முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியன் கணேசன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 161

இந்தியன் கணேசன்,  இயற்பெயர் கணேசன்.  மணமேல்குடி. இவர் நடத்தும் கடையின் பெயர் இந்தியன். இப்பெயரைக்கொண்டு இந்தியன் கணேசன் என அறியப்படுகிறார்.

தான் சுவைத்து  தனக்குப் பிடித்த கறியை சிவனுக்குப் படைத்த கண்ணப்ப நாயனாரைப் போல தான் வாசித்து பேரின்பம் கண்ட நூல்களைத் தன் கடைக்கு வரும வாடிக்கையாளர்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறார். அதற்காக கடையில்  நூலகத்திற்கென தனி அறை ஒதுக்கியிருக்கிறார். இவரது கடை நூலகம் குறித்து பல தொலைக்காட்சிகள் செய்தி வழியே கவனப்படுத்தியுள்ளன.

ஆர்ப்பாட்டமில்லாத கவிஞர். ஆழ்ந்த வாசிப்பாளர். சுருக்கமாக பேசவும் எழுதவும் செய்கிறவர். இவரது சுருக்கத்தில் செறிவு உண்டு. ஒற்றைக்கீற்று கவிதைத்தொகுப்பு மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவர் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

அவிழ்ந்தே கிடக்கும் கூந்தல், இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.  பிரமிக்கத்தக்க எதுவும் எளிமையிலிருந்து தொடங்குவதைப் போல எளிமையான மொழிகளின் வழியே சொற்களால் சமூகத்தைத் தராசில் ஏற்றுகிறார். பல கவிதைகளில் சமூகத்தின் மீதான கோபம் நெடியாக அடிக்கிறது.  நல்லவனை உழைக்கச் சொல்லும் / கெட்டவனைத் திருடச் சொல்லும் / பசி - என்கிற கவிதை இதற்கோர் உதாரணம்.

துளிகளின்/ ஒற்றுமை/ கடல் - என்கிற கவிதை ஒற்றுமைக்கான புதிய உவமை அல்லது மிகப்பெரிய உதாரணம்.

இப்படியான சிறிய, குறுகிய, சற்றே பெரிய கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் ஒரு கவிதை நமது மாவட்டத்தில்  சமீபத்தில் தீண்டாமையின் பேரால் நடந்தேறிய  ஒரு சம்பவத்தை நினைவூட்டி வாசிப்பவர்களையும் விட்டிலாக்கி விடுகிறது.

கவிதையின் தலைப்பு - விட்டில்கள்

நல்லது செய்வான்
என்றெண்ணி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த
வாக்காளர்கள் !

பொன் முட்டையிடும்
என்றெண்ணி
ஈமுவில் முதலீடு செய்த
இளம் வணிகர்கள்!

நம்மைத்தான் கவனிப்பான்
என்றெண்ணி படாத பாடுபட்டுப்
படிக்க வைத்து விட்டு
முதியோர் இல்லத்தில் இருக்கும் பெற்றோர்கள் !

பணக்காரன் ஆகலாம்
என்றெண்ணி
திடீர் நிதி நிறுவனத்தில்
முதலீடு செய்தவர்கள்!

ஆசிரியர் படிப்பில்
தேர்ச்சி பெற்றால்
வேலை நிச்சயம்
என்றெண்ணி
தேர்வான மாணவர்கள்!

'சம பந்தியில் தன்னோடு
சாப்பிட்டதால்
சாதி ஒழிந்தது
என்றெண்ணிய தாழ்த்தப்பட்டவர்கள்'!

இவர்கள்...
வெளிச்சம் என்றெண்ணி
வெந்தனலில் விழுந்த
விட்டில்களே.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...