புதுக்கோட்டை எழுத்தாளர் - 163
குருபாததாசர். இவரது இயற்பெயர் முத்து மீனாட்சி. கவிராயர் என மக்களால் அழைக்கப்படுகிறார். சைவ வேளாளர். பிறந்த ஊர் அன்றைய சோழ நாட்டிற்குட்பட்ட புல்வயல் என்கிற சிற்றூர். இவ்வூரின் மலைமீது எழுந்தருளியுள்ள குமரேசன் எனும் முருகனை நூறு பாடல்களால் பாடியவர். இப்பாடல்களின் தொகுப்பு குமரேச சதகம். சதகம் என்றால் நூறு.இவர் முருகனைப் பாடிய நூறு பாடல்களின் கடைசி வரியை இவ்வாறு முடிக்கிறார். " மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு/ மலைமேவு குமரேச னே "
சதகம் பாடுவதற்கும் முன்னதாக பாடும் காப்பு பாடலில் குமரேசனைப் பாடுவதற்கும் முன்பாக ஊரைப் பாடுகிறார். இறைவன் குமரேசன் நூறு பாடல்களாலும் புலவர் பிறந்த ஊரான புல்வயலை நூற்றிரண்டு பாடல்களாலும் பாடியிருக்கிறார்.
இவர் பாடிய காப்பு பாடல்,
பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்தம்மேல்
தேமே வியசதகஞ் செப்பவே- கோமேவிக்
காக்குஞ் சரவணத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.
இங்கு பூ என்பது பூமி. புல் என்பது திருப்புல்வயல்.

கருத்துகள்
கருத்துரையிடுக