முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறியாளர் தே. ஹெலினா

 புதுக்கோட்டை எழுத்தாளர் -178

பொறியாளர் தே. ஹெலினா, இயற்பெயர் - தே.ஹெலினா கிரிஸ்டோபர்,  புதுக்கோட்டையில் தேவசகாயம் -ஜீவமணி இணையருக்கு 16.12.1968 இல் மகளாகப் பிறந்தவர். பள்ளிப் படிப்பை சேலம், ஆத்தூர், புதுக்கோட்டை எனப் பல இடங்களில் முடித்தவர். 

தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தவுடன், திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார். இலக்கியத்தில் மதிப்புறு முனைவர் பட்டம்( Doctorate in Literature) பெற்றுள்ளார்.

மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக நுழைந்து 30 ஆண்டுகாலப் பணியில் செயற்பொறியாளராக உயர்ந்துள்ளார். திருக்குறள்மீது கொண்ட காதலால்
1. வள்ளுவம் கூறும் வாழ்வியல், 2.வள்ளுவத்தில் மனித மாண்புகள்,
3. வளம் பெற வள்ளுவ நாட்காட்டி,
4. உறவுகளின் உயிர்ப்பு,
5.குறளும், விவிலியமும், 
6. திருக்குறள் புதிய உரை ஆகிய ஆறு நூல்கள் எழுதியுள்ளார். 

குறள் இனிது யாழ் இனிது என்று ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார். குறள் கொண்டாட்டம் என்று 2016, 2018ஆம் ஆண்டுகளில் ஈரோட்டில் கல்லூரிகளில் விழா நடத்தி உள்ளார். சென்னை நாரதகான சபாவிலும் நடத்தியுள்ளார். ஊடகங்கள் வாயிலாகத் திருக்குறள் சார்ந்த பதிப்புக்களைப் பதிப்பித்துள்ளார்.

இவருடைய திருக்குறள் பாடல் இன்டர்நேஷனல் திருக்குறள் பவுண்டேஷன், மொரிஷியஸ் - இன் கருப்பாடலாக (Theme song) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரது நூல்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது தமிழ்ப் பணிக்காக 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். எங்கும் வள்ளுவம் என்ற நோக்கில் இவரது குறிக்கோளும் கொள்கையும் பயணித்து வருகிறது.

வள்ளுவம் கூறும் வாழ்வியல்' என்னும் நூலுக்குக் கருர் திருக்குறள் பேரவை இரண்டாம் பரிசும், பாரதி, பாரதிதாசன் கவிதைகள் அமைப்பு - 'திருக்குறள் சுடர்' விருதும், 'வள்ளுவமும் விவிலியமும் நூலுக்கு அக்கினிச் சிறகு தமிழ்ப் பேரவை, திருப்பூர் 'அக்கினிச் சிறகு சேவா விருதும்' வழங்கி கௌரவித்துள்ளன. புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம் 'திருக்குறள் வழி காட்டி' விருதும் ஈரோடு தமிழ்ச்சங்கம் 'திருவள்ளுவர் விருதும்', கல்லைத் தமிழ் சங்கம், கள்ளக்குறிச்சி 'குறள்மணம்' விருதும் வழங்கிக் கௌரவித்தன. 'உறவுகளின் உயிர்ப்பு' நூலுக்கு குறளகம், நாகர்கோவில் சிறந்த நூல் பரிசு வழங்கிக் கௌரவித்துள்ளது.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...