முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா. கண்ணன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 167

நா. கண்ணன், கவித்தென்றல் நா.கண்ணன் என அழைக்கப்படுகிறவர். இவரது இலக்கிய வட்ட நண்பர்களால் சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெறுபவர். அறந்தாங்கியில் பிறந்து புதுக்கோட்டையில் குடியேற்றம். இவரது துணைவியார் தமிழாசிரியர். மகள் கவிதா புவனேஸ்வரி  பட்டிமன்ற பேச்சாளர். மூத்த மகன் பாபு சண்முகநாதன் கராத்தே,  சிலம்பு கலை பயிற்றுநர்.  இளைய மகன் முருகபாரதி சொல்லாட்சி கலைஞர். தன்னம்பிக்கை உரையாளர்.  யோசி என்கிற புத்தக நிலையம் நடத்துகிறார். மேலும் கவிராசன் அறக்கட்டளை மூலமாக சமூகத் தொண்டாற்றி வருகிறார்.

நா.கண்ணன் மூன்று நூல்கள் எழுதியுள்ளார். வாழி ! தமிழே வாழி!, குமரேசனார் குறள், கவிராசனின் புவிவாசனை

கவிராசனின் புவிவாசனை எனும் இந்நூல் இவரது மூன்றாவது நூல். கவிராசன் அறக்கட்டளை வெளியீடு. இந்நூல் பாரதியின் 125 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு வெளியானது. பாரதியின் வாழ்வை கவி வடிவில் வடிக்கப்பட்ட  நூல்.

பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் , பாரதியுடன் தொடர்புடையவர்கள் கால வரிசையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி. சுப்பிரமணிய அய்யர் - சுதேசிமித்திரன்,  திருமலாச்சாரியார்- இந்தியா, லாலா லஜபதிராய்- பாஞ்சால சிங்கம், விபின் சந்திரபால்- பால்  அவர்களில் முக்கியமானவர்கள். பாரதியைச் சுமந்தவர்களாக ஐவரைக் குறிப்பிடுகிறார். குவளைக் கண்ணன், லட்சுமண ஐயர், அரிகர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா,  நெல்லையப்பர்.

அருங்கவிஞன் பாரதிபால்  அன்பு வைத்த பேர்க்கெல்லாம்  ஆதரவாய் அவன் தாங்கும் அருந்தமிழின் வேர்க்கெல்லாம் இந்நூல் அன்பின் காணிக்கையாக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு ஆசியுரை - புலவர் தி.சு. மலையப்பன்,  அணிந்துரை - கவிச்சுடர் கவிதைப்பித்தன்,  மதிப்புரை - கவிஞர் தங்கம்மூர்த்தி , ,  வாழ்த்துரை -  கவிஞர் ப.முத்துப்பாண்டியன்.

இத்தொகுப்பில். பாரதி பற்றிய ஒரு கவிதை
தலைப்பு - பாரதியாய்த் தோற்றம்

சுப்பிர மணியன்
சூட்டிய பெயராய்!
சுப்பையா வெனச்
சுருங்கிய பெயராய்!

சூரியன் சுருங்குமா?
சூழ்ச்சியில் நொறுங்குமா?
வீரியம் சேரவான்
விளைக்குமா போருமாய்?

வெடிப்புறு பேச்சுமாய்
விரைகவி வீச்சுமாய்த்
துடிப்புறும் அவனைத்
தொழுதனர் 'அவனாய்'!

நடிப்பன வெண்ணி
நகைத்தனர் சிலரும்
இடிப்பெனும் மின்னாய்
இறங்கவும் வேண்டப்

பொழியுங் கவிதை
புரண்டது வெள்ளம்!
புண்மை யழுக்கெனப்
புரண்டவர் உள்ளம்!

தின்னும் புலியவன்
தினகரன் ஒளியவன்!
சின்னப் பயலெனச்
செப்பவும் ஒருவர்

அன்னவர் ஆக்கினன்
அணுவிலும் சின்னம்
ஆகவுந் தனதாய்
அருந்தமிழ் வண்ணம்!

எட்டயம் அவனது
பெட்டக மானது!
பட்டயம் அவனாய்ப்
'பாரதி'யானது!

எட்டும் வயதா?
பட்டயம் அதுதான்?
எட்டும் மூன்றாய்
எட்டு வயதான்

பத்தும் ஒன்றின்
பதினொன்று  வயதாய்ப்
பார்தமிழ் மீண்டனள்
பதினெட்டு வயதாய்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...