முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபம் முத்து

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 168


தீபம் முத்து, அறந்தாங்கி. கவிஞர், சிறுகதையாளர். தீபம் கலர்லேபில் பணியாற்றியதால் தீபம் முத்து என்று புனைப் பெயரை வைத்துக்கொண்டவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இரு சிறுகதைத் தொகுப்பு , ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு தினமலர் வாரமலர் நடத்திய டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது வேப்பங்கொட்ட என்கிற சிறுகதை முதல் பரிசு பெற்றது. இக்கதையின் மூலமாக பரவலான கவனத்தை ஈர்த்தவர். சுற்றுச்சூழல், காடுகளின் அவசியம்,  கல்லூரி பருவத்தினர் பார்வையில் மரங்கள் வளர்ப்பு இவற்றைப் பேசக்கூடிய நல்ல சிறுகதை. இக்கதையை முதல் கதையாகக் கொண்டு வேப்பங்கொட்டை எனும் இச்சிறுகதைத் தொகுப்பு ஜனவரி 2005 ஆம் ஆண்டு வெளியானது.  18 கதைகளின் தொகுப்பு. கடவாசல், எச்சில் உறவு, தொத்தப்பசு,  சம்மணம், ஆணிவேர்...என வட்டார வழக்குகளால் எழுதப்பட்ட சிறுகதை.

இத்தொகுப்பில் ஆணிவேர் என்றொரு சிறுகதை காத்திரமான படைப்பு. ஊரின் மையத்திலிருக்கும் ஆலமரத்தை வெட்டி அவ்விடத்தில்  சமுதாயக்கூடம் கட்ட  ஊர்க்கூட்டம் போடுவதுதான் கதை. கதையின் களம் பச்சலூர். எங்கே நின்று பார்த்தாலும் பச்சைப் பசேலென்று இருந்ததால் அதற்கு பச்சலூர் என்று பெயர் என்பதாக கதையில் ஓரிடத்தில் சொல்கிறார். சோலியப்பன் மரங்களின் மீது அன்பும் பற்றும் பாசமும் கொண்டவர். ஊரே மரத்தை வெட்டி அப்புறப்படுத்த சம்மதம் தெரிவிக்க மரத்தை வெட்டக்கூடாதென்று சோலியப்பன் சொல்கிறார். மரத்தை வெட்டுவதென ஊர் முடிவு செய்கிறது. 

பஞ்சாயத்து முடிந்து வீட்டுக்கு வருகிறார் சோலியப்பன். அவரது துணைவியார் சொல்கிறார். " இன்னக்கிச் சும்மாதானே இருக்கீக. வீட்டுமேல ஒரு பக்கத்து மொகட்டு சுவத்துல குருவிக எச்சம் போட்டதுல மொளைச்ச ஆலங்கண்ணு இடுப்புமட்டும் வளந்து செவரு வெடுச்சு நிக்குது. அதப் புடுங்கி எறிஞ்சாதான் என்ன?"

வேகமாய் சொன்னார் சோலி.
" போடி போடி போக்கத்தவளே வீடு போனா போகட்டும்"




குறிப்பு - நான் சிறுகதை மீது ஈர்ப்பு கொண்டதற்கு தீபம் முத்துவின் வேப்பங்கொட்ட சிறுகதை மிக முக்கியமான காரணம்,,,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...