முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ். ஆரோக்கியசாமி

 புதுக்கோட்டை எழுத்தாளர் -174,

எஸ். ஆரோக்கியசாமி, பிறப்பிடம் - இராஜகுளத்தூர். தற்போது புதுக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வருகிறார். இளமைக் காலத்திலிருந்தே சமூக நீதிப் போராளியாக இருந்து வரும் இவர், அரசியலில் நீண்ட கால அனுபவம் பெற்றவர்.

உயிர்த்தெழுமா கம்யூனிசம் , மகாத்மா காந்தியோடு பெரியாரா? , பெரியார் பெரியாரா?, அரியணை ஏறிய பொய்கள், வர்ணம்-சாதி-தீண்டாமை இந்தியாவில் மட்டுமா?, அறவழிகாட்டும் ராமாயணம்,  மகாபாரதம் என நூல்கள் எழுதியுள்ளார். மேலும் சர்வோதயம் மலர்கிறது, தமிழர் எழுச்சி,  தமிழக அரசியல், அத்திப்பூ போன்ற இதழ்களில் தொடர்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தியோடு பெரியாரா? எனும் இந்நூல் இவரது ஆறாவது நூல். தமிழக அரசியல் இதழில் வாரம் இருமுறையாக வெளியான தொடரின் தொகுப்பு.

காந்தி சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய பெரியார், 1948 இல் காந்தி மதம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்றும் பேசினார். பிறகு அதை மாற்றி காந்தியம் ஒழிய வேண்டும். அப்போதுதான் இந்த தேசம் உருப்படும் என்றார். இப்படிப்பட்டவர்தான் பெரியார் என்பதை எடுத்துச் சொல்வதற்கே இந்நூல், என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

மகாத்மா காந்தியோடு பெரியாரா?, தமிழ்மொழியை நேசித்த காந்தியும் வெறுத்த பெரியாரும், பெண் விடுதலையில் காந்தியிடமிருந்து முரண்பட்ட பெரியார்,  பெண்களை இழிவுபடுத்திய பெரியார்,  கம்யூனிசம் காந்தியின் பார்வையும் பெரியாரின் பார்வையும், பெரியாரின் விமர்சனத்தில் தரமற்ற சொற்கள், மதங்களுக்கு எதிராக பெரியார், இந்தியாவில் புத்தமதம் வேரூன்ற முடியாதது ஏன்? இப்படியான தலைப்புகளின் கட்டுரை நூல் இது .

முதல் கட்டுரை கீழ்வெண்மணி பற்றி பேசுகிறது.

1968 டிசம்பர் 25 அன்று வெண்மணியில் 44 அரிஜனங்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இதில் முதல் குற்றவாளி இருஞ்சூர் நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு என்பது உலகுக்கே தெரியும் . இது எப்படி பெரியாருக்குத் தெரியாமல் போனது. அரிஜனங்கள் சாவுக்குக் காரணம் கூலி உயர்வுப் போராடிய கம்யூனிஸ்டுகள் என்றாரே பெரியார்.  அரிஜனங்களுக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்ட்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார் பெரியார். குற்றவாளிக் கூண்டிலிருந்து  கோபாலகிருஷ்ண நாயுடுவைக் காப்பாற்ற முயன்றார் பெரியார், இப்படியான பதிவுகளைக் கொண்ட இந்நூலுக்கு வாசகர்களின் மத்தியில் வரவேற்பும் உண்டு, எதிர்ப்பும் உண்டு.

பாபா பதிப்பகம் வழியே வெளிவந்திருக்கும் இந்நூல் காந்தி, பெரியாரை மறுபார்வைக்கு உட்படுத்துகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...