புதுக்கோட்டை எழுத்தாளர்கள் –
181
புலவர் எஸ்.பி.இராஜையா,
கீழநீலிதநல்லூர், சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம். பணியின் பொருட்டு கரம்பக்குடியில்
குடியேறியவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கரம்பக்குடியில் வசித்து வருகிறார். தலைமை
ஆசிரியராகவும், கல்வி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மரபுக்
கவிதை பாடுவதில் வல்லவர். திருக்குறள் பற்றாளர். திருக்குறள் சொல்லும் நன்னெறியின்படி
வாழ்ந்து வருகிறவர். அவர் வீட்டின் சுவரில் தினமும் ஒரு திருக்குறள் பொருளுடன் எழுதி
திருக்குறளை அறநெறியாகப் பரப்பி வருகிறவர்.
இவர்
எழுதிய ஒரு நூல் ஒளியேசு வெண்பா. இவரை ஆட்கொண்ட இயேசு பெருமானை எண்ணி, திருவிவிலியக்
கருத்துக்களையும் அவருள் எழுந்துள்ள ஆன்ம விடுதலை அனுபவத்தையும் வெண்பாவிற்குரிய இலக்கணத்தோடு
இந்நூலை எழுதியுள்ளார். இயேசுவின் மூலம் அடையும் ஒளி வாழ்வை யாவரும் அறிய பாவலர் எடுத்துள்ள
நற்செய்திப் பகிர்வு இது.
இத்தொகுப்பில்
ஒரு வெண்பா
நீதி
நிலைப்பாட்டில் நேர்த்தியாய் நின்றென்றும்
நீதிக்காய்
துன்புறுவோ் பேறுபெற்றா் – நீதியுடை
விண்ணரசின்
பேறு பெற்றார் விண்ணரசும் சொந்தமென
எண்ணுவார்
என்றார் இயேசு.

கருத்துகள்
கருத்துரையிடுக