புதுக்கோட்டை எழுத்தாளர் - 162
எஸ்.மோகன்ராஜ், கவிஞர் உன்னதன் என்கிற பெயரிலும் அறியப்படுகிறார். பிறப்பு - புதுக்கோட்டை அடப்பன்வயல், வடக்கு மூன்றாம் வீதி. தற்போது அரிமளம் சாலை, நியூ டைமண்ட் நகரில் வசிக்கிறார். தேனி மாவட்டம் துணை ஆட்சித் தலைவர் (வருவாய் )ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.உன்னதபுரம் கிழக்கு , இவரது முதல் நூல், நாவல். கேசவன், மீரா, தேன்மொழி ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு இலட்சியவாத கதையாக எழுதப்பட்டிருக்கும் நாவல். கேசவன் - மீரா ஆகிய பாத்திரங்களுக்கு இடையிலான நட்பு, முரண், பிரச்சனைகள் கவித்துவமாக சொல்லப்பட்டிருக்கிறது. தன் நிழலைத் தானே மிதித்து விடாதவாறு நடந்துகொண்டான். இது தேமல் பூக்கும் காலம். பசலை படரும் வாரம். இடைமெலிந்து நலியும் இரவுகள் . ஒரு தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தை சப்தமிடாமல் இருப்பதாலேயே அதற்கு உயிர் இல்லை என்று கருதிவிட முடியுமா? கண்ணியம் மனதிலிருக்க வேண்டும் . அப்பொழுதுதான் கைகளும் கண்களும் கட்டுப்படும். மனதில் அழுக்குகளைச் சுமந்துகொண்டு மாமனிதரைப் போல பாசாங்கு செய்யும் இவனுக்கு அப்பாவி போன்ற தோற்றம் தேவையா?, கனிவு காதலால் வரவேண்டும். கருணையினால் அல்ல,...போன்ற வரிகள் நாவலுக்கு சொற்சுவையும் அழகும் கூட்டுகின்றன. நாவலில் இடையில் உன்னதபுரம் கிராமம் குறித்தும் அவ்வூரிலுள்ள மனிதர்கள் குறித்தும் இழையோடுவதாக சொல்லப்பட்டுள்ளது. சேகர் ராஜா, கலியபெருமாள், சகுந்தலா, போன்ற கதாபாத்திரங்கள் இன்னும் விரிவாக எழுதப்படவேண்டிய கதாபாத்திரங்கள். மாயாண்டி கதாபாத்திரம் தேர்ந்த நல்ல பாத்திரப் படைப்பு. கோவிலில் தொடங்கும் இந்த நாவல் இதயக்கனியில் முடிவடைகிறது. புதுக்கோட்டையின் சமீப புதுவரவு இந்த நாவல்தான். எழுத்தாளருக்கு எனது வாழ்த்துகள்,,,

கருத்துகள்
கருத்துரையிடுக