முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலவர் ந. சண்முகம்,

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 147

புலவர் ந. சண்முகம், தமிழாசிரியர், அய்யர் குளம் - வடகரை, புதுக்கோட்டை.  

மெய்யுணர்வும் பேரின்ப வாழ்வும் - மார்க்க அரேபியா அருளிய ஆத்ம சிந்தனை எனும் இந்நூல் மார்க்க அரேலியர் அருளிய ஆத்ம சிந்தனை எனும் மூல நூலின் செய்யுள் வடிவமாகும்.

நூலின் மூலம் உரோம நாட்டுச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியர் இயற்றியது. இவர் கி.பி 121 இல் பிறந்து நாற்பதாவது வயதில் ரோமாபுரி சக்கரவர்த்தியாகி கி.பி 180 இல் மறைந்தவர். ஒரு மாமன்னனுக்குரிய கடமைகளிலிருந்து சிறிதும் வழுவாமல் அரண்மனை வாழ்க்கையினின்று விலகிவிடாமல் அன்பு, பணிவு, அடக்கம், சகிப்புத்தன்மை , உழைப்பு எல்லாவற்றிற்கும் மேலாக சுக போகங்களைத் துச்சமாக மதித்து மேற்கொண்ட எளிமை முதலான பண்புகளில் சிறந்து விளங்கியவர். இவர் அருளிய தத்துவமே ஆத்ம சிந்தனை.

இந்நூலைத் தமிழில் மூதறிஞர் ராஜாஜி தமிழுக்கு மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு பரலி சு. நெல்லையப்பர் ஆசிரியராக இருந்த லோகோபகாரி பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. தமிழகத்தின் காந்தி என அழைக்கப்பட்ட பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை இதே நூலை இதய உணர்ச்சி என்கிற தலைப்பில் வெளியிட்டார்.

ஆத்ம சிந்தனை என்கிற நூலை மூலமாக வைத்து புலவர் ந. சண்முகம் மரபு வழியில் செய்யுள் வடிவில் எழுதிய நூல் மெய்யுணர்வும் பேரின்பவாழ்வும்.  இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கிறார் டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

இந்நூல் பிரபஞ்ச இயல், சமுதாய இயல், ஆன்ம இயல் அல்லது உயிர் இயல் என மூன்று இயல்களில் எழுதப்பட்டுள்ளது.  பிரபஞ்ச இயல் - இறையருள் வாழ்த்து, இறையருள் ஆட்சி, இறப்பின் சிறப்பு

சமுதாய இயல் - ஆன்ற நற்பண்புகள், சினங்கொள்ளாமை, பொறுமையின் பெருமை, கடமையுணர்வு, உயிர் ஒப்புணர்வு,

உயிர் இயல் - உலகின் நிலையாமை, தவக்கனலாம் துயர்க்கனல், ஐயம்இல் மெய்யுணர்வு,அமைதிப் பெருநிலை, பேரின்ப வாழ்வு ஆகிய தலைப்புகளின் கீழ் பாடப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் ஒரு பாடல்,


ஆறென்றால் இரு கரைகள் என்றும் உண்டாம்!
அதுபோன்ற பிறப்பென்றால் இறப்பும் உண்டு!
பேறாகும் புகழோடும் இகழ்ச்சி உண்டாம்! பீடுபெறும் நன்மையொடும் தீமை உண்டு!

மாறுபடும் இவ்வுலகில் பொருள்கள் யாவும்
மாறாத நியதியினில் மாறிச் செல்லக் கூறுபோடும் இவ்விருமை நிலையைத் தெய்வம்
குறிப்பாக இயற்கையினில் வைத்த தன்றோ?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...