முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில் குணா

புதுக்கோட்டை எழுத்தாளர் - 165

கோவில் குணா, ஆவுடையார்கோவில் சீ. குணசேகரன் என்பதன் சுருக்கமே கோவில் குணா. கணக்குப் பதிவியல் - வணிகவியல் படித்தவர்.  சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர், மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் செயலாற்றியவர்.  கவிஞர், சிறுகதையாளர், பேச்சாளர். கலை, இலக்கியம் மீதான ஈடுபாட்டால்  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கலையாற்றி வருகிறார். இப்பெருமன்றத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.

இவரது முதல் சிறுகதை, ராஜாளிக்குள் ஒரு சின்னப்புறா கல்கி இதழில் பிரசுரமானது. தாமரை, தொடரும் என்று பல இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன. இவரது சிறுகதைகளில் ஒன்றான  'பரிசு ' கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மூன்றாண்டுகள் இடம் பெற்றிருந்தது.

ஏமாற்றம் இவரது படைப்புகளில் முக்கியமான ஒரு  சிறுகதை. இக்கதை தொடரும்,..ஒளித்திரள் பன்னிரெண்டாம் ஆண்டு சிறப்பு மலரில் இடம் பெற்றது.

மழைக்காலத்தில்  கொடலைமட்டை,  பாலித்தீன் பையுடன்  பள்ளிக்கு வரும் குழந்தைகளில் குப்புசாமி எனும் ஏழை மாணவன்  குடையுடன் பள்ளிக்கு வருகிறான். குடை தரும் கௌரவத்தில் பள்ளியில் அவன் செய்யும் குறும்புகளே இக்கதை.

ஆயிரமாயிரம் மாணவர்கள் ஒரே அறைக்குள் இருந்து கொண்டு கத்துவதைப்போல பெரிதாக வானம் இரைந்து கொண்டிருந்தது, கார் முகிலைக் கண்ட மயில் மாதிரி ஏக மகிழ்ச்சி,  தேன் குடித்த நரியாட்டம் குதியாட்டம், ...போன்ற உவமைச் சொல்லாடல்களால் கதையின் வாசிப்பில் சுவாரசியம் கூட்டுகிறது.

குப்புசாமி குடையை வைத்துக்கொண்டு அவன் செய்யும் அடத்தால் குடையை வாங்கி வைத்துக்கொள்கிறார் ஆசிரியர். குடையை எப்படியேனும் வாங்கியாக வேண்டுமென யோசிக்கிறான்.  அந்நேரத்தில் மழை பெய்கிறது. உதட்டில் ஒரு விரலை வைத்துக்கொண்டு, சார்..என்கிறான்.

" ஏலே போய் சும்மா உக்காருல்ல. வெளியே மழை கொட்டிக்கிட்ருக்கு இவருக்கு 'இது' வருதாமுள்ள இது. சாத்துனேன்னா தெரியும் படவா " என்று கத்துகிற இடத்தில் கதை எதிர்பாரா திருப்பம் கொள்கிறது.

பள்ளி வயது குழந்தைகளின் உளவியலைப் பேசும் மிக முக்கியமான சிறுகதை. தொடர்ந்து எழுதுங்கள் கோவில் குணா. வாழ்த்துகள்,,,





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...