முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேங்கை ஆரோன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 173,

வேங்கை ஆரோன், ஆலங்குடிக்கும் அருகில் வேங்கிடக்குளத்தில் சின்னப்பன் - மரிய ஆரோக்கியம் இணையர்களுக்குப் பிறந்த ஒரே மகன். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி பணிநிறைவு பெற்றிருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு ஓய்வுக்குப் பிறகு கோயில் குளங்களுக்குச் சென்று பக்திப்பாடல்களாகப் பாடி காற்றை மென்படுத்தினார். அப்படியாக இவர் எழுதிய பாடல்கள் நூற்று ஐம்பதுக்கும் மேல். இவரது மருமகனார் விஞ்ஞானி ஆ.ஆபிரகாம் ஜோசப், பாடல்களுக்குப் பதிலாக கவிதைகளாக எழுதி நூலாக வெளியிடலாமே எனக் கேட்டுக்கொள்ள, இவரது கவனம் கவிதைகள் பக்கமாகத் திரும்பியது. சைவம், வைணவம், கிறிஸ்தவம் என்று பாடல் வடிவில்  கவிதைகள் எழுதினார். அப்படியாக இறைவனைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை நானூறு. அவற்றில் எழுபத்தைந்து கவிதைகளைத் தேர்வு செய்து மெல்லத் திறந்த மதகுகள் என்கிற தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், இவரது வரிகளை வானவில்லின் வர்ண ஜாலங்களாக ஜொலிக்கும் கவிதைகள் என்கிறார். இந்நூலுக்கு வாழ்த்துரை தந்திருக்கும் கவிஞர் ஆண்டனி அவர்கள், காலத்தைக் கடத்த உட்காருபவன் அல்ல, காலம் கடந்தும் நிற்பவன் கவிஞன்,  அந்த முயற்சியில் வெற்றிக்கொடி நாட்டுவார், என வேங்கை ஆரோன் மீது நம்பிக்கை வைக்கிறார்.மேலுமொரு வாழ்த்துரை தந்திருக்கும் கவிஞர் மகா.சுந்தர் அவர்கள், மெல்லத் திறந்த மதகுகளின் வழியே வெள்ளமென ஓடிய கவிதைகள் என்கிறார்.

எழுபத்து நான்கு கவிதைகளின் தலைப்புகளும் கவித்துவம். விலகாத உறவு, கண்ணியமிக்க காதல், மது மாது சூது, கைப்பேசி வேண்டாம் கண்ணே, நான் கண்ட கனவு, தேவகானம்,...என்று வசீகரமிக்கவை.

ஒவ்வொரு கவிதையும் சந்தக்கட்டுகளைக் கொண்டிருக்கின்றன. எதோ ஒரு மெட்டுக்குள் ராகத்திற்குள் வசப்படும் வரிகளாகின்றன.  முத்தாய்ப்பாக ஒரு கவிதை.

தலைப்பு - தாலாட்டு

இக்கவிதை இப்படியாக நம்மைத் தாலாட்டுகிறது.


கவிதைகள் கட்டி
கதைகள் சொல்லி
உன்னை ஆற்றவா

காட்டுக்குயிலைப்
பாடச்சொல்லி
மெட்டுக்காட்டவா

கெட்டி மேளம்
கொட்டச் சொல்லி
சேர்ந்து ஆடவா

மலரைக் கண்டு
புனைந்து கட்டி
உனக்குச் சூடவா

பிஞ்சு இதழில்
கெஞ்சு மொழியில்
கொஞ்சி மகிழவா

தொட்டில் இட்டு
ஆட்டிவிட்டு
சுண்டி இழுக்கவா

ஐந்து விரல்களில்
ஆழியிட்டு
கண்டு மகிழவா

சின்ன இடையில்
அரையாணிட்டு
ஜோராய் காணவா

நெற்றிப் போட்டு
வண்ணமிட்டு
முத்தம் சிந்தவா

உன்னைக் கண்டு
அழகு கண்டு
சுத்தி போடவா




தங்கக் கொலுசு
சலங்கையாட
ஆடி ஓடவா

அல்லிப் பூவே
ஆசையோட
தோளில் சுமக்கவா

கண்ணுக்குள்ளே
உன்னை வைத்து
ஒத்திக்கொள்ளவா

காலமெல்லாம்
நீயில்லாது
நானும் வாழவா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...