முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலவர் யா.வென்னரசு

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 166


புலவர் யா.வென்னரசு,  சந்தப்பா வேந்தர். இவரது இயற்பெயர் யா.மரியசெயராசன், ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எந்நேரமும் கவிதை மனம் கொண்டவர். தனது மானசீக ஆசானாக மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களை ஏற்றுக்கொண்டவர். தனித்தமிழ் பற்றாளர். தனது இல்லத்திற்குப் பாவாணர் இல்லம் எனப் பெயர் வைத்தவர். 03.02.1975 இல் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்களால் பாவாணர் படத்தைத் திறந்து வைத்த பெருமைக்குரியவர்.  1969 இல் பாவாணர் பாசறை எனும் அமைப்பைத் தொடங்கி தனித்தமிழ்க் கொள்கை முழக்கம் செய்தவர். இந்தப் பாசறையில் கவிச்சுடர் கவிதைப் பித்தன், கு.மாரிமுத்து, மு. இளங்கோவன், வெள்ளிநிலவன், தனிக்கொடி, இளமாறன், கருணாநிதி, தமிழ்த்தும்பி தமிழ்மாறன்,நிலவை.பழனியப்பன்,மா.இலக்குவன், சுவாதீ,  முத்துகலா என்று பலரும் பங்காற்றியிருக்கிறார்கள். 18.9.1982 இல் கந்தர்வகோட்டையில் நடந்த ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடியிருக்கிறார்.

1980 இல் புதுக்கோட்டையில் இவரது கவியரங்கப் பாடலைக் கேட்ட உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் சந்தப்பா வேந்தர் என்று பாராட்டிச் சிறப்பித்தார். மீண்டும் அவரே 24.3.1991 இல் கரூர் திரு.வி.க மன்றம் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் சந்தக்கவிமுரசு என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். 1984 இல் புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சந்தக்கவிமணி என்று பட்டமளித்துச் சிறப்புச் செய்தது. 1983 இல் அமுத சுரபி மாத இதழில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் பகுதியில் திரு. குன்றக்குடி பெரியபெருமாள் அவர்கள் இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி பாவாணர் பாசறை பைந்தமிழ்ப் பட்டாடை , பாடும் கவிஞர் பலர் கூடும் மணியரங்கு,  நாடு மொழி இன உணர்வுக்காகப் பாடும் பாசறை, என்று எழுதிச் சிறப்பித்தார்.

புலவர் யா.வென்னரசு கவிதைகள் எனும் இக்கவிதைத் தொகுப்பு புலவரின் 58 ஆவது பிறந்த நாள் பரிசாக வெளிவந்தது.முழுக்க சந்தக் கவிகள்.  இத்தொகுப்பில் ஒரு கவிதை.

தலைப்பு - பொங்கல் விழா

புத்தரிசி நறுநெய்யும் பருப்பும் வெல்லப்
பாலுடனே மணப்பொடியும் சேர்த்துப் பொங்கும்
முத்தமிழர் தனிவிழாவாம் பொங்கல் நாளில்
மூத்தவர்கள் இளையவர்கள் யாரும் சேர்ந்து
புத்துணர்வில் பொங்கலோநற் பொங்க லென்று
பூரிக்கும் இன்பநன்நாள் பொங்கல் நன்நாள்
தித்திக்க அவையோரே வணக்கம் சொன்னேன்
தீந்தமிழன் பாட்டாலே வாழ்த்து கின்றேன்

வறுமையை ஒழிக்கின்ற மையம் நாட்டின்
வளமைக்கே ஒருமையம் வளர்ச்சி மையம்
பெருமையை வளர்க்கின்ற மையம், கல்வி
பெருக்குகின்ற ஒருமையம் அறிவின்மையம்
ஒருமையை ஊட்டுகின்ற உணர்வை நாட்டின்
உயிர்மெய்யாய் உரிமையாகும் உண்மை மையம்
ஒருமைக்கும் பெருமைக்கும் பெருமை சேர்த்த
ஒருமெய்யம் திருமெய்யம் இந்த மையம்

உலகத்தின் அச்சாணி உழவனென்று
ஒருமுகமாய் எல்லோரும் போற்றுகின்றோம்
நிலத்தினிலே இலைமக்கி மண்ணில் மண்ணாய்
நிலைப்பதுபோல் உழவர்களும் இருக்கின் றார்கள்
உலகத்தார் வயிறெல்லாம் நிரம்பு தற்கே
உழவர்தம் வயிறெல்லாம் காய வைத்தார்
உலகத்தில் வீடெல்லாம் சமைப்பதற்கு
உழவர்தம் வயிற்றினிலே நெருப்பை வைத்தார்.

-16.01.1988 இல் திருமயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தலைமையேற்றுப் பாடிய பாட்டரங்கத் தலைமைப்பா. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...