முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டையின் முதல் அச்சுத்தமிழ் எழுத்தாளர்.

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 170


புதுக்கோட்டையின் முதல் அச்சுத்தமிழ் எழுத்தாளர்.

தனியரசாக விளங்கிய இறுதி காலத்தில் புதுக்கோட்டை அச்சு மற்றும் பதிப்பகத்துறையில் முன்னணி வகித்தது.  இரண்டாம் உலகப் போரின் விளைவால் ஏற்பட்ட காகிதத் தட்டுப்பாடு பிரச்சனைகளைத் தீர்க்க உலக நாடுகள் கடைபிடித்த காகிதக் கொள்கையும் பேரரசுகள் மற்றும் சிற்றரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட காகித ஒதுக்கீடுகளும் இதற்குக் காரணம். புதுக்கோட்டை தனியரசுக்குட்பட்ட இராமசந்திரபுரம் தனியரசுக்கு மட்டுமல்ல, சென்னை மாகாணத்திற்கும் கூட அச்சுத் துறையின் தலைநகராக விளங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்திற்குட்பட்ட சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் பகுதிகள் திருமயம் ஒட்டியிருந்ததால் தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் எழுத்தாளர்கள் இராமச்சந்திரப்புரத்திற்குப் படையெடுத்து வந்தார்கள். இவ்வூரில் நூல்கள் அச்சாகி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கிறது. மேலும் குழந்தை இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள் புதுக்கோட்டையிலிருந்து அதிகம் வெளியாகின. புதுக்கோட்டை தனியரசில் இயங்கிய அச்சகங்களில் கார்த்திகேயினி அச்சகம், ஜனமித்திரன் பிரஸ், சுத்தநிலையம், வள்ளுவர் பதிப்பகம், செந்தமிழ் பதிப்பகம், அன்பு நிலையம் ஆகியவை மிக முக்கியமான பதிப்பகம் மற்றும் அச்சகங்களாகும். கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பெரும்பான்மை நூல்கள் அச்சிடப்பட்டது இராமச்சந்திரப்புரத்தில்தான். மேலும் பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு இங்கேதான் அச்சும் மறுமறு பதிப்புகளும் கண்டன.

தமிழ் அச்சின் முதல் நூல்

தமிழில் முதலில் அச்சுக்கண்ட நூல் என்கிற பெருமையைப் பெறுகிறது தம்பிரான் வணக்கம். இந்திய மொழிகளில் முதலில் அச்சு ஏறிய மொழி என்கிற பெருமை தமிழுக்கு உண்டு. ஆங்கிலமும் தமிழும் கலந்த மொழியில் இந்நூல் அச்சடிக்கப்பட்டது. DCCTRINA CHRISTAM  on LinguaMalauar Tamul என்று ஆங்கிலத்திலும் ‘காமபஞஞியதேசேசூ வகையிலணடிரிககிய பாதிரியா தமிழிலே பிரி ததேழுதின தமபிரான வணககம’ என்று தமிழிலும் அச்சிடப்பட்டது. அன்றைய தமிழ் எழுத்துக்களில் ஒற்று இடுவது வழக்கமில்லை. மலபார் தமிழில் இதன் பொருள் கிறித்தவ போதனை. அச்சிடப்பட்ட ஆண்டு 1578.  இதற்கும் முன்பு இதே நூல் அதாவது 1554 ஆம் ஆண்டு உரோமன் எழுத்துருவில் தமிழ் ஒலிப்பில் அச்சேறியிருந்தது. இவ்விரு நூல்களும் ஹார்வர்டு பல்கலைக் கழக நூலகம் ஹௌடன் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1578 ஆம் ஆண்டிலேயே தமிழ் அச்சு ஏறியிருந்த நிலையில் 1680 ஆம் ஆண்டு பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் தரங்கம்பாடியில்  1715 ஆம் ஆண்டு அச்சுக் கூடம் தொடங்கினார். பைபிள் போன்ற நூல்களைத் தவிர வேறெந்த நூல்களும் அச்சிட அன்றைய ஆங்கிலேய அரசு அனுமதிக்கவில்லை. 1835 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகே பிற நூல்களை அச்சிட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதி பிரிட்டிஷார் ஆட்சிப் பகுதிகளுக்கு மட்டுமே இருந்தது. அன்றைய புதுக்கோட்டை தனியரசாக இயங்கியதால் அச்சு உரிமையும் பதிப்பு உரிமையும் மறுக்கப்பட்டன. ஆனால் இரண்டாம் உலகப் போர் காலத்தின் போது அதாவது 1940 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புதுக்கோட்டை சென்னை நகரத்திற்கு நிகராக அச்சுத்துறையில் முன்னணி வகித்தது.

புதுக்கோட்டையின் முதல் தமிழ் அச்சு எழுத்தாளர்

புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களை கண்டறிந்து அவர்களை ஆவனப்படுத்தும் முயற்சியில் நான் இறங்கிய நாட்கொண்டு
புதுக்கோட்டையின் முதல் தமிழ் அச்சு எழுத்தாளர் யாராக இருக்கும் என்கிற தேடல் எனக்குள் இருந்துவந்தது. இதுகுறித்து தொடர்ச்சியாகத் தேடுகையில் புதுக்கோட்டையின் முதல் அச்சுத்தமிழ் எழுத்தாளர்  சாமி ஐயர் என்று தெரியவந்தது.

இவர் புதுக்கோட்டையில் பிறந்து நாகப்பட்டணம் ஜில்லா சீர்காழி தாலுக்காவில் முன்சீப்கோர்டு வக்கீலாக பணியாற்றியவர். இவர் எழுதிய ‘சங்ட்சேபபுஸ்தகம்’ எனும் இந்நூல் புதுக்கோட்டையில் பிறந்த ஒருவரின் முதல் தமிழ் நூல் என்கிற பெருமையைப் பெறுகிறது. இந்நூலின் பல சொற்கள் வடமொழியைக் கொண்டிருந்தாலும் எழுத்துருக்கள் தமிழைக் கொண்டது. இந்நூலை அச்சிட்டது சென்னபட்டணம் இஸ்காடிஷ் அச்சுக்கூடம். அச்சிட்ட ஆண்டு 1862. இந்நூல் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்நூலின் முதல் பக்கம் இவ்வாறு சொல்கிறது. இண்டியாவுக்கு உபயோகமாகும்படியான இங்கிலீஸ் லா- அப் – இவிடன்ச்யென்கிற ருசு சாஸ்திரத்தின் சங்ட்சேபபுஸ்தகம். இஃது நாகபட்டணம் ஜில்லா சீர்காழி தாலுக்கா முன்சீப்கோர்ட்டு வக்கீலாகிய புதுக்கோட்டை சாமி ஐய்யரால் எழுதப்பட்டது. லாவின் ஞானம் இக்காலையில் அநிவாரியமானது. லா – தெரியாதென்கிற நிமித்தத்திற்காக க்ஷமைகிடைக்காது.

1862 மார்ச் மாதத்தில் சென்னபட்டணம் இஸ்காடிஷ் அச்சுகூடத்தில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்திற்கு இனி காப்பிபோடுகிற பாத்தியத்தையும் தர்ஜ்மாசெய்கிற பாத்தியத்தையும் நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்நூலுக்கான முகவுரை இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

இண்டியாவுக்கு உபயோகமான இங்கிலீஷ் லா – புஸ்தகங்களில் எதையும் இங்கிலிஷில் பரிசயமில்லாத நேட்டிவ் வக்கீல்களுக்கும், சூடிசி யால் ஆபிசர்களுக்கும் உபயோகமாகும்படி இத்தேசத்தின் எந்தப் பாஷையிலும் பிரசித்தஞ்செய்யப்பட்டவில்லையென்று எனக்குத் தெரியவந்தபடியால், என்னுடைய படிப்பு மிகவும் சுவல்பமாகவிருந்தாலும் முக்கியமாய் ருசுசாஸ்திரத்தைக் குறித்துத் தமிழ்ப்பாஷையில் இந்த ஸங்கேஷப புஸ்தகத்தைச் சேர்த்தெழுத வணக்கமாய் எத்தனித்தேன்.  என்னுடைய பிரயாசையானது எத்தனைத் தூரம்உபயோகப்பட்டுதென்பதை உலகத்தார் தீர்மானிக்கவேண்டும். இந்தப் புத்தகத்திற்கு ஆதார மாகவிருக்கின்ற பிரபலமான இங்கிலிஷ் லா – புஸ்தகங்களை இது முழுதிலும் அவசரமாகவிருக்கின்ற இடங்களில் குறித்திருக்கிறேன். நான் இதை எழுதிப் பிரசித்தஞ் செய்ததைப்பற்றி உலகத்தார் தயவுடன் என்னை தைரியப்படுத்துகிறபக்ஷத்தில் இப்புஸ்தகத்தை இத்தேசத்தின் மற்றப் பாஷைகளிலும் தர்ச்சுமா செய்கிறேன். சேலம் ஜில்லாபிரன்சிபில் சதறமீனாகிய இரங்கசாமிபிள்ளையவர்கள் என்பேரில் பிரிதிவைத்து இந்தபுஸ்தகத்தை திருத்தியதும்தவிர இதைச் சேர்த்தெழுதியதைக் குறித்து முக்கியமான சில அம்சங்களில் எனக்கு ஆலோசனையும் சொன்னார்கள். அதற்காக அவர்களுக்கு நான் மிகவும் கிருதஞனாக விருக்கிறேன். இப்புத்தகம் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக ஆவன காப்பகத்தில் உள்ளது. 



கருத்துகள்

  1. அரிதின் முயன்று இந்நூலைக் கண்டறிந்து எழுதியுள்ள உங்களின் புலமை அக்கறை போற்றத்தக்கது. இனி எழுதுகிறபோது மேற்கோள்களுக்கு உரிய பக்கம்/ பக்கங்களின் எண்/எண்களைக் குறிப்பிட வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான செயலை முன்னெடுத்து ஆவணப் படுத்தும் சகோதரரின் பணி போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...