தெண்பொருள், முப்பத்தொரு பொருள், முப்பத்திரண்டு பொருள், முப்பத்து மூன்று பொருள், முப்பதைந்து பொருள், முப்பத்தாறுபொருள், முப்பத்தெண்பொருள், ஐம்பத்தாறு பொருள், அறுபது பொருள், அறுபத்துநான்கு பொருள், தொண்ணூற்றாறு பொருள், நூறு பொருள் குறித்துப் பேசுகிறது.
உதாரணம்
முப்பது பொருள்
தோற்கருவி முப்பது சொல்லுங் காலை
பேரிகை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை காடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுகை தாவி றடாரி
யந்திரி முழவோடு சந்திர வளைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந் துடுமை சிறுபறை யடக்கை
தொக்க வுபாங்கந் துடிபெரும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே
சிலப்பதிகார வுரையிற் றெரிகவே
தோல்கருவிகளாவன,
சிறுபறை ,பெருமுரசு, சிறுமுரசு, பேரிகை, படகம், பாடகம், உடுக்கை, மத்தளம், சல்லிகை, காடிகை / கரடிகை, திமிலை, தக்கை, கணப்பாறை, தமடூகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு.
கருத்துகள்
கருத்துரையிடுக