புதுக்கோட்டை எழுத்தாளர் - 183
முத்துரத்தினப் பாரதியார், புலவரேறு என்றும் மந்தமறைப் புலவரேறு என்றும் அழைக்கப்பட்டவர். மந்தமறைப் புரவரேறு முத்துரத்தினப் பாரதியார் என இவர் குறித்து பிற நூல்கள் பேசுகின்றன. இவர் இயற்றிய நூல் தேனீமலைப் பாமாலை.தேனீமலை புதுக்கோட்டையிலிருந்து மேற்கே 20 கல் தொலையில் உள்ளது. இவ்வூர் மலையின் மீது அமையப்பெற்ற முருகன் மீது பாடப்பட்ட 160 பாடல்களின் தொகுப்பு தேனீமலைப் பாமாலை.
பாயிரம், உறைவிடப் பதிகம், வருகைப் பதிகம், இலக்குமிப் பதிகம் , ஓமானைப் பதிகம், ஊழறுபதிகம், ஆனந்தக்களிப்பு என்று பல பகுதிகளைக் கொண்ட பாமாலை இது.
வினைபோக்குபவன். என் ஆவியாய் இருப்பவன், ஊழைத் தகர்ப்பவன் என
முருகனின் செயல்களை இவர் புகழ்ந்து பாடுகிறார்.
இந்நூல் குறித்தும் நூலாசிரியர் குறித்தும் தகவல் இந்தளவிலேயே கிடைக்கின்றன.


கருத்துகள்
கருத்துரையிடுக