முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா. முத்துநிலவன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 190

நா. முத்துநிலவன், இயற்பெயர் - முத்துபாஸ்கரன். பிறப்பு பட்டுக்கோட்டை.  34 ஆண்டுகள் தமிழாசிரியராக புதுக்கோடடையில் பணியாற்றி நிறைவு பெற்றவர்.  மச்சுவாடி சீனிவாச நகர் மூன்றாம் வீதியில் வசித்து வருகிறார். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர். 

கணினி தமிழ்ச்சங்கம் நிறுவியவர்.  #வீதி கலை இலக்கிய களத்தின் மூலமாக தொடர் இலக்கியப் பங்களிப்புகள் செய்துவருகிறார். 2015 ஆம் ஆண்டு வலைப்பதிவர் எழுத்தாளர்களைக் கொண்டு வலைப்பதிவர் மாநாடு நடத்தினார்.

புதுக்கோட்டையில் தமுஎச  கிளையைத் தொடங்கி முதல் செயலாளராகவும் பிறகு மாவட்டச் செயலாளராகவும்  களப்பணியாற்றியவர். புதுக்கோட்டை அறிவொளி இயக்கம் செயலாற்றிய காலத்தில் இவர் எழுதிய 'சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி' என்கிற பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்ததுடன் பெண்கள் பலரைச் சைக்கிளோட்ட வைத்தது. மேலும் இப்பாடல் பல மொழிகளில் மொழியாக்கம் பெற்றது. கணினி தமிழ்ச்சங்கம் நிறுவியவர்.  வீதி கலை இலக்கிய களத்தின் மூலமாக தொடர் இலக்கியப் பங்களிப்புகள் செய்துவருகிறார்.

 சிறுகதையாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், எழுத்தாளர், கவிஞர். இவர் எழுதிய 'அப்பொழுதெல்லாம்- இப்பொழுதெல்லாம் ' என்கிற கவிதை காலத்தை முன்னே பின்னே புரட்டிக்காட்டும் காலக்கவிதைகளில் ஒன்று. இக்கவிதையை இன்றைய தமிழக முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கோள் காட்டிப் பேசினார்.

இவரது முதல் படைப்பு  'புதிய மரபுகள்'
இந்நூல் சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான  என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம் விருது பெற்றது. மேலும் இருபதாம் நூற்றாண்டு  இலக்கியவாதிகள், நேற்று ஆங்கிலம் இன்று தமிழ், நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம் பேசுவோம், முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே,  கம்பன் தமிழும் கணினித் தமிழும், இலக்கணம் இனிது, நீட் தேர்வு, புதிய கல்வி யாருக்காக,  ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். கவிஞர் மு.மேத்தா வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.

இவரது இரண்டு சிறுகதைகள் அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றன.  குமுதம் இதழில் ஒரு சிறுகதை  வரலாற்றுச் சிறுகதையாகவும்  மற்றொன்று சாவியிலும் வெளியானது. நாடகப் பாடல்கள் எழுதியுள்ளார்.
இவர் இயக்கி நடித்த குழுதான் பிறகு   பூபாளம் கலைக்குழு ஆனது. பெயர்ச்சூட்டியவர் இவரே.

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! ( கல்விச் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுப்பு ) நல்ல கவனிப்பும் வரவேற்பும் பெற்ற நூல். இத்தொகுப்பிற்கான முன்னுரையில், 'உழைப்பும் கல்வியும் உலகை மாற்றும் பெரும் காரணிகள். உழைப்பைக் குறைத்து பயனைப் பெருக்கக் கல்வி உதவுகிறது' , என்கிறார். 

தினமணி, ஜனசக்தி, தீக்கதிர் உட்பட பல இதழ்களில் வெளியான பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விண்ணப்பித்து வாங்குவதா விருது? தமிழ்ப்பாடத்தில் அதிகத் தோல்விக்குக் காரணமென்ன? தமிழ்வழிக் கல்வியில் இருமுனைத் தவறுகள், எனக்கு என் மாணவன் தந்த நல்ல ஆசிரியர் விருது!, சமச்சீர்க் கல்வி அரசும் ஆசிரியர்களும் போன்ற கட்டுரைகள் இதில் முக்கியமானவை.

இத்தொகுப்பில்  'ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?' என்கிற முதல் கட்டுரையில் வகுப்பறையைக் கொலைக்களமாக மாற்றிவரும் கல்விக் கொள்கை, மதிப்பெண் மைய போக்குகள், கல்வியின் பாதிப்புகளில் ஊடகத்தின் பங்களிப்பு,.. என பலதையும் அலசியிருக்கிறார். 

வகுப்பறை கொலையை மகாபாரதப் போரோடு ஒப்பிட்டு எழுதியிருப்பது நல்ல ஒப்பீடு. போரில் அர்ச்சுணன் கர்ணனைத் தன் அம்புகளால் வீழ்த்துகிறான். கர்ணனைக் கொன்றது தானென்கிற குற்றவுணர்வு அர்ச்சுணனுக்கு மேலிடுகிறது. அவன்  கண்ணனிடம் புலம்புகிறான். கண்ணன் சொல்கிறான்,  கர்ணனைக் கொன்றது நீ மட்டுமா? இதற்குள் அவனது குருநாதர், இந்திரன் , அவன் செய்த புண்ணிங்களைத் துடைத்து வாங்கிய நான் உட்பட பலரும் இருக்கிறோம் என்கிறான்.

வகுப்பில் ஒரு மாணவனால் ஓர் ஆசிரியர் உமா கொலையானதற்கு யார் காரணம் என்பதோடு யாரெல்லாம் காரணமென  பட்டியலிடுகிறார்.  இக்கட்டுரையை வாசித்து முடிக்கையில்  ஷேக்ஸ்பியரின் ஜூலியட் சீசர் நாடகத்தில் சீசர் கேட்கும் 'நீயும் கூடவா புருட்டஸ்?' என்கிற கனம் பொதிந்த கேள்விக்கு 'நானும் கூடத்தான் சீசர்!' எனப் பதிலைச் சொல்ல வைக்கிறார்.

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, என்கிற கட்டுரை  மகளுக்குத் தந்தை எழுதும் கடிதமாக வரையப்பட்டுள்ளது. இக்கடிதத்தை வாசிக்கும் யாருக்கும் ஆபிரகஹாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வரும்.

தன் மகளுக்கு நீண்ட கடிதமாக  எழுதியிருக்கும் நா.முத்துநிலவன், இவ்வளவுதான் மகளே என கடிதத்தை முடித்தாலும் அக்கட்டுரை  கல்வியின் தற்காலப் போக்குகள் குறித்தும் மதிப்பெண் என்பதைத் தாண்டி கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் பேசுகிறது. 'சாதாரண மதிப்பெண்களோடும் அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே' என கட்டுரையை நிறைவு செய்கிறார்.

இக்கட்டுரையாகட்டும் மற்ற பிற கட்டுரைகளாகட்டும்.  சாதாரண மொழியில் எளிய நடையில் அசாதாரணமான கல்விச் சிந்தனைகளைப் பேசியிருக்கும் இத்தொகுப்பு  பற்பல பதிப்புகள் கண்டு வருகிறது. கல்வி மீது தாகம் கொண்ட  ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் இது !







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...